logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 601 - 620 of 735

Year
Award
   

கவிச்சுடர் விருது

  • வீ கதிரவன்

0   1181   0  
  • March 2019

மாதாந்திர பரிசு

  • ஜெ.ப. செல்வம்

0   1185   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • சுரேஷ்பாபு ராசேந்திரன்

0   896   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • அ.க இராஜாராமன்

0   980   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • டீன் கபூர்

0   939   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • ஜே ஜே அனிட்டா

1   903   0  
  • February 2019

கவிச்சுடர் விருது

  • ரிஸ்கா முக்தார்

0   1681   0  
  • February 2019

மாதாந்திர பரிசு

  • கரு. கிருஷ்ணமூர்த்தி

0   882   0  
  • January 2019

மாதாந்திர பரிசு

  • தமிழ்மணவாளன்

0   1438   0  
  • January 2019

மாதாந்திர பரிசு

  • வ.இரா. தமிழ்நேசன்

0   1641   0  
  • January 2019

மாதாந்திர பரிசு

  • நிஸ்பன் ஹம்ஜா

0   1249   0  
  • January 2019

மாதாந்திர பரிசு

  • அ. வால்டர் ராபின்சன்

0   1391   0  
  • January 2019

கவிச்சுடர் விருது

  • மதுசூதன்

0   1027   0  
  • January 2019

கவிச்சுடர் விருது

  • சுயம்பு

0   1810   0  
  • December 2018

மாதாந்திர பரிசு

  • சிவயட்சி

0   1204   0  
  • December 2018

மாதாந்திர பரிசு

  • மு. இளையா

0   952   0  
  • December 2018

மாதாந்திர பரிசு

  • பெனடிக் அருள்

0   990   0  
  • December 2018

மாதாந்திர பரிசு

  • அ.வேளாங்கண்ணி

0   1136   0  
  • December 2018

மாதாந்திர பரிசு

  • நுஹா

0   909   0  
  • December 2018

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி-2018

  • சிறப்பு பரிசு - கயல்

0   999   0  
  • November 2018

கவிச்சுடர் விருது

வீ கதிரவன்

கவிச்சுடர் வீ கதிரவன் – ஒரு அறிமுகம்
*************************************************** 
கவிதையென்பது இயற்கையாகப் பெய்யும் மழையை போன்றது. கனவுகள் + கற்பனைகள் இருந்தாலும் யதார்த்த வெளியில்தான் அவை அதிகம் சுற்றிச் சுழன்று வருகின்றன. காணும் காட்சிகளில் அவை மகிழ்ந்து போகிறது அல்லது நெகிழ்ந்து போகிறது. அப்படிப்பட்ட யதார்த்த வரிகளின் சொந்தக்காரர்தான் படைப்பாளி வீ.கதிரவன். அவரது படைப்புகளை உன்னிப்பாக கவனித்துவரும் நமது படைப்பு குழுமம்  2019-மார்ச் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினையளித்து கௌரவம் செய்கிறது.

கவிஞரின் பள்ளிப் படிப்பு 8ம் வகுப்போடு  நின்றுவிட்டதென்றாலும், அவர் நேசிக்கும் கவிதைகள் அவரை உயர் படிப்பின் தரத்திற்கு உயர்த்தி பிடிக்கின்றன.

பிறந்தது காரைக்கால் மாவட்டம் விழிதியூர் கிராமம் என்றாலும் அவரது வாழ்க்கைப் பயணம் புதுச்சேரியில் 48 ஆண்டுகளாக தொடர்கிறது. தந்தையார் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அம்மா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். குடும்ப சூழலின் காரணமாக பெயிண்டராகவும் பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் கிடங்கி நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.

அவரது கவிதைகள் சராசரி மனிதர்களின் உலகத்தை உற்று கவனிக்கிறது. 

எளிமையான சொல்லடல்களின் மூலமாக, வரிகளின் ஆழத்தை வாசிப்பவர்களின் உள்ளத்திற்கு எளிதில் கடத்திவிடுகிறார். 

