logo

படைப்பு 'அறிவிப்புகள்'

Showing 21 - 40 of 42

Year

படைப்பு இலக்கிய விருது - 2019

படைப்பு இலக்கிய விருது - 2019

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...


நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.


ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2019 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம்.


தயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்.


இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்கும்.


வாருங்கள் அதை பற்றி இப்போது பார்ப்போம்.


விருதுகளின் பட்டியல்:

~~~~~~~~~~~~~~~~~


1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).

2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)

3 .சிறந்த நாவல்/குறு நாவல்

4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல் தொடர்.

5. சிறந்த மொழிப்பெயர்ப்பு (மற்ற மொழிகளிலிருந்து தமிழில் வந்தவை மட்டும்)


இந்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு மிகப்பெரிய கவிஞர்/எழுத்தாளர் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.


ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும். அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.


இம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். காரணம் இந்த தேர்வுநிலை அவ்வளவு தரமானதாகவும் பாரபட்சமின்றியும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைக்கிறோம் மேலும் அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தலைமையில் ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.


விதிமுறைகள்:

~~~~~~~~~~~


1. நாம் அறிவித்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.


2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் மற்றும் சிறந்த நூலாசிரியர் என தேர்வு செய்து) வழங்கப்படும்.


3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும், விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.


4. 2019 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2019 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.


5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.


6. எழுத்தாளர் எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை, கதை, நாவல், கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.


7. நூல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கூடாது அதாவது ஜெராக்ஸ் செய்தொ அல்லது மின்நூலாகவோ அல்லது PDF / WORD டாக்குமென்ட்டாகவோ அனுப்புதல் கூடாது. மேலும் நூல்களை கண்டிப்பாக அச்சு வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட உங்கள் நூல்களை கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்டில் அனுப்ப வேண்டும்.


8. கொரியர் அனுப்பிட்டு நூலின் தகவலையும், கொரியர் தகவலையும் (கொரியர் அனுப்ப பட்ட நாள், கொரியர் பெயர், கொரியர்/டாக்கெட் நம்பர்), எழுத்தாளரின் மின்னஞ்சல்,  நூல்குறிப்பு, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு இணையதளத்தில் உள்ள (https://padaippu.com/contact-us) என்ற லிங்கை சொடுக்கி வரும் பக்கத்தின் வழியே தகவல் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருப்பின் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் விருதுக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலிலும் தலா  மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.


9. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பதால் இது தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.


10. அவர் அவர் சொந்த படைப்பான புத்தகத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் பரிந்துரைகள் கிடையாது.


11. புத்தகத்தில் உள்ள கதை, கவிதை, நாவல்கள், கட்டுரை யாவும் தமிழில் இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருப்பின் அதுவும் பிற மொழிகளிலிருந்து தமிழ் படுத்தியதாக இருத்தல் வேண்டும். புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.


12. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.


13. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் யாராவது முன்வந்து அனுப்பலாம்.


14. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேர்மையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.


15. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.


16. இன்றிலிருந்து தொடங்கி வரும் JULY 31 ஆம் தேதி வரை உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.


17. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் வந்து சேர்ந்ததும் இங்கே உடனுக்குடன் வந்து சேர்ந்த நூல்களின் பட்டியல் தயார்செய்து உடனுக்குடன் வெளியிடப்படும்.


படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:

-------------------------------------


படைப்பு குழுமம்,

#8, சுபைதா இல்லம்,

மதுரை வீரன் நகர்,

கூத்தப்பாக்கம்,

கடலூர் - 607 002.

Ph: +91 94893 75575



Address in English format:

--------------------------


PADAIPPU KUZHUMAM,

#8, SUBAITHA ILLAM,

MATHURAI VEERAN NAGAR,

KOOTHAPPAAKKAM,

CUDDALORE,

TAMIL NADU, INDIA.

607 002.

Ph: +91 94893 75575


Email: admin@padaippu.com


படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31-JULY-2020


நூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை கண்டிப்பாக அனுப்பவேண்டும்.


முடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள் தோழர் தோழமைகளே...


பயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..


வாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவோம்.


வாழ்த்துக்கள்,


வளர்வோம் வளர்ப்போம்.

படைப்பு குழுமம்.


#படைப்பின்இலக்கியவிருது

View

முடிவுகள் - மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டி-2020

முடிவுகள் - மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டி-2020
============================================
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டியின் முடிவுகள் இதோ காணொளி வழியாக அதுவும் நடுவரின் நேரடி ஒளிபரப்புடன்.

வாகை சூடிய அனைவருக்கும் சான்றிதழும், பரிசுக்குரிய பணமும் நாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் விழாவில் நேரடியாக  வழங்கப் படும். சான்றிதழ் மட்டும் (சாப்ட் காப்பியை) இங்கே கூடிய விரைவில் நடுவரின் கையொப்பத்துடன் பதியப்படும். அதன் ஒரிஜினலை விழாவில் விழா நாயகர்களின் கைகளால் வழங்கப்படும் என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறோம்.

