நூல் : முன்னிரவில் பின்னிரவில்
நூல் வகைமை :
கவிதைகள்
ஆசிரியர் :
T. கண்ணன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 106
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
கவிதைகள் ரகசிய அடி ஆழத்தின் தீக்கங்குகள் என்று கொண்டால்
அதை எழுதியவன் அவற்றை காலத்தின் நித்தியம் போல நிற்கும் மாபெரும் மலையில் இருந்து ஒரு
சில்லை எப்படி சாதுர்யமாக வெட்டி எடுக்க இயலுமோ அப்படி மொழியின் காருண்யத்திலிருந்து
வெட்டி எடுக்க வேண்டும்.
இந்தக் கதைகளில் மகா எளிமையுடன் தவிக்கும் உக்கிரமான ஒரு உயிர் தன்னைச் சுற்றியுள்ள பிணி மூப்பு சாக்காடு என்று மட்டுமல்ல அகம் புறம் என்று பிரிவுகளில் அகப்படாத சகல மனித எத்தனங்களையும் தன் அதிநுட்ப மோப்பத்தால் மொழியின் துணை கொண்டு விட்டேத்தியாய் கடந்து செல்லும் போதே விசும்பின் நிழலின் மீது மகா பொறுமையையும் விட்டுச் செல்கிறது.