கவிச்சுடர் வீ கதிரவன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
ஒரு சிறுகதையையே கவிதையாக வடித்து தந்திருக்கிறார் கவிஞர். அதுவும் அந்த கிராமத்திற்கே உரிய மொழி நடையுடன்... 

மூத்தாள் பிள்ளைப்பேறு இல்லாதவளென்று அந்த வீட்டிற்கு இரண்டாவதாக வந்த சின்னவள் பெற்றக் குழந்தையை தன் குழந்தையாகவே வளர்க்கிறாள் மூத்தாள். 

ஒரு தாயாக எல்லாவுமாக இருக்கும் மூத்தாள் , நீச்சலடிக்க போன மகன் தண்ணீரில் மூழ்குவதை கவனித்துப் பதறிக் காப்பாற்றியவள் அவனை பாசத்தின் மிகுதியால் நாலடி அடித்துவிடுகிறாள்... 

அதற்கு வீட்டிலுள்ளவர்கள் பிள்ளை பெத்திருந்தாதானே அருமைத் தெரியும் என்று திட்டிவிட மனமொடிந்து போகும் மூத்தாள், தூக்கிட்டு தொங்குவதற்காக செல்கிறாள்... கவிஞர் இந்தக் கவிதையை அங்கேயே நிறுத்தாமல் யாராவது அவளைக் காப்பாற்றுங்கள் என்று பதறுகிறார்... அவள் வயிற்றிலும் ஒரு பால் சிசு கருவாகியிருப்பது அவளுக்கே தெரியாதாம்... படியுங்கள் உருக்கமான இந்தக் கவிதையை..

எத்தன சுளுவா சொல்லிப்புட்டா
சின்னவ பெத்ததாச்சேன்னு
பீத்துணி அலசி குளுப்பாட்டி
சோறூட்டி தாலாட்டி
வளத்தவ நானு
நடவு நட்ட காசுல
துணியெடுத்து அழகுபாத்து
சுத்திபோட்டது யாரு
ஒடம்புக்கு முடியலன்னு
ஒத்த மூக்குத்திய அடகு வச்சி
மருந்து மாத்ர வாங்குனது
யாரு
ரெண்டாம்பு பெயிலுன்னு
மூங்கி குச்சியால 
அந்த சாத்து சாத்துனானே
அவுங்கப்பன்
குறுக்க பூந்து அடிய வாங்கி
வெம்புற புள்ளைய மாரோட
அணைச்சுகிட்ட
எனக்கா தெரியாது
பயலுவோட சேந்து
நீச்ச தெரியாம
மூழ்க கெடந்தவன
சுள்ளி பொறுக்க போன நா
எத்தேச்சயா பாத்து
காப்பாத்தி
மனசு கேக்காம பயலுவலோட
சேருவியான்னு ரெண்டு
அடி கொடுத்தது தப்புதேன்
அதுக்குன்னு புள்ளன்னு
பெத்திருந்தா அரும புரியும்னு
பொசுக்குன்னு நெஞ்சு கூட்ட
அத்துபுட்டாளேன்னு
மனசொடுஞ்சி
அந்த புளிய மரத்துல
சுறுக்கு கவுத்த மாட்டுறா
அவ
யாருவது வந்து
காப்பாத்துங்களேன்னு
மூனு நாளா உருவாகியிருக்க
அவ வவுத்துல இருக்க
பிஞ்சு கதறுவது
யார் காதிலையும் ஏன்
அவ காதுலயும் கேக்க வழியில்லதான்......

@@@

இரயில் பயணிகளுடன் பயணிக்கிறது அவரது மற்றுமொரு கவிதை. பச்சை கொடி காட்டியதில் தொடங்கும் கவிதை பரபரப்புடன் நகர்கிறது... ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளுடன் பயணம் செய்கிறார்கள்.. இவை அனைத்தையும் காட்சியாக்கும் கவிஞர்..

