அதுவொரு முகத்தை தேடுகிறது
இந்த வெறுப்பு மலர்ந்திருக்கிறது
வாழும் காதலைப்போல
துக்கித்துக்கொண்டு தன் களைப்பைக் கவனித்தபடி
அதுவொரு முகத்தை தேடுகிறது
அது தசையை தேடுகிறது
ஏதோ அதுவே காதல்போல
இந்த உலகியல் தசை மற்றும் பேசிய அந்தக் குரல்கள் மரித்துவிட்டன
சகலமும் அஞ்சி நடுங்கி ஒதுங்கியாயிற்று
சகல வாழ்வும் ஒரு குரலின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது
நாட்கள் செல்கின்றன
ஒரு வித சோகப் பெரு மகிழ்வில்
அந்த துக்க குரலின் வருடலில் அது திரும்புகிறது
மற்றும் நமது முகங்களின் குருதியை வடித்தபடி
இனிமை இல்லாமல் இல்லை
அந்த குரல் மனதிடம் வருகிறது களைத்துப்போய்
நடுக்கத்துடன் ஒருமுறை எனக்காய் நடுங்கிற்று
ஆனால் தசை நடுங்குவதில்லை
காதல் மாத்திரமே அதை ஒளிப்படுத்தமுடியும்
இந்த வெறுப்பு அதைத் தேடிப்பிடிக்கிறது
உலகின் உடைமை அனைத்தும் தசைகள்யாவும் குரல்கள்யாவும்
அவ்வுடல் மற்றும் கண்களில் எரிக்கும்
அணைப்புக்கு இணையாக முடியாது
அந்த கசந்த பெருவாழ்வில்
அது தன்னையே மாய்க்கிறது
இந்த வெறுப்பு இன்னும்கூட கண்டுபிடிக்கிறது
ஒவ்வொரு நாளும் ஒரு பார்வையை
ஒரு உடைந்த வார்த்தையை
பிறகு அவற்றை பற்றிக்கொள்கிறது
பசியுடன் காதலைப்போல
மூலம்: சேஸாரே பவேஸே