logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 381 - 400 of 838

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • திவ்யா ஈசன்

0   1078   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • தமிழ் தம்பி

0   1344   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • அன்பு அன்பு

0   1269   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • இயற்கைக்காதலி ரஞ்சினி

0   907   0  
  • November 2021

கவிச்சுடர் விருது

  • கோபி சேகுவேரா

0   2265   0  
  • October 2021

மாதாந்திர பரிசு

  • பெண்ணியம் செல்வகுமாரி

0   1769   0  
  • October 2021

மாதாந்திர பரிசு

  • நித்யா சபரி

0   915   0  
  • October 2021

மாதாந்திர பரிசு

  • சுமைல் ஹரீஸ்

0   919   0  
  • October 2021

மாதாந்திர பரிசு

  • தங்க.ஜெயபால்(ஜோதி)

0   1408   0  
  • October 2021

மாதாந்திர பரிசு

  • ஷப்ரா இல்முதீன்

0   834   0  
  • October 2021

மாதாந்திர பரிசு

  • அலர்மேல்மங்கை

0   836   0  
  • October 2021

மாதாந்திர பரிசு

  • R. பால கணேஷ்

0   1127   0  
  • October 2021

கவிச்சுடர் விருது

  • ப.தனஞ்ஜெயன்

1   1842   0  
  • September 2021

இலக்கியச்சுடர் விருது

  • கோ லீலா

0   2082   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • சம்பத் கிருஷ்ணகுமார்

0   1255   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • துளசி வேந்தன்

0   965   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • ம.இராதா

2   1196   1  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • அலர்மேல் மங்கை

0   1424   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • பிரபா அன்பு

0   880   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • அறிவுச் செல்வன்

0   1139   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

திவ்யா ஈசன்

View

மாதாந்திர பரிசு

தமிழ் தம்பி

View

மாதாந்திர பரிசு

அன்பு அன்பு

View

மாதாந்திர பரிசு

இயற்கைக்காதலி ரஞ்சினி

View

கவிச்சுடர் விருது

கோபி சேகுவேரா

கவிச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்
==================================
படைப்பாளி கோபி சேகுவேரா அவர்கள் இதுவரை இந்த குழுமத்தில் எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் கவித் திறனை போற்றும் வகையில் அவருக்கு இந்த மாதத்துக்கான "கவிச்சுடர்" விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.

அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...

இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப் படுவதுடன் ஒரு ஆளுமை மிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...

வாழ்த்துக்கள் கவிச்சுடர் கோபி சேகுவேரா 

ஒரு மகிழ்ச்சியான செய்தி....

இனி இந்த கவிச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்தல் அவசியமாகிறது. 

கவிச்சுடர் கோபி சேகுவேரா – ஒரு அறிமுகம்
***********************************
பெயர்: கோபி சேகுவேரா  

வசிப்பிடம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புனல்வாசல் 

பணி: கட்டட பொறியாளர்

படித்தது: B.E ( civil), 

படித்துக் கொண்டிருப்பது:
**********************
சம கால இலக்கியம், அரசியல்

இலக்கு/முயற்சி/கனவு: 
**********************
பள்ளிப் பருவத்திலிருந்தே சாதி சாபங்களுக்கு பதில் தேடித் திரிந்த நான்... புத்தக வாசிப்பினால் பகுத்தறிந்து... கேள்வி கேட்க தொடங்கினேன். கடவுள் மறுப்பாளனாய் தொடங்கிய என் பதின்பருவம்... வாசிப்பை தன்வசப்படுத்தி அதன்மூலம் எழுத தொடங்கினேன். எழுத்தின் மூலம் யாரும் சொல்லப்படாத எழுதப்படாத பொதுபுத்தியின் மனசாட்சியை நொறுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். 

இயல்பு: 
**********
எழுத்துக்களில்.... அரசியல்.... அநியாயம் கண்டு எதிர்க்கும் ரௌத்திரம்... எல்லாவற்றுக்கும் அடிப்படையான காதல். 

எழுதத் தொடங்கியது: பள்ளி நாட்களில்‌ இருந்து

பெருமிதம்: 
****************
'கார்முகி' எனும் என் முதல் கவிதை தொகுப்பு படைப்பு வெளியீடாக 2020 ல் வெளி வந்தது.


அவரது படைப்புகள்:
******************
கார்முகி  

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வெளி வந்த இதழ்கள் மற்றும் இணைய தளங்கள்:

கவிதைகள்:
***********
ஆனந்த விகடன்.... கணையாழி.... மற்றும் கொலுசு, காற்றுவெளி, படைப்பு கல்வெட்டு என இலக்கிய மின்னிதழ்கள் 


கவிச்சுடர் கோபி சேகுவேரா அவர்களின் கவிதைகள் பற்றிய ஆய்வு:
****************************************************
கோபி சேகுவேரா இளம் கவிஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவர். ஒவ்வொரு கவிதையிலும் மாற்றத்தை முன்னெடுப்பவர்.
சமகால அரசியல் குளறுபடிகளை பகடி செய்யும் பக்குவம் வரிகளில் இருக்கிறது. பதபதைக்கும் தனிமனித ஒழுக்கத்தை அடிக்கோடிட்டுக் கொண்டே செல்வது கோபியின் தனித்துவம். கோபியின் எழுத்துக்களில்.... அரசியல் அதிகம். அநியாயம் கண்டு எதிர்க்கும் ரௌத்திரம் அதிகம். எல்லாவற்றுக்கும் அடிப்படையான காதலும் அதிகம். "என் தேசம் எங்க போகுது.....என் தேசம் எங்க போகுது"ங்கிற பரிதவிப்பு இவர் எழுத்துக்களில் ஏராளம். சாதிக்கு எதிரான ஒவ்வொரு கவிதையிலும் நிதர்சனத்தை கொட்டும் கோபி சேகுவேரா கடந்த 5 ஆண்டுகளாக எழுதி எழுதி தன் கருத்துக்களை பட்டை தீட்டிக் கொண்ட பிறகு தான்... தன் முதல் நூலான "கார்முகி" வெளி வந்திருக்கிறது.  

