நூல் பெயர் : அம்மே
(தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
தொகுப்பாசிரியர் : சலீம் கான் (சகா)
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 222
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 180
கலை மற்றும் இலக்கியத்தின் ஆதித்தாய், கதை. எளிமையும் சுவாரஸ்யமுமே அதன் ஆகப்பெரும் பலம்.
கதை கேட்டு வளராத குழந்தைகளே இல்லை என்ற அளவுக்கு அதன் ஆதிக்கம் பிறப்பில் தொடங்கி, இளமையிலேயே ஒவ்வொருவரையும் ஆக்கிரமிக்கும் இலக்கியக் காரணியாகவும் மாறிவிடுகின்றன, இக்கதைகள். எவ்வகை இலக்கியமாக இருந்தாலும் அதை எழுத்து வடிவில் வெளியே வரும் முன் அது ஒரு கதையாகவே இருக்கும். கதை கேட்டு வளர்ந்த நம் மனமும் அறிவும் எல்லாவற்றையும் கதையாகவே காட்சிப்படுத்தி சேமித்துவைக்கும் ஆற்றல்கொண்டது என்பதே நிதர்சனம். அப்படிப்பட்ட ஆற்றலை வளர்க்கும்வகையில், ‘அம்மையார் ஹைநூன்பீவி’ நினைவு பரிசுப் போட்டி வாயிலாக ’படைப்பு சிறுகதைப் போட்டி’ என்ற போட்டிக்களம் அமைத்து எழுதக் கேட்டது, படைப்புக் குழுமம். சர்வதேச அளவில் நடந்த இப்போட்டியில் பல நாடுகளிலிருந்து பலநூறு படைப்பாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். போட்டிக்கு வந்த பலநூறு படைப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில், உங்களின் மனதில் நிறைந்துகொண்டிருக்கும் இந்த ‘அம்மே’ தொகுப்பு. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் பரிசுப் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.