logo

64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி


நூல் பெயர்    :  64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி
                     (கவிதைகள் )

ஆசிரியர்    :  ஷெண்பா (மஞ்சு கண்ணன்) 

பதிப்பு            :  முதற்பதிப்பு 2020

பக்கங்கள்    :  98

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  ரவிபேலட் 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 100
தனித்திரு என்பது தனிமையை மட்டும் குறிப்பதல்ல; தனித்தன்மையையும் தனித்துவத்தையும்கூட குறிக்கும் என்ற புரிதலிலிருந்து தொடங்குகிறது,  இந்நூலுக்கான உயிர்ப்பு. மனித வாழ்விலும் இலக்கியத்திலும் அகம், புறம் எனப் பிரித்து வாழ்வே இலக்கியமாகவும், இலக்கியமே வாழ்வாகவும் எழுத்தில் சாத்தியப்படுத்திய தமிழே தனித்துவத்தின் சான்று. எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் இல்லாத பல மொழிகளுக்குநடுவே எழுத்து, சொல், பொருளுக்கும் இலக்கணம்கொண்ட ஒரு மொழியாக தமிழ் இருக்கிறது என்பதே தனித்தன்மைக்கான சான்று. தனித்துவம் என்பது நேர்மை, சுயமரியாதை, அடையாளம், திறன், ஆற்றல், உணர்வு, ஊக்கம், தோற்றம், மாற்றம், செய்யும்விதம் எனப் பல பரிமாணங்களில் இருந்தாலும், அதன் தனித்தன்மைக்கேற்றவாறு அந்தந்த சூழ்நிலையின் சூட்சுமங்களை அடையாளமாகவும் ஆதாரமாகவும் மாற்றுவதே தனித்துவத்தின் தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட தனிச்சிறப்புகளில் இக்கால வாழ்வையும், சமூகத்தையும் இரு விழிகளில் ஏந்தி, காண்பவர்களுக்குக் கவிதைவழியே காட்சிப்படுத்தியிருப்பதே ’64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி’ என்ற இந்நூல். வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நேசிக்கும் கட்டங்கள் நீண்டுகொண்டே செல்லும் என்பதே இந்நூலின் பலம். 

கேரள மாநிலம், கோட்டக்கல்லைப் பிறப்பிடமாகவும், கோவையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ஷெண்பா அவர்களுக்கு இது, முதல் நூல். இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர். படைப்புக் குழுமம் நடத்திய பரிசுப் போட்டிகளில், கவிஞர் கலாப்ரியா அவர்களால் முதல் பரிசுக்கும், கவிஞர். யூமா வாசுகி மற்றும் கவிஞர். யவனிகா ஸ்ரீராம் அவர்களால் இருமுறை சிறப்புப் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தின் ‘சிறந்த பங்களிப்பாளர் விருது’ பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.