சிறு வயது முதலே எதிர்ப்பு குணம் கொழுந்து விட்டெரிய... சாதிய வன்மத்துக்கு எதிராக எழுதுகோலை ஆயுதமாக்கி கொண்டார். உரிமைகளை மீட்டெடுக்க வர் எடுத்துக் கொண்ட வழி கவிதை. இந்த சமூகத்தின் மீதான பார்வையை கவிதை எனும் பேராயுதம் கொண்டு அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாமல்... தனது எல்லா கேள்விகளுக்கும் கவிதைகள் மூலமாகவே பதிலும் தேடும் படைப்பூக்க மனநிலை எப்போதும் புது ரத்தத்தோடு இருப்பது தான் இவரின் பலம்.

தைரியத்தின் வழியே வெளிப்படையாக பேசும் உண்மையின் குரல் இவருடையது. அநீதிக்கு எதிராக எரியும் நெருப்பு எப்போதும் கனன்று கொண்டே இருக்கும் எண்ணங்களுக்கு சொந்தக்காரர். கடைசி மனிதனுக்கான கைத்தாங்கல் இவருடைய கவிதை. ஜனநாயகத்தின் வழியே நல் அரசியல் பேசும் தீர்க்கம் உடையவர். தெளிவான தொலை நோக்கு பார்வை கொண்டவர். தொடர் வாசிப்பாளர். நவீனத்துவத்தின் வழியே சொற்கள் கண்டெடுத்து புது மொழியை மீட்டுவதில் வல்லவர். எள்ளல் தொனி நக்கல் நையாண்டி என்று பகடியில் போட்டு தாக்கும் இவரின் கவிதைகள் உரிமை மறுப்புக்கு எதிரான முழக்கம்.

இன்னும் இன்னும் புது புது முயற்சிகளில் தொடர வேண்டும் படைப்பாளி கோபி சேகுவேரா அவர்களின் படைப்பின் பயணம். 

இவரது இந்த கவிதை பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் "கவிச்சுடர்" என்னும் விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.

படைப்பில் வெளியான அவருடைய சில கவிதைகள் - இதோ உங்களுக்காக.

நேற்று மாலை டீ கடைக்கு சென்றபோது
ஆர்கானிக் முட்டை போண்டாவை பற்றி கேட்டறிந்தேன்
ஒரு தத்துவத்தை ஃபேண்ட் பாக்கெட்டிலிருந்து
தவறவிட்ட இடைவேளையில்
நாட்டுச்சக்கரையின் கிருபையால்
மீண்டும் ஆர்கானிக் என்கிற வார்த்தை
என் வாழ்வின் பிளாஸ்டிக் பைகளோடு சிக்கிக்கொண்டிருந்தன
பேப்பர் கப்பின் உள்ளிருந்து எழுந்த வந்த குரலுக்கு
ஆர்கானிக் பாலுக்கென்று 
பிரத்யேக வடிவம் ஏதும் தெரியவில்லை 

அனேக இரவுகளில் 
ஆர்கானிக் பற்றி நிறைய மனப்பாடம் செய்துகொண்டேன்
மெய்மறந்து மதுவருந்திய மாலைகளில்
ஆர்கானிக் பூண்டு மிக்சரை தேடி அலைந்திருக்கிறேன்
ஒரு தனித்த மழை நாளில்
கேரிபேக்கில் வாங்கி வந்த ஜிலேபியில்
ஏதேனும் ஆர்கானிக் இருக்கிறதா என்று
சுயபரிசோதனை செய்துகொண்டேன்

சௌகர்யமாக இருந்தவனுக்கு
உடலின் ஊழி எழுந்திட
தலைமேல் இன்று பொசுக்கென்று ஏறிக்கொண்டது
கொம்பூதிய ராஜகிரீடமாய்
ஆர்கானிக் காதல்


****

வியாழக்கிழமை தோறும் 
வாட்ஸ்அப்-ல் வலம்வரும் சாய்பாபாவை
வாரம் முழுவதும் ஒளித்துவைக்க
உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது

பின்னணியில்
அனிருத்தை அலறவிட்டபடி
பட்டர் பிஸ்கட்டின் ரம்மியம் பூக்க
அவரிடம் 
ஒரு தேனீர் அருந்தலாமா என்றேன்

மொபைலை கீழே வைத்துவிட்டு
பட்டர் பிஸ்கட்டை எடுத்துக்கொண்டவர்
ப்ளக் பாயிண்ட் எங்கு இருக்கிறது என்று கேட்டார்

அவர் இன்னும் 
ஒரு வாரக் காலம் ஓய்ந்தமர வேண்டுமல்லவா?