சமூக நலன் கருதி இப்போட்டியை படைப்பு குழுமத்துடன் இணைந்து நடத்த முன்வந்த தமிழக காவல்துறை மற்றும் அதன் அங்கத்தினர்களான 
1) திரு. ராஜேஷ் தாஸ், இ.கா.ப, 
கூடுதல் காவல் துறை இயக்குநர், 
அமலாக்கம்,
சென்னை.

2) திரு. ச.மணி,
காவல் கண்காணிப்பாளர், 
அமலாக்கம்,
சென்னை.
ஆகிய இரு அதிகாரிகளுக்கும் படைப்பு குழுமம் சார்பாகவும் உங்களின் சார்பாகவும் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இந்த போட்டியை நடுவராக இருந்து நடத்திக் கொடுத்த மதிப்புக்குரிய கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு படைப்பு குழுமத்தின் சார்பாகவும், தமிழக காவல்துறை உங்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்ற அனைத்து தோழர் தோழமைகள் அனைவருக்கும் 
படைப்பு குழுமத்தின் சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும், உங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்...
இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும்  தமிழக காவல்துறை மற்றும் படைப்பு குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...

இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...
அது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் கவிதைகள் அனைத்தும் நாம் முன்பே கூறியது போல கவிதை நூலாக வெளிவர இருக்கிறது. மேலும் வெற்றி பெற்ற கவிதைகள் அனைத்தும் இந்த மாதம் படைப்பு தகவு கலை இலக்கிய திங்களிதழில் பிரசுரமாகும்.

இப்போட்டி நல்லபடியாக வெற்றி பெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியையும் அன்பையும் தமிழக காவல்துறை & படைப்பு குழுமம் தெரிவித்து கொள்கிறது...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
என்றும் சமூக அக்கரையுடன்,
தமிழக காவல்துறை & படைப்பு குழுமம்

View

கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்களின் வாழ்த்துமடல்

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்... நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டியின் நடுவராக இருந்து போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்களின் வாழ்த்துமடல் இதோ.

மிக அதிக பணிச்சுமைகளுக்கு இடையிலும் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்போட்டியை மிக சிறப்புற நடத்தி கொடுத்தது மட்டுமில்லாமல் நம் படைப்பு குழுமத்தின் உறுப்பினர்களுக்காக தாங்கள் கைப்பட ஒரு வாழ்த்துமடல் எழுதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதும் உடனே இசைவு தெரிவித்து அதையும் சிரமம் பாராமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். நம் படைப்பு குழுமத்தின் அனைவரின் சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும் கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்களுக்கு இந்த தருணத்தில் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும் படைப்பு குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...

அது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து பரிசுக்குரிய கவிதைகள் அனைத்தும் கவிஞர் மு.மேத்தா அவர்கள் உங்கள் முன் தோன்றி படைப்பு டிவி வழியே நேரடியாக போட்டி முடிவுகளையும் அந்த கவிதைகளின் சிறப்புகள் பற்றியும் சொல்ல இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கே வளரும் படைப்பாளிகளை தட்டிக்கொடுத்து வாழவைக்க வேண்டும் என்றும் பல படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டும் வாழும் இக்கால அனுபவமிக்க கவிஞர்களில் கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்கள் முதன்மையானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி படைப்பாளிகளுக்காக வாழும் இந்த கவிஞரை நமது நன்றியின் அரவணைப்பில் மகிழ்விப்போம் வாருங்கள்.

நமக்காக வாழ்த்து சொன்ன இந்த மகா கவிஞருக்காக நம் குழுவின் சார்பாக நாம் நமது கருத்து பகுதியில் வாழ்த்தி மகிழ்வோம்.

குறிப்பு: கவிஞர் மு.மேத்தா அவர்கள் தேர்வு செய்த வெற்றியாளர்களின் பட்டியல் காணொளி மூலம் வந்து சேர்ந்தது. விரைவில் படைப்பு டிவி வழியாக அறிவிக்கப்படும்.

வாருங்கள் வாழ்த்துவோம்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

மின்னூல் வெளியீடு

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று (இன்று இரவு 12 மணிக்கு) படைப்பாளி ஆண்டன் பெனி அவர்கள் எழுதி சமீபத்தில் படைப்பு பதிப்பகத்தின் மூலம் வெளியான "யமுனா என்றொரு வனம்" எனும் காதல் கவிதை நூலை மின்னூலாக வெளியிட இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். 
https://padaippu.com என்ற படைப்பு இணையதளத்தில் மூலம் இலவசமாக படித்துக் கொள்ளலாம்.

View

படைப்பு - கவிதைக்கான களம் மட்டும் அல்ல... தமிழுக்கான தளம்.

படைப்பு - கவிதைக்கான களம் மட்டும் அல்ல... தமிழுக்கான தளம்.

அன்புள்ளம் கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
இதுவரை கவிதைகளை மட்டுமே மாதந்தோறும் தேர்வு செய்து பரிசுகளும் விருதுகளும்கொடுத்துக் கொண்டிருந்த நம் படைப்பு குழுமம், இனி கதை (சிறுகதை, நுண்கதை,ஒருபக்க கதை..),  கட்டுரை, நூல் விமர்சனம், புதினம் மற்றும்மொழிபெயர்ப்பு படைப்புகள் என எல்லாவகை இலக்கியங்களையும் அங்கீகரிக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறிவிக்கிறோம்.

விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள்:
1. எல்லாவகை இலக்கியங்களையும் படைப்பு முகநூல் குழுமத்தில் பதியலாம். எழுதும்போதுகண்டிப்பாக படைப்புகளுக்கு கீழே எழுத்தாளரின் பெயர் தமிழில் எழுத வேண்டும்.
2. படைப்புகள் அந்தந்த வகைமைகளுக்கு ஏற்றவாறு ஹேஷ் டேக் செய்வது சிறப்பு. எடுத்துக் காட்டாக, கவிதை எழுதினால் #கவிதை என்றும், கட்டுரை எனில் #கட்டுரை என்றும், நூல் விமர்சனம் என்றால் #நூல்_விமர்சனம் என்றும்பதியலாம். இப்படி பதிந்தால் பிரித்தெடுப்பது சுலபமாக இருக்கும்.
3. தேர்வாகும் படைப்புகளுக்கு மாதாந்திர பரிசுகளும் அதில் தொடர்ச்சியாக பங்களிப்பவர்களுக்கு படைப்பின் உயரிய விருதான 'இலக்கியச் சுடர்' என்ற விருதும்வழங்கப்படும். பரிசுப்பெற்ற படைப்புகள் யாவும் படைப்பு இணையதளத்தில் பரிசுப்பெற்ற படைப்புகள் என்று பிரசுரமாகும். மேலும் அந்தந்த வகைமைகளுக்கு ஏற்றவாறு பரிசுகளும் விருதுகளும் பெறும் படைப்பாளிகளை நம்ஆண்டு விழாவில் வைத்து சிறப்பிக்கப்படும்.
4. நாம் இதுவரை கவிதையில் சிறந்த பங்களிப்பு செய்யும் படைப்பாளிகளுக்கு கவிச்சுடர் எனும்உயரிய விருதை வழங்கிச் சிறப்பிப்பதைப் போலஇனி கவிதை அல்லாத பிற இலக்கியங்களில் சிறந்த பங்களிப்பு செய்யும் படைப்பாளிகளுக்கு படைப்பின் புதிய விருதான 'இலக்கியச் சுடர்' என்ற உயரிய விருது வழங்கி சிறப்பிக்க இருக்கிறோம். மேலும் படைப்பில் கவிச்சுடர் விருது பெற்றவரும் மீண்டும் இவ்விருதை பெறும் வாய்ப்பு உண்டு.
5. பரிசுகள் மற்றும் விருதுகள் பெறுவோரின் தகவல்களை உலகம் முழுக்க உள்ள அனைவருக்கும் தெரியும் வண்ணம் நம்இணையதளத்தில் இருக்கும் படைப்பாளிகளின்சுயவிவர பக்கத்தில் பதியப்படும். இனி படைப்பாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவோருக்கு அவரது படைப்பு பக்கத்தில் உள்ள சுயவிவரப்பக்கம் சென்றாலே எல்லாம்கிடைக்கும் வண்ணம் அமைத்து தரப்படும்.
6. இனி படைப்பு குழுமம் கவிதைக்கான களம்மட்டும் அல்ல தமிழுக்கான தளம் என்று ஒரேகுடையின் கீழ் அனைத்து வகையானஇலக்கியங்களையும் அரங்கேற்ற இருக்கிறது.
7. கவிதை மட்டுமல்லாது இனி எல்லா வகையான இலக்கியங்களையும் படைப்பில் (படைப்பு முகநூல் குழுமத்தில் ) பதியலாம். மொழிபெயர்ப்புபடைப்புகள் தவிர்த்து மற்ற படைப்புகள் அனைத்துக்கும் கண்டிப்பாக சொந்த படைப்பாகமட்டுமே இருத்தல் வேண்டும்.
8. ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்  பதியலாம் அதுவும் படைப்புமுகநூல் வழியே மட்டுமே பதிவிட வேண்டும். வேறு  வழியாக வரும் பதிவுகளுக்கு இது பொருந்தாது.
9. சிறந்த படைப்புகள் படைப்பு-தகவு (கலை இலக்கிய திங்களிதழ்) இதழில் பிரசுரம்செய்யப்படும். மேலும் அவர்களுக்கு படைப்பு பதிப்பகம் வழியே நூல் வெளியிட முன்னுரிமை அளிக்கப்படும்.

வாருங்கள் படைப்பாளிகள்...

உங்களுக்கான இலக்கிய உலகை உருவாக்ககாத்திருக்கிறது
உங்களுக்காக காத்திருக்கிறது உங்கள் படைப்பு.

