நூல் பெயர் : திரு உத்தரகோசமங்கை (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
114
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 160
மொழியின் நயத்திற்காகவே எழுதப்படுகின்ற கவிதை மரபுகளை உடைத்தும், முதல் வரியில்
தொடங்கும் அர்த்தம், அதைத் தொடரும் அடுத்த வரிகளிலேயே குலைந்துபோவதை தடுத்தும், வெறும்
சொற்கட்டு மட்டுமே எஞ்சுகிற படைப்புகளை, அர்த்தத்தை மீறி மேவுகிற மொழியை விடுத்தும், உயரப்பறக்கின்றன விக்ரமாதியனின் கவிதை உலகம்.
இக்காலக் கவிதைகளில் அர்த்தத்தையோ, பொருளையோ தேடிக்கொண்டிருக்க முடிவதில்லை
என்ற கோணத்தைத் திருப்பி போடுகின்றன. அர்த்தமும் பொருளும் இல்லாத கவிதைகளில் ஆத்மார்த்தமும்
தொலைந்து விடும் என்கின்றன. ஆத்மார்த்தம் தொலைந்த கவிதையில் அதை எழுதிய கவிஞனும் காணாமல்
போகக்கூடும் எனவும் உணர்த்துகின்றன. கவிஞன்
எழுதுவதும் வாசகன் படித்து உணர்ந்து கொள்வதும் ஒன்றல்ல. ஒவ்வொரு வாசகனின் கவித்துவ மனமும் தனக்குத்தானே
வேறொரு கவிதையை எழுதிக்கொள்கிறது. கவிஞன் சொல்லக்கருதும் பொருளுக்கும் அதை வெளிப்படுத்தும்
அவனுடைய சொற்களுக்கும் உள்ள உறுதியான, உண்மையான பிணைப்புமட்டுமே வாசகனை ஈர்க்கமுடியும்.
அப்படி வாசகர்களால் ஈர்க்கப்பட்ட கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
“திரு உத்தரகோசமங்கை” நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.