நூல் பெயர் : உயிர்வௌவல்
(கவிதைகள் )
ஆசிரியர் : ரகுநாத் வ
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 103
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
உயிரின் மீது அமரும் பறவைகள், மீண்டும் பறக்கத் தொடங்கும் பொழுது அதன் சிறகிலிருந்து உணர்வின் செல்களை உயிரின் மீது கொட்டி விட்டுச் செல்லும். அந்த உணர்வுச் செல்கள், ஊமையாகக் கிடக்கும் மனசுக்குள் உணர்ச்சிகளை ஏற்படுத்தி ஓராயிரம் கவிதைகளை எழுதச் சொல்லும். உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் உள்ள உறவு என்பது எழுத்துக்கும் கவிதைக்குமான நெருக்கமே. கொஞ்சம் கொஞ்சமாகப் பிரியும் தேய்பிறையைப் போலவோ, கொஞ்சம் கொஞ்சமாக விரியும் வளர்பிறை போலவோ குறுங்கவிதைகளும், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காலத்தின் பக்கம் காய் நகர்த்திச் செல்லும். இருப்பினும் கடைசியில் அதன் இலக்கை அடையச் செய்துவிடும் என்பதே இதன் தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான உணர்ச்சிகளை எல்லாம் குறுங்கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'உயிர்வௌவல்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனத்தில் உணர்வுச் சிறகுகளை உதிர்த்து விட்டுச் செல்லும் என்பதே இந்நூலின் பலம்.
மதுரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ரகுநாத்.வ அவர்களுக்கு இது முதல் நூல். பல்வேறு வார இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவர், 'பாரதி நூற்றாண்டு நினைவு' விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருப்பதுடன், படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.