***

எப்போதும் யூ-டியூபில் 
இரவோடு இரவாக உருச்சிதைந்து போகும் எனக்கு
அடியோடு பெயர்த்துக் கொண்டுபோய்விடுகிற
கட்டாயமாக கால்களை பிடித்து மல்லாத்திவிடுகிற
கண்களை மூடிக்கொண்டு ஊஞ்சலாட்டிவிடுகிற
வாழ்வு இனித்துச் சொட்டுகிற 
சில நிமிடங்கள் அடிக்கடி நிகழ்ந்துவிடுவதில்லை

சொல்லப்போனால் 
தரதரவென இழுத்துவரப்பட்டு
தாளத்தோடு இசைந்துகொண்டிருக்கிறேன்
கமறும் குரலோடு 
மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கிறேன்
கடைசி பாக்கெட்டின் கடைசி சிகரெட்டின்
ஆசுவாசத்திற்கிடையே 
ரகசியம் சொல்வதைப்போல 
கரகரத்த குரலில் பாடிக்கொண்டிருக்கிறேன்

'வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம் நிலை இல்லாமல் தவிக்குதடி'
எப்போது வேண்டுமானாலும் இசைஞானி 
இப்படி சொக்கும்படி ஏதாவது செய்துகொண்டிருப்பார்

'இன்னும் என்னை வெகு.....தூ.......ர......ம் கூட்டிச் செல்லடி'
திகைத்து முழித்து பார்க்கிறேன்
அவர் கூட்டிச் செல்ல
யூ-டியூபில் சடைத்துவிட்டதொரு பெருவெளி


****
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

பெண்ணியம் செல்வகுமாரி

View

மாதாந்திர பரிசு

நித்யா சபரி

View

மாதாந்திர பரிசு

சுமைல் ஹரீஸ்

View

மாதாந்திர பரிசு

தங்க.ஜெயபால்(ஜோதி)

View

மாதாந்திர பரிசு

ஷப்ரா இல்முதீன்

View

மாதாந்திர பரிசு

அலர்மேல்மங்கை

View

கவிச்சுடர் விருது

ப.தனஞ்ஜெயன்

கவிச்சுடர் ப.தனஞ்ஜெயன்
....................................................
நமது படைப்பு குழுமம் மாதந்தோறும் அளித்துவரும் சிறந்த கவிஞர்களுக்கான "கவிச்சுடர்" விருதினை இந்த மாதம் சிறந்த படைப்பாளியும், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ப.தனஞ்ஜெயன் அவர்களுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறது!

கவிஞர் ப.தனஞ்ஜெயன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுவை மாநிலம் ஏம்பலம் எனும் கிராமம். படைப்பு குழுமத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இலக்கியத்தில் தனக்கென்று தனி தடம் பதித்து வருகிறார்.

புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் இளநிலை அறிவியல் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்ட மேற்படிப்பை முடித்து, பத்து ஆண்டுகளுக்கு மேல் தனியார் தொழிற்சாலையில் அறிவியல் பிரிவுகளில் பணிசெய்தார்.பிறகு சமூகத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் விவசாயத்தில் தடம் பதித்து வருகிறார்.

கவிஞரின் "அமைதியைத் தேடி","முழு இரவின் கடைசித் துளி "என்கிற கவிதைத் தொகுப்பும் "சிவனான்டி" என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

இதனையடுத்து "நிசப்தம் விழுங்கும் காடுகள், கடவுளின் பிரார்த்தனை மற்றும் கருவறை சுவர்கள்"என்கிற மூன்று கவிதை நூல்கள் வெளி வரவிருக்கின்றன!

படைப்பு கல்வெட்டு,படைப்பு தகவு ,ஆனந்த விகடன்,கணையாழி,பேசும் புதிய சக்தி, காக்கை சிறகினிலே,இந்து காமதேனு, காணிநிலம், நடுகல்,ஆவநாழி,கொலுசு,காற்றுவெளி என பல்வேறு பத்திரிக்கை மற்றும் சிற்றிதழ்களில்  இவரது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் இடம் பெற்று கவனம் பெற்றுள்ளது.

கவிக்கோ அப்துல் ரகுமான்,பாப்லா நெரூதா,மகாகவி பாரதி மற்றும் மலையாள கவிஞர் சச்சிதானந்தன் ஆகியோரின் எழுத்துக்களே தான் கவிதைகள் எழுதக் காரணம் என்று சொல்லும் கவிஞருக்கு பிடித்த நூல்கள் : .பசி, பாரபாஸ், கோபல்லபுரத்து மக்கள், தண்ணீர், ஆலிலையும் நெற்கதிரும், பால்வீதி கவிதை நூல்.

அவரது கவிதைகள் அனைத்தும்,அதீத கற்பனை, நவீனத்துவச்சூழல், ,காதல், உருவேற்றம், இயல்பு, வாழ்க்கை  தினசரி உலகின் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும், பால்ய நினைவுகள், முற்போக்கு சிந்தனை, உயிர் நேயம், குறித்த கவிதைகளையும் நிறையவே எழுதி வருகிறார்.

முகநூலில், படைப்பு குழுமத்தை மிகவும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் தொடர்ந்து நேசித்து எழுதிவரும் கவிஞர்.இப்போது நமது படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதினையும் பெறுகிறார் என்பதில் படைப்புக்குழுமம் பெருமிதம் கொள்:கிறது.

இனிய வாழ்த்துகள் கவிச்சுடரே!

இனி கவிஞரின் சிலக் கவிதைகளை காண்போம்.....

காலத்தின் சுழற்சியில் தூசிகள் கோள்களாகவும் கோள்கள்: கிரகங்களாகவும் பயணிக்கின்றன... வாழ்க்கையின் சுழற்சியில் பிறப்பும் இறப்பும் நியமிக்கப்பட்ட விதியாக மாறுகிறது. காலத்தின் மீது நாம் பயணிக்கிறோமா? அல்ல்து காலம் நம் மீது பயணிக்கிறதா? கேள்விகளூடே கற்பனைத்தொட்டு நகரும் ஓர் கவிதை!