வாழ்த்துக்கள் அனைவருக்கும். படைப்பின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் உடன் நிற்கும்படைப்பின் படைப்பாளிகள் அனைவருக்கும், அடுத்தடுத்த மைல்கல்லை எட்ட வைத்துக் கொண்டிருக்கும் நிர்வாகக் குழுவிற்கும் அன்பின் நன்றிகள்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020

தமிழக காவல்துறை & படைப்பு குழுமம் இணைந்து நடத்தும்,மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020
~~~~~~~~~~~~

அன்புள்ளம் கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

மதுவைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தரும் வகையில் "மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி" ஒன்றை தமிழக காவல் துறை மற்றும் படைப்பு குழுமம் இணைந்து இந்தாண்டு முதல் மக்கள் நலனுக்காக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மதுவினால் சீரழியும் மக்களுக்கு எச்சரிக்கை மணியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மதுவைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு தரும் வகையிலும் இருக்கட்டும்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்: மொத்த பரிசு :25000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்).
முதல் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).
இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய்).
மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் முவ்வாயிரம் ரூபாய்).
சிறப்பு பரிசு : ஏழு நபர்கள் - 7000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)
ஆக மொத்தம், பரிசுத்தொகை 25000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 10 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்
பரிசளிப்பவர் விவரம்: தமிழக காவல்துறை

போட்டி விவரம்:
தலைப்பு : விஷம் நுரைக்கும் கோப்பைகள்
ஆரம்ப நாள் : 16-ஜனவரி-2020
கடைசி நாள் :18-ஜனவரி-2020
மொத்தமாக 72 மணி நேரம்
போட்டி நடுவர் : மக்கள் கவிஞர் மு.மேத்தா
முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

தலைப்பு விளக்கம்: இன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாம் அளவிட முடியாத சாதனை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் மதுவினால் இச்சமூகம் அழிவின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தை விவரித்து சொல்லும் இது. ஆதலால் இது முழுக்க முழுக்க மதுவும் மது சார்ந்த விழிப்புணர்வு சுமந்து வரும் வரிகளைக் கொண்டு எழுதப்படும் கவிதைப் போட்டியாகும். மேலும் இக்கவிதை போட்டிக்கு எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் இச்சமூகத்திற்கு நம் படைப்புகள் மூலம் நாம் செய்யும் விழிப்புணர்வு சமர்ப்பணமாகவே இது இருக்க போகிறது.

போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 16-ஜனவரி-2020 முதல் 18-ஜனவரி-2020 ( 72 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.
2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.
3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 48 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள்18-ஜனவரி-2020 அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.
4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் கவிஞர் மு.மேத்தா தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.
5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.
6. சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில் ''விஷம் நுரைக்கும் கோப்பைகள்'' என்ற சிறப்பு மின்னிதழில் பிரசுரிக்கப் படும். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் ஆளுமை மிக்க கவிஞர் பலரால் அணிந்துரை எழுதப் பட்டும் காவல்துறை அதிகாரிகளின் வாழ்த்துரைகளுடனும் கவிதை நூலாக வெளியிடப்படும்.
7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 10 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.
8. கவிதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆனபிறகு மட்டுமே பதிய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.
9. கவிதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 72 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 24 வரிகளுக்கு மேல் கவிதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.
10.கவிதைகள் மது பற்றிய விழிப்புணர்வு மற்றும் மதுவிலக்கு சார்ந்ததாக மட்டுமே இருத்தல் மிக அவசியம்.
11. வயது வரம்பு ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். இது நம் சமூகத்தில் நல்ல ஒரு மாற்றம் வளர வழிவகை செய்யட்டும். நல்ல விழிப்புணர்வு கொண்ட வரிகளை மதுவிலக்கு சுகாதார மையங்களில் எழுத்தாளர் பெயருடன் பொறிக்கப்பட்டு அங்கீகாரம் செய்யப்படும்.
12. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்புமே இறுதியானது.
14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று விழிப்புணர்வு தர இது ஒரு வாய்ப்பாகுமே.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.

போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...

உங்கள் எழுத்து மாற்றட்டும் ஒருவரின் தலையெழுத்து...

தமிழக காவல்துறை & படைப்பு குழுமம்.

View

ஜுனியர் விகடன் கொடுத்த அங்கீகாரம்

ஜுனியர் விகடன் 2020 ஸ்பெஷல் புத்தகத்தில் 20 ஆண்டுகள் புத்தியைத் துலக்கிய புத்தகங்கள் தேர்வில் "மறைநீர்" தேர்வாகி இருக்கிறது.

சாகித்ய அகாடமி விருதுப் பெற்ற நூல்களோடு படைப்பு பதிப்பகத்தின் வெளியீடான 
"மறைநீர்" இடம் பெற்றிருப்பது சமூகத்தின் மீதான அக்கறை மற்றும்‌இன்றைய தேவையை நோக்கிய தேர்வாக எண்ணலாம்.

இந்நூல் ஆசிரியர் கோ.லீலா அவர்களுக்கு  வாழ்த்துகளையும் அன்பின் நன்றிகளையும் பெருமையுடன் உரித்தாக்குகிறது படைப்பு குழுமம்

ஜு.வி இதழுக்கும்,இந்நூல் வெளிவர ஒத்துழைத்த அனைத்து தோழமை உள்ளங்களுக்கும்.வெளி வந்ததும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊக்கமளிக்கும் அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும்,பேரன்பும்.💐💐💐

View

நமது படைப்பு பண்பலை இணையதள வானொலி

அன்புடையீர் வணக்கம்...!

ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக துபாய் நாட்டில் 'கில்லி வானொலி பண்பலை ( GILLI FM 106. 5 ) எதிர்வரும் 10.01.2020 வெள்ளிக்கிழமை, ETISALAT ACADEMY, DUBAI பிற்பகல் இரண்டு மணிக்கு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட இருக்கிறது. இவ்விழாவில் நமது பாரம்பரிய உணவு, இசை, விளையாட்டு மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பு விருந்தினர்கள் உடன் சேர்ந்து கொண்டாடவும் கண்டுகளிக்கவும் அரியதொரு வாய்ப்பு. அனுமதி இலவசம்.

இப்பாரம்பரிய விழாவில் நமது படைப்பு குழுமத்தை சமூக ஊடக பங்குதாரராக (SOCIAL MEDIA PARTNER) இணைத்துக் கொண்ட கில்லி வானொலி பண்பலை ( GILLI FM 106. 5 ) மற்றும் யூனிக் ஆங்கிள் (UNIQUE ANGLE) வர்த்தக விளம்பர நிறுவனத்திற்கும் தன் நெஞ்சார்ந்த நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐக்கிய அரபு நாடுகளில் வசித்து வரும் நமது படைப்பு குழுமத்தின் படைப்பாளிகள், தோழர், தோழமைகள் மற்றும் தமிழர்கள் அனைவரும் இச்செய்தியையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அடுத்த முன்னெடுப்பாக... நமது படைப்பு பண்பலை இணையதள வானொலி (PADAIPPU WEB FM ) சேவை மிக விரைவில் தொடங்க உள்ளது. அவ்வானொலி சேவையில் நமது படைப்பு குழுமத்தின் அறிவிப்புகள், போட்டிகள் பற்றிய தகவல்கள், பரிசு பெற்ற கவிதைகள், கவிஞர்களின் அறிமுகம், நேர்காணல் மற்றும் நம் பாரம்பரியத்தை சொல்லும் அனைத்தும் ஒலிபரப்பாகும்.

படைப்பின் எல்லா முன்னெடுப்புகளிலும் தோளோடுத் தோளாக நின்று வருகின்ற அனைவரும் இச்செய்தியை மகிழ்வுடன் பகிர்ந்திட வேண்டுகிறோம்.

வளர்வோம் வளர்ப்போம்...! படைப்பு குழுமம்

View

சென்னை புத்தகத் திருவிழா - 2020

அன்புள்ளம் கொண்ட படைப்பு குழு தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த சென்னை புத்தகத் திருவிழாவில் படைப்பு பதிப்பக நூல்கள் விற்பனைக்கு வர உள்ளதை மிக மிக மகிழ்ச்சியாகவும் பெருமையுடனும் அறிவிக்கிறோம்.

அரங்கு எண்: F26 & 226
நாள் : 09-JAN-2020 முதல் 21-JAN-2020 வரை
இடம்: நந்தனம் ஒய். எம். சி. ஏ மைதானம்.

இனி தமிழகத்தில் எந்த புத்தக திருவிழா நடந்தாலும் படைப்பின் தடம் பதிக்கும் உங்கள் ஆதரவோடு. நம்மை நம்பி நூல் வெளியிட்ட வளரும் படைப்பாளிகளை தொடர்ந்து வளர்க்கும் வேலைகளில் படைப்பு பதிப்பகமும் படைப்பு குழுமமும் இருக்கும் என்பது இந்த செயல்களே அத்தாட்சி...

படைப்பு குழுமத்தின் மூலமாக முதன் முதலில் படைப்பாளி்களின் நலனுக்காக பதிப்பகம் தொடங்கி அதில் படைப்புக்கு குழுவில் இயங்கும் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு சாதனை புரிந்தோம். தனி நூலாகவும் தொகுப்பு நூலாகவும் என சுமார் 300 க்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புகளை பிரசுரம் செய்து கவிதை நூல்களின் வழியே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம்.

இந்த நூல்களையெல்லாம் வாங்க விரும்பியவர்கள் இதுவரை கொரியர் மற்றும் நேரடியாக பெற்று வந்தனர். இருப்பினும் பலருக்கு சரியாக சென்று சேர்க்க முடியவில்லை. ஆகவே பலரது கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக சென்னை புத்தக கண்காட்சியில் நமது நூல்களை வைக்க முடிவெடுத்து அதிலும் படைப்பின் தடத்தை பதித்து விட்டோம்.

