சொல் எனும் வெண்புறா
மதுரா (தேன்மொழி ராஜகோபால்)
அடைகாக்கும் தாய்ப் பறவையின் அலகிலிருந்து வழியும் ஒருவவ துளி அன்பை போல நிகரானதொரு நிகழ்வு இவ்வுலகில் எதுவுமில்லை. அதைப்போலவே ஒரு சேய் தன் தாயைப்பார்த்து தனது மொழியில் முதன் முதலாக அழைக்கும் அந்த ஒற்றை சொல் எல்லா மொழிகளிலும் மிக உயர்ந்த சொல் எனவும் சொல்லி விடலாம். அப்படிப்பட்ட உருகும் வார்த்தைகளை ஒன்றுதிரட்டி கொஞ்சம் நவீனம், கொஞ்சம் அடர்த்தி, கொஞ்சம் புதுமை கலந்து உருவாக்கப்பட்டிருப்பதே "சொல் எனும் வெண்புறா" நூல். சிலந்தி கூட்டில் சிக்காத சிலந்தியின் வாழ்தலைப்போலொரு நீட்சியை ஒவ்வொரு கவிதையும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் வாசிக்கத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும். அதே சிலந்தி கூட்டில் சிலந்தியைத் தவிர மற்றவை எல்லாமே சிக்கிக் கொள்ளும் தன்மையை பெற்றிருப்பதைப் போலவே வாசிப்பவரும் வரிகளின் வசீகரித்தில் சிக்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
தஞ்சையை பிறப்பிடமாகவும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான படைப்பாளி தேன்மொழி ராஜகோபால் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. சமூக வலைதளங்களிலும் வார இதழ்களிலும் மதுரா என்ற பெயரில் எழுதிவரும் இவர், தன் நவீன கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். இவரின் கவிதைக்கு சான்றாக படைப்புக் குழுமத்தின் மாதாந்திர பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியர்
மதுரா (தேன்மொழி ராஜகோபால்)
நூல் வகைமை
கவிதை
நூல் விலை
80
வெளியீடு
படைப்பு பதிப்பகம்
அட்டைப்படம்
முகம்மது புலவர் மீரான்