இருளின் அகாலத்தில்
வெளிச்சத்தின் ரேகைகள்
மிச்சமிருக்கிறது

இருளின் ஊடேயிரங்கும்
விண்மீன் தடயத்தை
விழுங்கி நகர்கிறது இருள்

நிலவு படகு கால நதியில்
திசை மறந்து சூரியனின்
மற்றொரு முகமாய் மலர்கிறது

அணுக்களின் துயிலற்ற பயணத்தில்
ஆழமான மௌனமாய்
நிலவு பூ பூக்கிறது பூமியெங்கும்

நிலவும் சூரியனும் பூத்துக்கொண்டேயிருக்கும்
சூனிய சக்கரத்தில்
பிறந்து பூத்திருக்கிறது
பிறப்பு

இறந்து பூத்திருக்கிறது
இறப்பு
மலர காத்துக்கொண்டேயிருக்கிறது
உயிரெனும் மலர்.

*******************************
காலத்தோடு பேசுவது கவிஞருக்கு பிடித்திருக்கிறது. காலமும் அவரை விட்டு நகர மறுக்கிறது.. காலமும் ஒரு போதைதானோ! 

வாழ்தலே பெரும் போதை
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

சில இடங்களுக்குச் செல்கிறோம்
சிலரைச் சந்திக்கிறோம்
சிலவற்றை ரசிக்கிறோம்
சிலவற்றை வெறுக்கிறோம்
மனிதர்களுக்கான
இடைவெளியை
இறுக்கமாக
அணைத்துக்கொள்கிறது
காலம்
காலத்திடம் நம்மால்
எதுவும் பேச முடியவில்லை
மௌனமாக நம்மோடு
பேசுகிறது காலம்
பெருங்கடல்
மண்
பெருமலைகள்
சிறுமலைகள்
குன்று
மரங்கள்
காதலோடு கேட்கிறது
காலத்தின் குரலை
தினந்தோறும்
இரவில் விண்மீன்களை வாசித்து
காலமதுவை ஊற்றுகிறது காலம்
இரவு பகல் என்ற பெரும் மதுவை
மகிழ்வோடு உண்கிறது
அணுக்கள்
அணுக்கள் சிதைந்து
நூற்றாண்டின் குரலைக் கடந்து
குடிக்கிறது காலமதுவை
காலமது வழிகிறது
முழு ரசனையோடு
உயிர்கள் முழுவதும்.

 *****************************
நம்பிக்கயற்ற பயணமாய் மாறிப் போகிறது இக் காலத்தின் மீது பயணிப்பது! அதிகாரம் படைத்தவனின் அ\சைவுகள் அதிகாரமற்றவனின் குரலை நெறிக்கிறது. சப்தம் போட்டு கேட்க வேண்டியவை சப்தமில்லாமல் முடங்கிப் போகின்றன! இதோ ஒரு அதிகாரமற்றவனின் குரலாய் இக்கவிதை!

ஆயிரக்கணக்கான இன்றைய மரணங்களின் இசை
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

முகம் தெரியாத 
முடிச்சிட்ட கபால குரலின் அதீத வெடிப்பு
நடனமில்லாத பெரும் வாழ்வின்
கால குரல்
அள்ள அள்ளக் குறையாமல்
எரியும் நெருப்பு பேச்சு
ஊடகங்களில் தொலைந்து போய்
கண்சிமிட்டும் தணல் எழுத்து
திசைதோறும் தடுமாறும்
பிண நதி
உறவுகளின் சடங்குகளற்ற
மண்ணின் உபசரிப்பு
தசையும் எலும்பும்
எரிந்தும் அரித்தும்
உணர்வுகளின் மையத்தில்
முடிச்சவிழும் பயணங்கள்
இந்த நூற்றாண்டின் பெரும் சாபம்
எந்த நூற்றாண்டு அரசனின் பாவச்செயல்
கர்மாவாக  எரியும் நெருப்பில்
நாற்றிசையில் சருகுகளாய் வீழும் மனிதர்கள்
வேடிக்கை பார்க்கும் கண்களிலும்
நாசியிலும் ஓர் மௌன திரை
ஸ்தம்பித்த ஓட்டத்தில் கேட்காமலேயே நீண்ட ஓய்வு
உயிரோடு இருப்பதை தொட்டுணரும்
நம்பிக்கையற்ற காலக்கெடு.

 ******************
சிலவற்றை கோடுகளால் வரைந்து குறிப்புகளால் எழுதிவிடலாம்! சிலவற்றை வரையவே முடிவதில்லை! கவிஞரும் ஈரத்தை வரைய சிரமப் படுகிறார்.. இந்த ஈரம் உள்ளத்தில் துளிர்க்கும் அன்பாக இருக்கலாம்!

கருமேகங்களைக் காட்டி
மழையை வரைந்துவிட்டேன்
சூரியனைக் காட்டி
வெப்பத்தை
வரைய முடியவில்லை
என்னால்
பறவையைக் காட்டி
இறகினை வரைந்துவிட்டேன்
இறகினை காட்டி
பறத்தலையும் வரைந்துவிட்டேன்
காற்றை வரைய முடியவில்லை
என்னால்
கடலைக்காட்டி
நீரை வரைந்துவிட்டேன்
கடலின் சுவையை
வரையமுடியவில்லை
என்னால்
ஈரத்தை வரைய
நம்மால் முடியும்
என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
******************
கவிஞரின் இன்னமும் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு:


சேரன் தெரு
சோழன் தெரு
பாண்டியன் தெரு
எனப்பெயரிட்ட தெருக்களில்
பிச்சைகேட்ட பிச்சைக்காரன் ஒருவனுக்கு
சல்லிக்காசு கூடத்தேறவில்லை
பொருத்து கொண்டே
நான்காவது தெருவினுள் நுழைந்தவனுக்கு
கொஞ்சம் கூட
சாப்பிட உணவும் கிடைக்கவில்லை
அந்த நான்காவது தெருவின் பெயர்
வள்ளலார் தெரு
சிரித்துக்கொண்டே பெயரற்ற தெருக்களில் நடந்தான் அவன்.

