நூல் : இலைகளின் மீது கண்ணீர்
நூல் வகைமை :
கவிதைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 200
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 320
பால்யத்திலிருந்தே கவிதையை நேர்ந்து கொண்ட பாலை நிலவன் மனித
எத்தனங்களுக்கு மீறிய அசேதன உயிர்ப்பரப்பின் ஞாபகத்தைப் பின் தொடரும் கவியாக வெளிப்படும்
போதே நாம் இது காறும் கண்டும் காணாத விட்ட ஜீவராசிகளின் மொழியையே பிரபஞ்ச உரையாடலாக
கவிதையில் நிகழ்த்துகிறார். வெளிச்சம் படாத மிக அந்தரங்கமான கவிதையின் ஆன்மாவோடு ஒளிந்து
கொண்டு வாழும் இயல்புடைய பாலை நிலவெனில் முதல் கவிதை அவருடைய பனிரெண்டாவது வயதில் பிரசுரம்
கண்டது.
ஆரவாரத்தின் மேடைப் புகழுக்கு தப்பியோடும் தன்னந் தனிமையான
கவி ஒருவனின் தன்மையமான இக்கவிதைகள் மனிதனையும் பிற உயிர்களையும் அண்ட கோலத்தின் மாபெரும்
கருணையில் பிணைக்கிறது.