சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி - 2020 --------------------------------------------------------------- அன்புள்ளம் கொண்ட இளம் தலைமுறையினருக்கு அன்பார்ந்த வணக்கங்கள்...
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "சர்வதேச காணொளி பேச்சுப்போட்டி" இந்தாண்டு முதல் மாணவர்களுக்கெனப் பிரத்யேகமாக நடத்த படைப்புக்குழுமம் திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன... தயவுகூர்ந்து பொறுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்துப்பகுதியில் (கமெண்ட்ஸ்) கேட்டுத் தெரிந்துகொள்ளவும்...
பரிசு விவரம்: மொத்தப் பரிசு : 20,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபதாயிரம் ரூபாய்).
முதல் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்).
இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய்).
மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 2000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய்).
மக்கள் பேச்சாளர் விருது : 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றாயிரம் ரூபாய்)
ஆக மொத்தம், பரிசுத்தொகை 20,000 ரூபாயானது, வெற்றிபெறும் 4 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். மேலும் முதல் பரிசு பெறும் மாணவர்/மாணவியரின் கல்லூரிக்குச் சுழற்கோப்பை வழங்கப்படும். மேலும் சிறப்பாக பங்களிப்பு செய்யும் 10 மாணவர்/மாணவியருக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசளிக்கப்படும்.
போட்டி விவரம்:
தலைப்பு: பெரிதினும் பெரிது கேள்
கால அளவு: மூன்று நிமிடங்கள்
பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்ப: +91 82486 93805 (வாட்ஸாப் வழியே) அல்லது padaippumedia@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வி டிரான்ஸ்பர் மூலமும் அனுப்பலாம்.
கடைசி நாள் :25-ஆகஸ்ட்-2020 இரவு மணி 12 வரை
போட்டி நடுவர் : படைப்பாளி பாரதி கிருஷ்ணகுமார்
முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் அதிகபட்சம் ஒருமுறை மட்டுமே பேசி வீடியோவில் பதித்து அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 25-ஆகஸ்ட்-2020 அன்று இரவு 12 மணிக்குள் +91 82486 93805 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் வழியாகவோ அல்லது padaippumedia@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வி டிரான்ஸ்பர் மூலமாகவோ அனுப்பிவிட வேண்டும்.
2. பேசி அனுப்பும் காணொளி மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
3. போட்டிக்கு அனுப்பும் காணொளியைப் போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. போட்டிக்கு வந்த காணொளிகள் எல்லாம் ஆய்வு செய்யப்படும். பிறகு ஒவ்வொரு காணொளியும் தனித்தனியாகப் படைப்பு டிவியின் (YouTube) போட்டிப் பகுதியில் 26-ஆகஸ்ட்-2020 அன்று ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடப்படும். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.
4. போட்டிக்கான அனைத்துப் பரிசுகளையும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார். நடுவர் தீர்ப்பே இறுதியானது.
5. நடுவர் தேர்வு செய்யும் பரிசில்லாமல் யூட்டுயூப் (YouTube) இல் பொதுமக்கள் கொடுக்கும் லைக், கமெண்ட்ஸ், பகிர்வு மற்றும் வீவ் கவுண்ட் (பார்வை எண்ணிக்கை) வைத்து மக்கள் செல்வாக்குமிக்க இளம் பேச்சாளர் என்ற சிறப்பு விருதும் பிரத்யேகமாகக் கொடுக்கப்படும்.
6. போட்டிக்குக் காணொளியை அனுப்பும்போது கட்டாயம் மாணவர்/மாணவி பெயர், டிகிரி/பட்டம் பெயர், படிக்கும் ஆண்டு, கல்லூரி பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை எழுதியும், புகைப்படம் மற்றும் கல்லூரியின் ஐடி கார்ட் (அடையாள அட்டை) ஆகியவற்றை நகல் படம் எடுத்தும் இணைத்து அனுப்ப வேண்டும். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருப்பவர்களுக்கு இன்னும் அடையாள அட்டை கொடுக்கவில்லை என்றால் வேறு ஏதாவது சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
7. போட்டியில் பங்குகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்பாளர் மின் சான்றிதழ் நடுவராக இருக்கும் பேச்சாளர் கையொப்பமிட்டு வழங்கப்படும்.
8. சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஆறு பேச்சாளர்களுக்கு மட்டும் நாம் நடத்தும் விழாவில் நேரடியாகப் பிரிண்ட் செய்த சான்றிதழ் வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அப்போது அளிக்கப்படும். அங்கு மக்கள் செல்வாக்கு மிக்க இளம் பேச்சாளர் என்ற அங்கீகாரம் பெற்ற பேச்சாளரும் கவுரவிக்கப்படுவார்.
9. ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு மேல் வரும் காணொளிகளைப் போட்டிக்குத் தேர்வு செய்ய இயலாது.
10. வணக்கம் சொல்லிவிட்டு நேரடியாகத் தலைப்புக்குள் சென்றுவிடலாம். கால அளவு மூன்று நிமிடங்கள் என்பதால் மற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
11. ஒரே கல்லூரியிலிருந்து எத்தனை மாணவ மாணவிகள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காணொளியை அனுப்பக்கூடாது. அதாவது ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருமுறை மட்டுமே பேசி அனுப்ப வேண்டும். மேலும் ஒருவரே ஒரே வீடியோவை மாற்றி அனுப்புவதாகச் சொல்லி மீண்டும் மீண்டும் அனுப்பக்கூடாது.
12. ஒருமுறை அனுப்பி விட்டால் மீண்டும் மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்க.
13. விதிமுறைக்கு உட்பட்டு வராத காணொளிகளைத் தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.
14. தயவுசெய்து போட்டி நடந்து பரிசு அறிவிக்கும் வரை வேறு எங்கும் காணொளிகளைப் பதிய வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்தப் போட்டி நடந்து முடிய முக்கியக் காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
15. இந்தத் தகவலை முடிந்தவரை பகிருங்கள். சர்வதேச அளவில் உள்ள தமிழ் மாணவ/மாணவியர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.
வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப்படும்.
Jinna Asmi - 4 years ago