 **************************
மண்வாசனை
−−−−−−−−−−−−−

அழகான பேருந்து பயணத்தில்
ஒவ்வொரு ஊரின் பெயரிலும்
ஒரு வரலாறு இருப்பதை
தாத்தா சொல்வார்
ஒவ்வொரு ஊரின் பெயரும்
அப்படியேதான் இருக்கிறது
கங்கை கொண்ட சோழபுரம்
மணல் மேடு என்று
வளங்களைத்தான் காணோம்
துயரமான
பேருந்து பயணத்தில்
நெஞ்சத்தோடு
காற்று கிழித்து
நீர் வழிந்தது தாத்தாவின்
கண்களில்
சில ஊர்களுக்குப்பிறகு
அவர் நிறுத்தம் வந்தது
நெடுவாசல் நெடுவாசல்
எனக் குரல்கள் கேட்டது
அடைக்கப்பட்ட இதய வாசலோடு
வானத்தைப்பார்த்தவாறே
இறங்கினார் தாத்தா
தாத்தாவின் சொந்த ஊரின் மண்வாசனையை
எடுத்துச்சொல்ல வானம்
மட்டுமே இருந்தது
வழித்துணையாய்!

 *******************

கல்லறை வாசம்
−−−−−−−−−−−−−−−

மனதில் சொட்டும் வார்த்தைகளுக்கு முன்
மண்டியிட்டுக் கிடக்கும்
நிமிட தூரங்களின்
சுனை வீழ்ச்சியாய் நகர்ந்து
ரத்த முடிச்சுகளின் வழியாய்
நிமிர்ந்து பாயும் கால முட்களே
காலத்திலிருந்து பிரிந்து
அவிழ்ந்த சுவடுகளின்
ரகசியத்தில் ஊறும்
பெருங்கிணறாய் உடல்
திணறி எழும் வார்த்தைகளும்
நிலவின் முத்தங்களில்
எரிந்து வழியும் சமவெளியில்
ஒரு ரத்த மௌனம்
கால முட்களில் சவாரி செய்து
மரண ஊற்றில் நனைந்தெழும்
ஆழமான தீராத சுடராய் உயிர்
எரிந்து அடங்கும் எரிகல்லின்
துயரத்தில் புத்துயிர் பெறும்
பிரபஞ்ச கணத்தில்
நடுங்கி அணைந்து செரிக்கும்
ஊற்றுகளின் குரல்.

 ********************

இந்த சாலை எங்குச் சென்று முடியும்
என்று கேட்டான் ஒருவன்
கூட்டத்தின் அருகிலிருந்த
பைத்தியக்காரன் சொன்னான்
கல்லறையில் முடியுமென்று.

*******************************

காதல் செய்
கவிதை எழுது
நீண்ட தூரம் நடந்து செல்
வெப்பத்தை உணர்
நெற்றிப்பொட்டில்
முத்தமிடு
மழையில் நனை
மண் வாசம் கற்றுக்கொள்
பொக்கை கிழவியுடன்
கூடிப்பேசு
நரை மேகத்தின்
உருவங்களை ரசி
திண்ணையில் அமர்
குழந்தையின்
பார்வையில் விழு
நெருக்கடி காலங்களில்
மனிதர்களை சந்தி
நலம் விசாரி
அன்பு கொள்
தேடித்தேடி நேசம் வளர்.

 *********************
பிரபஞ்சத்தின் கணங்கள்
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பூமி சதைகளில் ஒரு மௌன அதிர்வு
சுழலும் அச்சில்
ஒரு ஆழமான புன்னகை
அதிசயமான உடல் இசை
தட்டாய் சுழல்கிறது
நீர் தெறிக்கும் இசை மோதி மடிகிறது உடலெங்கும்
பூமித்தாயை பிளக்கும்
விதைகளில் இருக்கிறது
பச்சை சதையுதடு
பூமி இருள் குடித்து
பகல் அருந்தி வழிகிறது
மணித்துளிகள்
சாயை கோடுகளில் புறப்பட்டு
நடந்து செல்கிறது பூமி
துணைக்கு சில கோள்களின்
ரீங்காரம்
கோள்களைப் பெற்றெடுத்த
கருவறையா பிரபஞ்சம்
மனித மனதில் எரிகிறது
பிரபஞ்ச விளக்கு
மாயை எண்ணெய்யானது
சாயை திரியானது
இரண்டும் கலந்து மனித உயிரானது
கடந்து செல்ல முனையும்
கோள்களை
கட்டிவைத்துள்ளான் மனிதன்
மனக் கயிற்றைக் கழட்டி எரிந்தால்
ஒளியின் தூரத்தில் தெரிகிறது
முத்திரை
மனித மூச்சில் வழிகிறது
அணுதானியம்
அணுக்களைக் குடித்து   மகிழ்கிறது
வெகுதூரத்தில் கருந்துளை.

***********************

அழகான இரவிற்கு
அற்புதமான இசையைத்
தவளைகள் பாடிற்று
க்ராக் க்ராக் இசை
மேற்கத்திய இசையை விட
லயமானது இரவு
சூனியமான நிலவொளியில்
நேற்று பெய்த ஓயாத மழையின்
சிலிர்ப்புகள்
மின்மினிகளின் ரீங்காரத்தில்
இன்னும் அழகு கூடியது மழை இரவு
சட்டென்று
தலை தூக்கிய பாம்பிற்கு
குழப்பம்
எந்த தவளை கத்துகிறது
எதைப்பிடிப்பது எனத் தள்ளாடியது
தனித்து தவளை வரும் வரை
காத்திருந்தது
மீண்டும் இரவு மழை
மழைக்காலம் முடியும் வரை
தவளை தனித்திருக்கவில்லை
தூரல் இடைவெளியில்
தார்ச் சாலையில் தனித்துச் சிக்கியதவளையைக் 
கவ்விக்கொண்டு
இரை விழுங்குகிறது
பாம்புகள்
தன் கூட்டத்திலிருந்த தவளை
ஒவ்வொன்றாக
வேட்டையாடப்பட்டது தெரியாமல்
மீண்டும் இசைக்கிறது
மீண்டும் பாடுகிறது
தவளைக்கூட்டங்கள்.

