logo

கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்களின் வாழ்த்துமடல்


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்... நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டியின் நடுவராக இருந்து போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்களின் வாழ்த்துமடல் இதோ.

மிக அதிக பணிச்சுமைகளுக்கு இடையிலும் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்போட்டியை மிக சிறப்புற நடத்தி கொடுத்தது மட்டுமில்லாமல் நம் படைப்பு குழுமத்தின் உறுப்பினர்களுக்காக தாங்கள் கைப்பட ஒரு வாழ்த்துமடல் எழுதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டதும் உடனே இசைவு தெரிவித்து அதையும் சிரமம் பாராமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். நம் படைப்பு குழுமத்தின் அனைவரின் சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும் கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்களுக்கு இந்த தருணத்தில் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும் படைப்பு குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... இன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...

அது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து பரிசுக்குரிய கவிதைகள் அனைத்தும் கவிஞர் மு.மேத்தா அவர்கள் உங்கள் முன் தோன்றி படைப்பு டிவி வழியே நேரடியாக போட்டி முடிவுகளையும் அந்த கவிதைகளின் சிறப்புகள் பற்றியும் சொல்ல இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கே வளரும் படைப்பாளிகளை தட்டிக்கொடுத்து வாழவைக்க வேண்டும் என்றும் பல படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டும் வாழும் இக்கால அனுபவமிக்க கவிஞர்களில் கவிஞர் மு.மேத்தா அய்யா அவர்கள் முதன்மையானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி படைப்பாளிகளுக்காக வாழும் இந்த கவிஞரை நமது நன்றியின் அரவணைப்பில் மகிழ்விப்போம் வாருங்கள்.

நமக்காக வாழ்த்து சொன்ன இந்த மகா கவிஞருக்காக நம் குழுவின் சார்பாக நாம் நமது கருத்து பகுதியில் வாழ்த்தி மகிழ்வோம்.

குறிப்பு: கவிஞர் மு.மேத்தா அவர்கள் தேர்வு செய்த வெற்றியாளர்களின் பட்டியல் காணொளி மூலம் வந்து சேர்ந்தது. விரைவில் படைப்பு டிவி வழியாக அறிவிக்கப்படும்.

வாருங்கள் வாழ்த்துவோம்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

 • Deepa Ilango Avatar
  Deepa Ilango - 1 month ago
  🙏👏👏👏

 • செந்தில்குமார் அமிர்தலிங்கம் Avatar
  செந்தில்குமார் அமிர்தலிங்கம் - 1 month ago
  நான் சிறுவயதில் ரஜினி சார் நடித்த வேலைக்காரன் படத்தில் இடம்பெற்ற பாடலான "பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா" என்ற பாடலை அடிக்கடி பாடுவதுண்டு! அந்த பாடலை மட்டுமல்லாது அந்த படத்தில் அனைத்து பாடல்களையும் மு.மேத்தா ஐயாதான் எழுதியிருக்கிறார் என்பதையும் அறிந்து அவரைக்காண ஆவலாய் இருந்தேன்.பின்பு அவரது நூல்கள் வாங்கிப் படித்தேன். ஒரு இனிய பொழுதில் கவிஞர்.பா.விஜய் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் ஐயாவை சந்தித்தேன். அந்த நிகழ்வே எனக்கு எப்போதும் உற்சாகம் தருவதாயிருந்தது. தற்போது மதிப்பிற்குரிய படைப்பு குழுமத்தின் மூலம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மனமகிழ்வோடு கலந்துகொண்டேன்.ஐயாவின் கரங்களில் எனது கவிதைக்குழந்தை தவழ்ந்தை எண்ணி எண்ணி பெருமைபட்டுக்கொண்டிருந்தேன். தற்போது ஐயாவின் வாழ்த்துமடல் மேலும் மகிழ்ச்சியூட்டுகிறது.படைப்புக்குழுவுக்கும், ஐயாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 • Babeetha Thangamuthu Avatar
  Babeetha Thangamuthu - 1 month ago
  படைப்பு குழுமதிற்கும் கவிஞர் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. படைப்பு குழுமத்தின் வழியாக ஐயாவை என் கவிதை அடைந்ததே எனக்கு கிடைத்த மிக பெரிய விருது. வெற்றி தோல்வி கவிதைகளுக்குள் என்றும் கிடையாது. சிறப்பு.. மிகச் சிறப்பு என்ற இரண்டு பிரிவுகளே உண்டு.. மிகச் சிறப்பாக கவி பாடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கவிஞர் ஐயாவையும் படைப்பு குழுமத்தையும் மனமாற வணங்குகிறேன்.. நன்றி..