இப்புத்தக திருவிழாவில் நமது படைப்பு பதிப்பகம் வெளியிட்ட அனைத்து நூல்களும் கிடைக்கும். யாரெல்லாம் இன்னும் தங்களது பிரதிகளை பெறவில்லையோ அவர்களெல்லாம் இங்கு நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

நாம் சென்ற விழாவில் கொடுத்த வாக்குறுதியைப்போலவே நூல்கள் விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில் இனிவரும் விழாவில் நலிவடைந்த கலைஞர்கள்/கவிஞர்களுக்கு உதவும் வகையில் எல்லாமும் செய்து தரப்படும்.

இது எங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பதிப்பகம் அல்ல. உங்களுக்காக வளரும் படைப்பாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு குழுமம். ஆகவே வளரும் படைப்பாளிகளை வளர்ப்பதற்காகவும் நலிவடைந்த கலைஞர்களின் வளர்ச்சிக்காகவும் நூல்களை வாங்கி உதவிடுங்கள்.

இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் அதற்காக முடிந்தவரை பகிருங்கள். நீங்கள் பெறப்போகும் ஒவ்வொரு நூலின் விலையும் ஒரு ஏழைக் கலைஞனின் இருண்ட வாழ்வில் ஒரு வெளிச்ச சூரியன் விளையும் என்பதை உணருங்கள்.

இதுவரை நாம் எடுத்துக்கொண்ட அனைத்து புதிய முயற்சிகளுக்கும் படைப்பின் படைப்பாளிகளாகிய உங்களாலே சாத்தியமானது அதனால் வெற்றியும் கண்டோம். அதே போல இந்த புது முயற்சியையும் வெற்றி பெற செய்வீர்கள் என பரிபூரணமாக நம்பிக்கை வைக்கிறோம்.

நூல்களையும் வாங்கி மகிழுங்கள். உங்கள் நட்பு வட்டம் & உறவினர் வட்டங்களுக்கும் தகவலை கொண்டு சென்று தமிழையும் தமிழால் உயர துடிக்கும் படைப்பாளிகளையும் இந்த இரண்டையும் இணைக்கும் படைப்பு குழுமத்தையும் தாங்கிப்பிடியுங்கள்.

நமது படைப்புக்குழுமத்தின் நூல் விற்பனை பொறுப்பாளர்களாக கீழ்கண்ட இருவரும் செயல்படுவார்கள். கூடுதல் தகவல்கள் மற்றும் அரங்கில் ஏதேனும் உதவி தேவை இருப்பின் அவர்களை அணுகலாம்.

படைப்பாளி சலீம் கான்(சகா) & இப்ராஹிம் & ரூபஸ் வி ஆண்டனி.
அலைபேசி எண்: 91 97908 21981

இந்த புத்தக திருவிழாவில் நமக்கு வாய்ப்பு நல்கிய டிஸ்கவரி மற்றும் பூவரசி பதிப்பகத்தார்களுக்கு மிக்க அன்பின் நன்றிகள்.

புத்தக கண்காட்சியில் கிடைக்கும் படைப்பின் நூல்கள்:
நூலின் பெயர் - நூலாசிரியர் - விலை

2020 ஆண்டின் நூல்கள்:
1.இடரினும் தளரினும்- விக்ரமாதித்யன் - ₹120
2.கன்னத்துப்பூச்சி - மணி சண்முகம் - ₹120
3.நிறமி - ஆண்டன் பெனி - ₹90
4.யமுனா என்றொரு வனம் - ஆண்டன் பெனி - ₹100

2019 ஆண்டின் நூல்கள்:
1.இருளும் ஒளியும் பிருந்தா சாரதி - ₹100
2.தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம் பிரபு சங்கர் - ₹80
3.எறும்பு முட்டுது யானை சாயுது கவிஜி - ₹70
4.இசைதலின் திறவு ஜானு இந்து - ₹100
5.நீர்ப்பறவையின் எதிரலைகள் குமரேசன் கிருஷ்ணன் - ₹100
6.சொல் எனும் வெண்புறா மதுரா - ₹80
7.வான்காவின் சுவர் ஜின்னா அஸ்மி - ₹180
8.பொலம்படைக் கலிமா தா. ஜோசப் ஜூலியஸ் - ₹70
9.ஆரிகாமி வனம் முகமது பாட்சா - ₹100
10.யாவுமே உன் சாயல் காயத்ரி ராஜசேகர் - ₹90
11.எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு நடன.சந்திரமோகன் - ₹70
12.நீ பிடித்த திமிர் அகதா - ₹120
13.மறை நீர் கோ. லீலா - ₹150
14.வேர்த்திரள் சகா (சலீம் கான்) - ₹90
15.நம் காலத்துக் கவிதை விக்ரமாதித்யன்- ₹150

2018 ஆண்டின் நூல்கள்:
1. நீர் வீதி - இதுவரை படைப்பில் எழுதி மின்னிதழ்களில் வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 180
2. பாதங்களால் நிறையும் வீடு - கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70
3. உயிர்த்திசை - அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70
4. வெட்கச் சலனம் - அகராதி - விலை 90
5. சின்றில்லாவின் தூரிகை - குறிஞ்சி நாடன் - விலை 100
6. அசோகவனம் செல்லும் கடைசி ரயில் - அகதா - விலை 80
7. என் தெருவில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் - கோ. ஸ்ரீதரன் - விலை 100
8. அஞ்சல மவன் - கட்டாரி - விலை 70
9. கடவுள் மறந்த கடவுச்சொல்(கஸல் கவிதைகள்) - ஜின்னா அஸ்மி - விலை 70

2017 ஆண்டின் நூல்கள்:
1. மௌனம் திறக்கும் கதவு - இதுவரை படைப்பில் எழுதி மின்னிதழ்களில் வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 180
2. நதிக்கரை ஞாபகங்கள் - கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70
3. உடையாத நீர்க்குமிழி - கங்கா புத்திரன் பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70
4. நிலவு சிதறாத வெளி - படைப்பாளி காடன் (சுஜய் ரகு) எழுதிய கவிதைகளின் தொகுப்பு - விலை 70
5. இலைக்கு உதிரும் நிலம் - படைப்பாளி முருகன். சுந்தரபாண்டியன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு - விலை 100