 ********************

கடற்கரைக்குச் சென்றேன்
அமைதியாக இல்லை கடல்
பேசிக்கொண்டேயிருக்கிறது
அலை
மணல் துகளில் காலத்தை மீட்டுக்கொண்டு
நரைக்காமல் இசைக்கிறது அலை
ராட்சஸ அலை ஒன்று
மிரட்டிப்போகிறது அவ்வப்பொழுது
எத்தனையோ மனிதர்கள்
வந்தார்கள் போனார்கள்
அனைவரிடமும் பேசிக்கொண்டேயிருந்தது அலை
சற்று யோசித்துவிட்டு
என் அமைதியைக் கடலிடம் கொடுத்துவிட்டு
கடலின் ஓயாத அலையை
நான் எடுத்துக்கொண்டேன்
அலையொன்றை துரத்துகிறது
மனது.

*************************

 
நம்பிக்கையோடு நாட்கள்
சென்றுகொண்டிருக்கிறது
பெறுதலுக்காக
காத்திருக்கிறார்கள்
சில நேரம் பசியற்று
பெரும்பாலும் பசியோடும்
காத்திருக்கிறது கண்கள்
திசை திருப்பும்
பேச்சுகளை மறந்து
தின செய்திகளையும்
ஆதார் அட்டையும்
திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்று
இருக்கைகளின்
நிதானமான பொய்களை
அறியாமலும்
கறை படிந்த சொற்களை
நம்பி
இன்னும் காத்திருக்கும்
அப்பாவி மக்களை
கடந்து செல்கிறது
இந்த ஐந்தாண்டு.

 
***************************

இருளில் தத்தளித்து
ஒளியில் நனைந்து
மலர்கிறது கண்கள்.

************************

விஷம் எனத்தெரிந்தும் தேனீயைத்
தேன் சுரந்து மலர்ந்து
அழகுடன் அனுமதிக்கிறது மலர்.

 *******************
தன் முழு முகத்தைப்
பார்த்துவிட
ஒரு கடலைத்தேடுகிறது வானம்.

***************************

எளிதில் கடத்தி விடுகிறது
இயல்பாய் ரகசியங்களை இயற்கை
பிற உயிர்களனைத்தும் நிஜத்தின் இருப்பில் 
நிகழ்த்துகிறது இன்றைய பொழுதுகளை
முதல் தோட்டமான 
ஆதாம் ஏவாளின் தோட்டத்தில்
இன்னும் தேடுகிறார்கள் முதல் முத்தங்களை 
மனிதர்கள்
பிற உயிர்களுக்கான முதல் தோட்டத்திற்கு 
வழி சொல்ல அழைத்தது பறவைகள்
பறவைகளின் முதல் தோட்டத்தில் 
கேட்கிறது நிரம்பி வழியும் உணர்வுகளின் சிறகுகள்
அதற்கான பெயரைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அது சுதந்திரமாகப் பறந்து கொண்டேயிருக்கிறது
முதல் கருவறை மகத்தானது
இங்கு முடிவில்லாத கருவறையில்
முடிந்து போகுகிறது நம் வாழ்வு
காட்சிகளாக இடம் பெயர்ந்து
ரேகைகளில் பதிந்து மனிதர்களைப்
படித்துவிட்டு தவிக்கிறது
மொழியின் சுவடுகள்.

 *******************************
இன்னுமோர் சுதந்திரத்திற்கு 
ஒரு கவிதை படலாமா என்றேன்
தலை தொங்கி நூல் நூற்றது
காந்தியின் கைகள்
இடுப்பில் துப்பாக்கி ஏந்தியிருந்த காந்தியைக்கண்டு 
புன்னகைத்தேன்
கவிதையை பாடு என்றது அவரது குரல்.
பசிக்கிடந்து, அடிவாங்கி
போராடி பெற்றதந்த அன்னையின்
கற்பத்தை நள்ளிரவு சுதந்திரம்
சிதைக்கிறது
மதம்தாண்டி சகோதர உணர்வுகளை
வளர்க்க வேண்டிய
புது விதைகள் வேண்டும் என்றால்
சமஸ்கிருதம் தடுக்கிறது என்றேன்
உடனே காந்தி
நான் இட்ட விதைகளெல்லாம் அழிகிறது
இதை உழவனிடம் சேர்த்துவிடு
என்று துப்பாக்கியை தந்தார் காந்தி
நானும் உழவன்தான்
முதலில் கோட்சேக்களை கொன்று உரமாக்குகிறேன் என்றேன்
புன்முறுவலோடு சம்மத்தித்தார் காந்தி
இனி சப்தங்களும் சண்டைகளும்
நம் கையில் தான்
புதுச்செடியொன்று முளைத்துவிட
நீர் கொஞ்சம் ஊற்றிவிடு என்கிறது
காந்தியின் கனவு நிலம்.

********************************
தினம்
−−−−−−

இதுவே கடைசி
எனக் காத்திருக்கும்
நேரத்தில்
மீண்டும் நிலவின்
வெளிச்சம் நழுவி
காயத்தைத் தள்ளுகிறது
எலும்பு நழுவி
நீந்துகிறது
உதிர்ந்த இலையைப்போல
இந்த கரை இத்தனை
வேதனையைச் சுமக்கிறது.

