logo

ஆரிகாமி வனம்


ஆரிகாமி வனம்
முகமது பாட்சா

மௌனப் புரட்சி என்பது வெறும் சப்தங்களால் ஆனதல்ல மாறாக அது வார்த்தைகளாலான எழுத்துப்புரட்சி. அப்படிப்பட்ட எழுத்துகளே, சப்தமிட்டு சொல்லாமல் சபதமிட்டு எழுதி சில சகாப்தங்களை படைத்திருக்கிறது வரலாற்றில். இப்பிரபஞ்சத்தின் தராசில், தாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை, பார்த்தவைகளை, பாதித்தவைகளை நிறுத்திக் காட்டுவதே படைப்புகள். அவ்வாறான சமூக சிந்தனைமிக்க படைப்புகளை அதிலும் ஆழ்மன நிலையில் தோன்றும் சத்திய வார்த்தைகளைக் கொண்டு கட்டமைத்து இருப்பதே "ஆரிகாமி வனம்" தொகுப்பு.  காடுகளை அழித்து காகிதம் செய்துகொண்டிருக்கிறோம் ஆனால் வருங்காலத்தில் காகிதத்தில் மட்டுமே காடு இருக்கும் நிலை வரலாம் என்பன போல எதிர்கால வாழ்வியலை எதார்த்தமாக சொல்லி இருப்பதும் உலகளாவிய சிந்தனைகளை உரக்க சொல்வதால் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் கொடுத்திருப்பதும்  இத்தொகுப்பின் பலம்.
காரைக்காலை வசிப்பிடமாக கொண்ட படைப்பாளி "முகமது பாட்சா" அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவரது பல படைப்புகள்  பிரபல பத்திரிகை இதழ்களிலும், படைப்பு கலை இலக்கிய திங்களிதழான தகவு மின்னிதழிலும் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் மற்றும் படைப்புக் குழுமம் நடத்திய பரிசுப்போட்டியில் கவிஞர் வண்ணதாசன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூல்

ஆரிகாமி வனம்

நூலாசிரியர்

முகமது பாட்சா

நூல் வகைமை

கவிதை

நூல் விலை

100

வெளியீடு

படைப்பு பதிப்பகம்

அட்டைப்படம்

கமல் காளிதாஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.