6. நிசப்தங்களின் நாட்குறிப்பு - படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன் எழுதிய குறும்பாக்களின் தொகுப்பு - விலை 70

எல்லோரும் நூல் வாங்கி படித்து மகிழுங்கள். உங்களின் வரிகளை நூலாக்கி உங்கள் கனவுகளை நிஜமாக்கி இருக்கிறது நம் படைப்பு குழுமம்.
நூல் வாசிக்கும் பழக்கத்தை நாம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக்கொடுப்போம்.

நூல் வெளியிட உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் புத்தக கண்காட்சியில் படைப்பின் கால்தடம் பதிக்க உதவிய நல் இதயங்களுக்கும் குறிப்பாக வெற்றிமொழி பதிப்பகத்திற்கும் மற்றும் மகுடபதி அவர்களுக்கும் மற்றும் பழனி புத்தக திருவிழா அமைப்பாளர்களுக்கும், விழா குழுவினருக்கும் மற்றும் புத்தக திருவிழா பதாகை வடிவமைத்த நமது படைப்பு குழும படைப்பாளி சுயம்பு அவர்களுக்கும் படைப்புக் குழுமம் சார்பாக நன்றிகளையும் அன்பையும் பரிமாறுகிறோம்..

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,
வளர்வோம் வளர்ப்போம், படைப்பு குழுமம்

View

வாழ்த்துமடல் - கவிக்கோ பிறந்தநாள் பரிசுப் போட்டி - 2019

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்... நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த கவிக்கோ பிறந்தநாள் பரிசுப் போட்டியின் நடுவராக இருந்து போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த கவிஞர் யூமா வாசுகி அய்யா அவர்களின் வாழ்த்துமடல் இதோ.

மிக அதிக பணிச்சுமைகளுக்கு இடையிலும் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்போட்டியை மிக சிறப்புற நடத்தி கொடுத்தது மட்டுமில்லாமல் நம் படைப்பு குழுமத்தின் உறுப்பினர்களுக்காக தாங்கள் கைப்பட ஒரு வாழ்த்துமடல் எழுதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதும் உடனே இசைவு தெரிவித்து அதையும் சிரமம் பாராமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். நம் படைப்பு குழுமத்தின் அனைவரின் சார்பாகவும் கவிஞர் யூமா வாசுகி அய்யா அவர்களுக்கு இந்த தருணத்தில் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும் படைப்பு குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...

அது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் கவிதைகள் அனைத்தும் நாம் முன்பே கூறியது போல கவிதை நூலாக வெளிவர இருக்கிறது. புத்தக வெளியீட்டு விழா நமது குழுவின் ஆண்டு விழாவில் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கே வளரும் படைப்பாளிகளை தட்டிக்கொடுத்து வாழவைக்க வேண்டும் என்றும் பல படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டும் வாழும் இக்கால அனுபவமிக்க கவிஞர்களில் கவிஞர் யூமா வாசுகி அய்யா அவர்கள் முதன்மையானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி படைப்பாளிகளுக்காக வாழும் இந்த கவிஞரை நமது நன்றியின் அரவணைப்பில் மகிழ்விப்போம் வாருங்கள்.

நமக்காக வாழ்த்து சொன்ன இந்த மகா கவிஞருக்காக நம் குழுவின் சார்பாக நாம் நமது கருத்து பகுதியில் வாழ்த்தி மகிழ்வோம்.

குறிப்பு: கவிஞர் யூமா வாசுகி அவர்கள் தேர்வு செய்த வெற்றியாளர்களின் பட்டியல் வந்து சேர்ந்தது. சான்றிதழ் தயாரிக்கும் பணி தொடங்கியது. விரைவில் படிப்படியாக பரிசுப்பெற்றவர்களின் பெயர்கள் நம் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் வாழ்த்துவோம்...

வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்.

View

மகாகவி பாரதியார் பிறந்தநாள் வாழ்த்து|படைப்பு குழுமம்

பாடல்: மகாகவி பாரதியார்
பின்னனி குரல்: சூர்யா மற்றும் செந்தாரப்பட்டி செல்வகுமார்
படத்தொகுப்பு மற்றும் ஒலிக்கலவை: ஜெயந்த்

வெளியிடுவோர்: படைப்பு குழுமம் & தமிழக காவல்துறை

1) திரு. ராஜேஷ் தாஸ், இ.கா.ப, கூடுதல் காவல் துறை இயக்குநர், அமலாக்கம், சென்னை.

2) திரு. ச.மணி, காவல் கண்காணிப்பாளர், அமலாக்கம், சென்னை. 6374111389

தயாரிப்பு: படைப்பு குழுமம்

View

நக்கீரன் இதழ் தந்திருக்கும் அங்கீகாரம்

இன்றைய நக்கீரன் இனிய உதயம் வார இதழில் படைப்பு குழுமம் பற்றிய செய்தி. ஆசிரியர் குழுவிற்கும், அங்கீகரித்த நக்கீரன் நாளிதழுக்கும், கட்டுரை அளித்த கடையநல்லூர் பென்ஸி அவர்களுக்கும் படைப்பு குழுமத்தின் அன்பின் நன்றிகள்.

எல்லாவற்றுக்கும் காரணமான படைப்பின் படைப்பாளிகள் அனைவருக்கும் மகிழ்வின் நன்றிகள்...

வளர்வோம் வளர்ப்போம்

View

வாழ்த்துமடல் - வேர்த்திரள் பரிசுப் போட்டி - 2019

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்... நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப் போட்டியின் நடுவராக இருந்து போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அய்யா அவர்களின் வாழ்த்துமடல் இதோ.