 *********************
ஒவ்வொரு உயிருக்கும்
தனித்தனி மதுவை
தந்திருக்கிறது காலப்பூ.

 ***********************

 

இனிய வாழ்த்துகள் கவிச்சுடரே.

 

 

View

இலக்கியச்சுடர் விருது

கோ லீலா

இலக்கியச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்
==================================
படைப்பாளி கோ லீலா அவர்கள் இதுவரை இந்த குழுமத்தில் எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் இலக்கியத் திறனை போற்றும் வகையில் அவர்களுக்கு 2021க்கான "இலக்கியச்சுடர்" எனும் உயரிய விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.

அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...

இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப் படுவதுடன் ஒரு ஆளுமைமிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப் படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

இனி இந்த விருதை வாங்கப் போகும் எழுத்தாளர் யார் யார் என்பதை உங்களின் படைப்புகளே தீர்மானிக்கும்..
ஆகவே இந்த குழுவில் பதியப்படும் படைப்புகள் யாவும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது. அதை ஒரு குழு தனியாக இருந்து அலசி ஆராய்ந்து தேர்வு செய்கிறது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...

வாழ்த்துக்கள் இலக்கியச்சுடர் கோ லீலா.

ஒரு மகிழ்ச்சியான செய்தி....
இனி இந்த இலக்கியச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்தல் அவசியமாகிறது. 

இலக்கியச்சுடர் கோ லீலா – ஒரு அறிமுகம்
***********************************
பெயர்: கோ லீலா 

வசிப்பிடம்: பொள்ளாச்சி

பணி: உதவி செயற்பொறியாளர், நீர்வள ஆதார‌ துறை, பொ.ப.து

படித்தது: B.E ( civil), M.B.A ( systems analysis and HR), PGDDCCS

படித்துக் கொண்டிருப்பது:
**********************
ஓஷோ, மிக்கேல் நைமி, கலீல் ஜிப்ரான், பெரியார், கலைஞர், பாரதி, உமர் கயாம், பாஷோ, பூஸன், ஆண்டன் செக்காவ், தாகூர், பால் சக்காரியா, தாஸ்தாவேஸ்கி, பாரதிதாசன், புவியரசு, கி.ரா, தி.ஜா, ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான், தஞ்சை ப்ரகாஷ், மாட் விக்டோரியா பார்லோ, ஜான் பெல்லமி ஃபாஸ்டர், டேனியல் கோல்மென், அருந்ததி ராய், சலீம் அலி, ராமசந்திர குஹா, தொ.பரமசிவன், மார்க்ஸ், இறையன்பு, வைரமுத்து, தகழி சிவசங்கரன், எஸ்.ரா, Paulo Coelho, Napoleon hill, ஜெயமோகன்... நீளும் பட்டியலில் அடங்கும் மிக்ஸர் மடிச்சி கொடுக்கும் பேப்பரும். 

இலக்கு/முயற்சி/கனவு: 
**********************
தண்ணீர் மற்றும் இயற்கையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் வேளாண் காடுகள் உருவாக்குதல்

இயல்பு: 
**********
நிகழ்காலத்தில் வாழ்தலே வாழ்தல் எனும் ஓஷோவின் சொற்களின் வழியே நொடிக்கு நொடி இயற்கையின் இறைத்தன்மையை சுகித்து மகிழ்தல் இயல்பு.

எழுதத் தொடங்கியது: பள்ளி நாட்களில்‌ இருந்து

பெருமிதம்: 
****************
மறைநீர் படித்த பின்பு பலரும் நீரை சிக்கனமாக செலவு செய்யவும், காடுகள் அமைக்க முற்பட்டிருப்பதும்...

#மறைநீர் நூல் கடந்த 20 (2000-2020) ஆண்டுகளில் புத்தியை துலக்கிய புத்தகமாக விகடன் அறிவித்தது... 

ஆயிரம் பிரதிகள் விற்பனையானது...

சர் விஸ்வேஸ்வரய்யா சீர்மிகு பொறியாளர் விருதினை பெற்றது.

தமிழ்நாட்டில் ஹைக்கூ பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பெண்களின் வரிசையில் நான்காவது இடத்தை வகித்து இருப்பது


அவரது படைப்புகள்:
******************
# மறைநீர் 
#ஹைக்கூ தூண்டிலில் ஜென்

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வெளி வந்த இதழ்கள் மற்றும் இணைய தளங்கள்:

கவிதைகள்:
***********
படைப்பு கல்வெட்டு
இனிய உதயம்
மின் தமிழ்மேடை - தமிழ் மரபு பன்னாட்டு அமைப்பு
கொலுசு
மக்கள் வெளிச்சம்
பொழில்வாய்ச்சி

கட்டுரைகள்
************
தகவு
இனிய உதயம்
தமிழ் நெஞ்சம்
கலகம் காலண்டிதழ்
திணை காலண்டிதழ்

நூல் விமர்சனம்
***************
தகவு
கணையாழி
தமிழ்நெஞ்சம்

இணைய தளங்கள்
**************************
வாசிப்போம் தமிழ் இலக்கியம் நேசிப்போம்
தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம்
வாசிப்பை நேசிப்போம்


படைப்பு குழுமத்தில் பங்களிப்பு:
**************************
படைப்பின் பசுமைத் திட்டத்தின் திட்டத் தலைவராக இயங்குதல்.

தினம் கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம் ஏதாவது ஒரு படைப்பை பதிவிடுதல்.

படைப்பு குழுமத்தின் எந்த முன்னெடுப்பிலும் பங்கேற்று, ஆலோசனையைப் பகிர்தல்.



