பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை
நூல் பெயர் : பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை
(கவிதைகள் )
ஆசிரியர் : ப்ரணா
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 96
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
தேடும் கண்களுக்குத் தெரியப் போவதில்லை பார்வையின் பயணம், வாழ்வின் அர்த்தம் என்று. எழுதும் எழுத்துகளுக்குத் தெரியப் போவதில்லை இது வெறும் காகிதம் அல்ல, சமூகத்திற்கான ஆயுதம் என்று. வாழ்வு என்பது வரையறுக்கப்பட்ட இலக்கியம். இலக்கியம் என்பது எழுதப்பட்ட வாழ்வு. வாழ்வுக்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை எழுத்துக்கும் தலையெழுத்துக்கும் இடைப்பட்ட தூரம்தான். எந்த ஒரு சூழல் எழுத்தாளனை எதுவுமே செய்ய விடாமல் எழுத்தாகத் தன்னை மாற்றி, எழுதிக் கொள்ளச் செய்கிறதோ, அந்த எழுத்து இலக்கியமாகி விடுகிறது. அவ்வகையான இலக்கியம் அந்த எழுத்தாளருக்கு மட்டுமல்ல அவர் சமூகத்திற்கும், அவர் சார்ந்த இனத்திற்குமான அடையாளமாகி விடுகிறது. அப்படிப்பட்ட சமூக அடையாளங்களை எல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனத்தில் எதார்த்தச் சிறகுகளை உதிர்த்து விட்டுச் செல்லும் என்பதே இந்நூலின் பலம்.
தஞ்சையைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ப்ரணா அவர்களுக்கு இது ஏழாவது நூல்.
பல்வேறு வார இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள், நகைச்சுவை துணுக்குகள் வெளியாகியுள்ளன. இவர் இசைப்பாடல் எழுதுவதிலும் புலமைப் பெற்றவர். கல்கி குறுநாவல் போட்டியில் 20,000 ரூபாய் பரிசும், வார்த்தா சிறுகதை போட்டியில் முதல் பரிசாக 10,000 ரூபாய் பரிசும், தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசும் என இன்னும் பல பரிசுகளையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம் சார்பாக “அசோகமித்திரன் நினைவு” விருது உட்பட எண்ணற்ற விருதுகளையும் பெற்றுள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.