மிக அதிக பணிச்சுமைகளுக்கு இடையிலும் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்போட்டியை மிக சிறப்புற நடத்தி கொடுத்தது மட்டுமில்லாமல் நம் படைப்பு குழுமத்தின் உறுப்பினர்களுக்காக தாங்கள் கைப்பட ஒரு வாழ்த்துமடல் எழுதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதும் உடனே இசைவு தெரிவித்து அதையும் சிரமம் பாராமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். நம் படைப்பு குழுமத்தின் அனைவரின் சார்பாகவும் கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அய்யா அவர்களுக்கு இந்த தருணத்தில் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும் படைப்பு குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...

அது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் கவிதைகள் அனைத்தும் நாம் முன்பே கூறியது போல கவிதை நூலாக வெளிவர இருக்கிறது. புத்தக வெளியீட்டு விழா நமது குழுவின் ஆண்டு விழாவில் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கே வளரும் படைப்பாளிகளை தட்டிக்கொடுத்து வாழவைக்க வேண்டும் என்றும் பல படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டும் வாழும் இக்கால அனுபவமிக்க கவிஞர்களில் கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அய்யா அவர்கள் முதன்மையானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி படைப்பாளிகளுக்காக வாழும் இந்த கவிஞரை நமது நன்றியின் அரவணைப்பில் மகிழ்விப்போம் வாருங்கள்.

நமக்காக வாழ்த்து சொன்ன இந்த மகா கவிஞருக்காக நம் குழுவின் சார்பாக நாம் நமது கருத்து பகுதியில் வாழ்த்தி மகிழ்வோம்.

குறிப்பு: கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அவர்கள் தேர்வு செய்த வெற்றியாளர்களின் பட்டியல் வந்து சேர்ந்தது. சான்றிதழ் தயாரிக்கும் பணி தொடங்கியது. வரும் புதன் முதல் படிப்படியாக பரிசுப்பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

வாருங்கள் வாழ்த்துவோம்...
வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்.

View

காஃபி வித் கவிதை - PROMO 10

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 10 - PROMO | படைப்பு: கடவுள் மறந்த கடவுச்சொல் - கவிஞர் ஜின்னா அஸ்மி | பார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | படத்தொகுப்பு & ஒலிக்கலவை: ஜெயந்த் - உதவி : ரூபஸ் வி ஆண்டனி | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

View

காஃபி வித் கவிதை - PROMO 9

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 9 - PROMO | படைப்பு: ரொட்டிகளை விளைவிப்பவன் - கவிஞர் ஸ்டாலின் சரவணன் | பார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | படத்தொகுப்பு & ஒலிக்கலவை: ஜெயந்த் - உதவி : ரூபஸ் வி ஆண்டனி | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

View

காஃபி வித் கவிதை - PROMO 8

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 8 - PROMO | படைப்பு: மர்ம நபர் - கவிஞர் தேவதச்சன் | பார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | படத்தொகுப்பு & ஒலிக்கலவை: ஜெயந்த் - உதவி : ரூபஸ் வி ஆண்டனி | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

View

காஃபி வித் கவிதை - PROMO 7

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 7 - PROMO | படைப்பு: லிங்கூ - கவிஞர் & இயக்குநர் லிங்குசாமி | பார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | படத்தொகுப்பு & ஒலிக்கலவை: ஜெயந்த் - உதவி : ரூபஸ் வி ஆண்டனி | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

View

தினமலர் செய்தித் தாளில் படைப்பு குழுமம் பற்றிய செய்தி

மகிழ்வான பெருமையான தருணம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றைய தினமலர் செய்தித் தாளில் படைப்பு குழுமம் பற்றிய செய்தி.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2246286
ஆசிரியர் குழுவிற்கும், அங்கீகரித்த தினமலர் நாளிதழுக்கும் படைப்பு குழுமத்தின் அன்பின் நன்றிகள். எல்லாவற்றுக்கும் காரணமான படைப்பின் படைப்பாளிகள் அனைவருக்கும் மகிழ்வின் நன்றிகள்... வளர்வோம் வளர்ப்போம்.

View

காஃபி வித் கவிதை - PROMO 6

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 6 - PROMO | படைப்பு: மணல் உரையாடல் - கவிஞர் இசாக் | பார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | படத்தொகுப்பு & ஒலிக்கலவை: ஜெயந்த் - உதவி : ரூபஸ் வி ஆண்டனி | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு
குழுமம் 30-MAR-2019 அன்று மாலை 6 மணிக்கு உங்கள் படைப்பு டிவியில் காணத் தவறாதீர்கள்....

View

Showing 21 - 40 of 42 ( for page 2 )