இலக்கியச்சுடர் கோ லீலா அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
****************************************************
இயற்கையை பெரும்பாலும் சுற்றுலாவாசிகளின் கண்ணோட்டத்தில் காணும் இன்றைய சூழலில் லீலா உணர்வு பூர்வமாக அணுகிறார். இயற்கை கேட்கும் கேள்விகளின் வழியே தன் வாழ்வியலை கட்டமைத்துக் கொண்டு முடிந்தளவு பதில்களை சேகரித்துக் கொண்டே நகர்கிறார். அதற்கு அவர் சார்ந்திருக்கும் பணி... முழு முற்றிலுமாக உதவுகிறது. நீரின் தேவை குறித்து அதன் கவனம் மனிதர்களிடம் குறைவது குறித்து அவரின் மனம் படும் பாடு தான் "மறைநீர்" நூல். அந்த ஒரு நூல் போதும்... இந்த  மானுடத்தின் மீது அவர் கொண்ட மனித நேயம் உணர்ந்து கொள்ள. 

எழுத்து சிறு வயது முதலே அவரைப் பற்றிக் கொண்டாலும்... காலத்தின் ஓட்டத்தில் அதனை அவரும் கெட்டியாக பற்றிக் கொண்டார். தொடர்ந்து இயங்குதலின் வழியே தான் இலட்சியங்கள் சாத்தியம். கனவுகளை விரட்டி பிடிக்க அவர் எடுத்துக் கொண்ட வழி எழுத்து. படைப்பூக்க மனநிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளல் எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. லீலாவுக்கு சாத்தியப் பட்டிருக்கிறது. இயற்கையை நேசிக்கும் தன்மை அவரை தொடர்ந்து படைப்பாளியாக மட்டுமல்லாமல் ஒரு மனித நேயமிக்க மானுட சுடராகவும் வைத்துக் கொண்டிருக்கிறது.  

தைரியத்தின் வழியே வெளிப்படையாக பேசும் சாந்தம் வாய்த்த எழுத்தாளர் என்றால் சாலப்பொருந்தும். தொடர் வாசிப்பின் வழியே தூரங்களை தொட்டுக் கொண்டே இருக்கும் ஆத்மார்த்தமான அன்புள்ளம் கொண்ட மனுஷி என்றால் அதுவும் அப்படியே.

நீரை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்....இருக்கும் நீரை எப்படியெல்லாம் சுத்திகரிக்கலாம்..... உபயோகப் படுத்தலாம் என்று பல்வேறு வழிமுறைகளை மிக துல்லியமாக.....அக்கறையாக......அற்புதமாக எல்லாருக்கும் புரியும் வகையில் கொடுத்த படைப்பாளி லீலா அவர்களின் சமூக அக்கறைக்கு எப்போதுமே ஒரு ராயல் சல்யூட் நம்மிடம் உண்டு.   

அமுத பாரதி, அறிவுமதி, மு. முருகேஷ், மீனாசந்தர், உதயக்கண்ணன், புதுவைத் தமிழ்மணி போன்றோர் முதல் காலகட்டத்தில் இருந்து இன்னும் இயங்கி வருபவர்கள். இந்நிலையில் கோ.லீலா அவர்கள் குற்ற நற்ற ஆய்வுகளில் இறங்காமல் கவனத்தோடு ஒரு பாராட்டுமுறைத் திறனாய்வை
நிகழ்த்தியுள்ளார். இதன் பொருட்டு ஹைக்கூவையும் ஜென்னையும் நூலின் தேவைக்கேற்ற அளவு கற்றிருப்பதை வரவேற்றுப் பாராட்ட வேண்டும்...என்றும் லீலா தரும் நுட்பத் தெறிப்புகள் மிக அருமையானவை என்றும் லீலா எழுதிய "ஹைக்கூ தூண்டிலில் ஜென்" நூல் பற்றி மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பாராட்டுகிறார். நாமும் பாராட்டுவோம். இந்த உலகமே பாராட்டட்டும். பாராட்டை விட பொற்கிழி வேறென்ன இருக்கிறது படைப்பாளிக்கு.

எந்த பொருள் பாடும் கவிதையிலும் மெல்ல இயற்கை எட்டிப் பார்க்கும் வேட்கை அவர்பால் அமைந்திட்ட அனுக்கிரகம் என்றே நம்பலாம். புள்ளி விபரங்களில் எப்போதும் தன்னை சமரசம் செய்து கொள்ளாதவர். மேம்போக்கு சிந்தனையில் தன்னை ஒருபோதும் சரிந்து விட அனுமதிக்காக... சுய சிந்தனையோடு ஆழ உழும் அற்புதத்தை தொடர்ந்து கைக்கொள்ள லீலா அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

நீர் செல்லும் வழியெல்லாம் லீலாவின் எழுதுகோல் செல்வதாகத்தான் படுகிறது. எல்லாரும் மை ஊற்றி எழுத லீலா நீர் ஊற்றி எழுதுகிறார் போல. நீரின் தேவை... பாதுகாப்பு என்று நீர் பற்றிய சிந்தனை மனம் படைத்த கவிஞர்... 100 சதவீதமும் நீரால் ஆனவரோ என்று கூட நகைச்சுவை நர்த்தனம் வீசுகிறது நமக்குள். 

இன்னும் இன்னும் புது புது முயற்சிகளில் தொடர வேண்டும் படைப்பாளி கோ லீலா அவர்களின் படைப்பின் பயணம். 

இவரது இந்த இக்கிய பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் "இலக்கியச்சுடர்" என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.


வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

சம்பத் கிருஷ்ணகுமார்

View

மாதாந்திர பரிசு

துளசி வேந்தன்

View

மாதாந்திர பரிசு

அலர்மேல் மங்கை

View

மாதாந்திர பரிசு

பிரபா அன்பு

View

மாதாந்திர பரிசு

அறிவுச் செல்வன்

View

Showing 381 - 400 of 838 ( for page 20 )