 • Siva Sanmugam Avatar
  Siva Sanmugam - 1 month ago
  இனிய வாழ்த்துக்கள்.. தொடர்க உங்கள் இலக்கிய பணி...

 • Mihraj Hussain Avatar
  Mihraj Hussain - 1 month ago
  இனிய நல்வாழ்த்துகள்.. எங்களின் படைப்புகள் ஐயா அவர்களின் கரங்களில் என்பதே மிகச் சிறப்பு.. படைப்பு குழும அனைத்து நிர்வாகிகளுக்கும் அன்பின் வாழ்த்துகள்

 • Nagalakshmi N Avatar
  Nagalakshmi N - 1 month ago
  கவிஞர் மேத்தா அவர்கள்மிக மிக போற்றப்பட வேண்டியவர். படைப்பு குழுமம் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 • am mubarak barak Avatar
  am mubarak barak - 1 month ago
  கவிஞர் ஐயா மு.மேத்தா அவர்களைப் போலவே போற்றப்பட வேண்டியது நமது குழுமமும் தான்... முகவரி தேடி அலைபவர்களுக்கு முகவரியாய் இருக்கிறது... நன்றி ஜின்னா அவர்களுக்கும் மற்ற படைப்பு குழும நண்பர்களுக்கும்.... மு.முபாரக்

   Ameerjaankaadhar Avatar
  Ameerjaankaadhar - 1 month ago
  கவிஞர் மு.மேத்தா அவர்களின் உழைப்பு மகத்தானது அவரின் இடைவிடா இலக்கிய உழைப்பு வாழும் தலைமுறைக்குப் பாடமாகவும் வழிக்காட்டுதலாகவும் இருக்கும், படைப்பு குழுமத்தைப் போலவே கவிஞருக்கும் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறது என் அன்பின் மனம்... ~கா.அமீர்ஜான்

 • Veeravel Avatar
  Veeravel - 1 month ago
  மகிழ்வான நன்றிகள் ஐயா..!

 • செல்வராஜ் ஏகாம்பரம் Avatar
  செல்வராஜ் ஏகாம்பரம் - 1 month ago
  படைப்பின் மைல்கல் இந்த மதுவிலக்கு விழிப்புணர்வுப்பரிசுப்போட்டி.சமூக பிரக்ஞையுடன் காவல்துறையும் கைகோர்த்து இணைந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.இதில் என் கவிதையும் கலந்துகொண்டிருக்கிறது.மகிழ்ச்சியாக உள்ளது.மது அரக்கனைக் கொல்லும் மகத்தான பணியில் ஈடுபட்ட படைப்புக்குழுமத்தார்க்கு போற்றுதலுக்குரியநன்றி.

 • கவிஞர் கவி செல்வா Avatar
  கவிஞர் கவி செல்வா - 1 month ago
  கவிஞர் மு.மேத்தா அவர்களின் வாழ்த்துகள் கண்டு மகிழ்கிறேன். கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் காவல்துறைக்கும் படைப்புக் குழுமத்திற்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

 • யூசுப் ஜாகிர் Avatar
  யூசுப் ஜாகிர் - 1 month ago
  தமிழ் வாழும் காலமெல்லாம் தமிழுக்கு உழைப்பவர்களின் புகழ் வாழும், காலம் கடந்து போனாலும் தமிழ் தடையை தாண்டி சிகரம் ஏறும். கவி பெருந்தகைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்,வணக்கங்களும்...!!! மக்கள் நலனில் அக்கறை கொண்ட காவல் துறைக்கும், கவிஞர்களின் மேல் அக்கறை கொண்ட படைப்பு குழுமத்திற்கும், தமிழின் மேல் அக்கறை கொண்ட நடுவர் கவிஞர் மு.மேத்தா ஐயா அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்...!!!💐💐💐

 • jamaldeen firoskhan Avatar
  jamaldeen firoskhan - 1 month ago
  மிகவும் காத்திரமான முயற்சிளையும் படைப்பாளிகளுக்கான உத்வேகதையும் படைப்புசெய்து வருகிறது வாழ்த்துகள்

 • சூர்யநிலா Avatar
  சூர்யநிலா - 1 month ago
  அய்யாவின் கண்ணீர் பூக்களின் சோக வாசம் இன்னமும் எங்கள் மனதில்..

 • ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா Avatar
  ஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா - 1 month ago
  கவிஞர்.மு.மேத்தா அவர்களின் பாராட்டும்,பங்கெளிப்பும் சிறப்பானது, சிகரத்தின் பேனா முனை படைப்பாளர்கள் அனைவரையும் அரவணைத்து கவிச்செல்வமாய்ப் போற்றுவது மகிழ்ச்சியில் மகிழ்ச்சி . எந்த ஆக்கத்தையும் நவினமாய் எடுத்துச் செல்லும் படைப்பு குழுமத்தை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

 • நிலவை பார்த்திபன் Rathinasabapathy Avatar
  நிலவை பார்த்திபன் Rathinasabapathy - 1 month ago
  வாழ்த்து மடல் கண்டு மகிழந்தோம். ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும் நமக்காக நேரம் ஒதுக்கி சிறப்பித்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.

 • புதுக்கவி நேசமுடன் ஈசு Avatar
  புதுக்கவி நேசமுடன் ஈசு - 1 month ago
  மானுட மகிழ்ச்சியில் மகிழ்ந்து போவதும் உலக துயரத்தில் துவண்டு போவதும் நல்ல ஒரு படைப்பாளியின் நல்குணங்களாகும் அவ்வரிசையில் தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமாக நமக்குத் தலைமை தாங்கிய நமக்கெல்லாம் கவிதை படைப்புகளின் தாத்தா ஐயா மு மேத்தா அவர்களின் வரிசையில் நாமும் நிற்கிறோம் என்கின்ற பெருமையோடு இப்போட்டியால் இணைந்துள்ள கவித்தோழர்களே காவல்துறைக்கும் கைக்குலுக்குவதோடு படைப்பு குழுமத்திற்கும் படையலிடுவோம் வீர வணக்கங்களை... வேறெங்கும் நாட்டின் பிரச்சினைகளை நகமாக வெட்டியெறிய கவிஞர்களே கையிலெடுப்போம் நம் கவிதை கருவிகளை இணைவோம் இதுபோன்றதோர் இன்னுமொரு கவி மாலையில்... நேசமுடன் ஈசு🖋🙏🏼🤝

 • agatha Senthil Avatar
  agatha Senthil - 1 month ago
  மிக்க மகிழ்ச்சி. மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.முன்னெடுத்து சிறப்புடன் இப்போட்டியை நடத்திய படைப்புக்குழுமத்திற்கும்,காவல்துறைக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்

 • Jinna Asmi Avatar
  Jinna Asmi - 1 month ago
  மிக்க நன்றிகள் அய்யா... உங்கள் பணி ஓய்வு நிலையிலும் தமிழுக்காக நீங்கள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நற்காரியங்களுக்காகவே ஒரு சல்யூட் உங்களுக்கு... பின்னாலிருந்து உழைக்கும் அனைவருக்கும் அன்பின் நன்றிகள்

 • Mahendran Narpuvi Avatar
  Mahendran Narpuvi - 1 month ago
  நெகிழ வைக்கின்ற மகிழ்ச்சி செய்தி. புவியிதை செம்மை செய்யக் கவியினை உளியாக்கும் முயற்சிக்கு உந்துகின்ற நல்லுள்ளங்களுக்கு உளம் நிறைந்த நன்றி

  Jinna Asmi Avatar
  Jinna Asmi - 1 month ago
  மகிழ்ச்சி

 • Selva Mani Avatar
  Selva Mani - 1 month ago
  மிக்க மகிழ்ச்சி, ஐயாவின் தமிழ் பணியில் மகிழ்கிறேன். நன்றிகள் பல நம் குழுமத்திற்கும், காவல் துறைக்கும்

  Jinna Asmi Avatar
  Jinna Asmi - 1 month ago
  மகிழ்ச்சி