கவிஞர் காப்பீட்டுத் திட்டம்
கவிஞர் காப்பீட்டுத் திட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமூகத்தின் அழுகையை எழுத்துக்களால் துடைத்தவரின் கண்ணீர்த்துளிகளை துடைக்க...
மானுடத்தின் வலிகளை வரிகளில் சுமந்தவரின் வலியைப் போக்க...
சேர்ந்தேயிருப்பது புலமையும் வறுமையும் என்றால் புலமை மிக்கவர்களின் வறுமையை போக்க..
இலக்கிய உலகில் முதல் முறையாக... படைப்பாளிகளை அரவணைக்கும் கரங்களாக... படைப்புக் குழுமம் தொடங்கும் திட்டமே கவிஞர் காப்பீட்டுத் திட்டம் .மூன்று பெரும் பிரிவுகளில் இத்திட்டம் செயலாற்ற இருக்கிறது.
பசிப்பிணி தீர்க்கும் குடும்ப நலநிதி,
வருங்கால சந்ததிக்கான கல்விநிதி,
எதிர்பாரா விபத்து அல்லது இழப்புகள் என்றால் மருத்துவ நிதி...
இந்த மூன்றையும் ஒரே திட்டமாக ஒருங்கிணைப்பதே கவிஞர் காப்பீட்டுத் திட்டம்.
எந்தவொரு பின்புலமும் இல்லாத, வாழ்வாதாரம் இழந்து நிற்கும், வறுமைக்கோட்டில் தன் வரிகளுக்கான கேள்விக்குறியாக இருக்கும் கவிஞர் களுக்கான இந்த முழு இலவச நிதி உதவித் திட்டத்தினை படைப்புக்குழுமம் பெருமையோடு அறிமுகப்படுத்துவதோடு உதவிக்கரமும் நீட்டுகிறது.
இதன் முதல் பயனாளியாக கவிஞர் ஜெ.பிரான்ஸிஸ் கிருபா அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. அதன்படி இனி வாழ்நாள் முழுக்க அவருக்கான உணவு மற்றும் உறைவிடத்துக்கான வாழ்வாதார செலவுகளை படைப்பு கவிஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும்.
கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா அவர்கள் பேசிய நெகிழ்ச்சியான உரை இணைக்கப் பட்டுள்ளது.
இம்மாபெரும் திட்டத்தினை கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளன்று கவிஞர்களுக்காக அறிமுகம் செய்வதில் படைப்பு பெருமகிழ்வு கொள்கிறது.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.