பொலம்படைக் கலிமா
ஜோசப் ஜூலியஸ்
வரலாற்றை எடுத்துச் சொல்ல இலக்கியம் எப்போதும் ஒரு மிகச் சிறந்த கருவியாக பயன்பட்டது. அதை விட, பல வரலாறுகள் இலக்கியம் வாயிலாகத்தான் அறியவே முடிந்தது என்பது இலக்கியத்தின் பெருமையை சொல்லும் மற்றொரு பரிமாணம். அதிலும் சங்க இலக்கியங்கள் பற்றி சங்கம் வைத்து சொன்ன பெருமை தமிழுக்கு உண்டு. அப்படிப்பட்ட சங்க இலக்கியங்களின் பரிமாணங்களையும் அதன் பரிணாம வளர்ச்சியாக இருக்கும் அழகியல், யாப்பியல், இசை, வனப்பு, அணி நலம், எண்ண ஊற்றுகள் போன்ற இலக்கியத்தின் நெருங்கிய கூறுகளை ஆராய்ந்து தொகுக்கப்பட்டிருப்பதே பொலம்படைக் கலிமா என்ற ஆய்வு நூல். இலக்கிய அறிவையும் அதில் ஞானத்தையும் பெற விரும்புவோர்க்கு இந்நூல் ஒரு பொக்கிஷம் என்பது இதன் பெரும்பலம்.
சென்னையை வசிப்பிடமாகவும், பொருளாதாரம் மற்றும் கிறிஸ்துவ இறையியலில் முதுகலை பட்டங்கள் பெற்றவரும், தமிழக அரசின் தணிக்கைத் துறையில் உதவி இயக்குனராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவருமான படைப்பாளி ஜோசப் ஜூலியஸ் அவர்களுக்கு இது எட்டாவது தொகுப்பு. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் புலமைமிக்கவர். மேலும் தன் கவிதைக்காக படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும் மற்றும் தன் கட்டுரைத் தொகுப்பிற்காக படைப்பு இலக்கிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
நூல்
பொலம்படைக் கலிமா
நூலாசிரியர்
தா. ஜோசப் ஜூலியஸ்
நூல் வகைமை
ஆய்வுக் கட்டுரை
நூல் விலை
70
வெளியீடு
படைப்பு பதிப்பகம்
அட்டைப்படம்
முகம்மது புலவர் மீரான்