எல்லோரையும்
இழுத்துப்போகும்
இரயிலில் எரியும்
நிலக்கரி என்பதும்
ஓர் காலத்தில் வாழ்ந்து கெட்ட
மரங்கள்தான்......
என்று கவிதையை முடிக்கும் விதமே மிக சிறப்பு... இதோ அந்தக்கவிதை....

பச்சை கொடி அசைத்து
கிளம்பச்சொல்லும்
அதிகாரி

பெருமூச்சோடு
கிளம்ப எத்தனிக்கும்
இரயில்

கொடுத்த
தேநீருக்கு காசு 
தராதவனிடம் காசு கேட்டு
நச்சரிக்கும் அவன்

வாங்கிய
தண்ணீர் போத்திலுக்கு
கொடுத்த
மிச்ச காசினை
வாங்காமல்
ஓடத்துவங்கும் அவன்

அடுத்த
இருபத்து நான்கு
மணிநேரமும் கைதியை
பத்திரமாய் நீதிமன்றத்தில்
சேர்க்க வேண்டிய
பயத்தோடந்த புது காவலன்

கோவிச்சு
சண்டயிட்டு சும்மான்னா
என் வீட்டுக்கு
கெளம்பிடுவேன்னு
வீராப்பா அமர்ந்து
கடைசி நேரத்துல
அழச்சி போவான் கணவன்னு
நகரும் வண்டிய பயத்தோட
பாக்கும் மனைவி

தன் ஆதர்ச நாயகன
பட்டணம் போய்
பாத்துடலாம்னு வீட்டுக்கு
சொல்லாம
திருட்டு பயணம் செய்யும்
ஏழாம் வகுப்பு மாணவன்

எப்படியும்
தனக்கென 
காத்திருப்பான் காதலன்னு
வீட்டுல திருடுன
நகையோட கிளம்பும்
காதலி

கடைசி காலத்துல
தன் மனைவி அஸ்திய
மடியில வச்சி
கவலையோட கடக்கும்
அவருன்னு

எல்லோரையும்
இழுத்துப்போகும்
இரயிலில் எரியும்
நிலக்கரி என்பதும்
ஓர் காலத்தில் வாழ்ந்து கெட்ட
மரங்கள்தான்......

@@@

காலதூரத்தின் இடைவெளியில் கை மாறும் பொருட்களை கொண்ட இந்தக் கவிதை சிறியதென்றாலும்... ஞாலத்தின் பெரிது...

தொட்டு தொட்டு
மகிழ்ந்து சிரிக்கும்
பேரனின் கைகளில்
கைபேசி

தொடமுடியாத அருகின்
மூலையில் அமர்ந்திருக்கும்
தாத்தனின் கைகளில்
மரப்பாச்சி பொம்மை....

@@@

கால வோட்டம் கடந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை.. நண்பனின் நினைவுகளை சேமித்து வைத்திருக்கும் இந்தக் கவிதை முடிக்கும் போதும் நலமா நீ எங்கிருக்க? என்று கேட்டுவைத்து  நெகிழ்கிறது.

கம்மாகுளியல்
கால் சேற்றின்
கிண்டல்

மாங்கா
எச்சில் கடியில்
புளிப்பின் மிச்சம்

களிமண்
பொம்மை செய்ய
நமக்கு மட்டுமே
தெரியும் உருவம்

வய
நெல் உருவி
ஐஸ் தின்ன
தித்திப்பு

பள்ளி சோற்றை
ஒரு தட்டில் தின்றே
யார் கழுவ போட்டி

கிழிந்த
டவுசருக்கு
பட்ட பெயர் வச்சி
வெட்கம் மறைக்கும்
கண்ணீர்

திருவிழா
கூட்டத்தில்
கண்டெடுத்த
ஐந்து பைசா

அதில் வாங்கிய
குச்சி ரொட்டி
பொற வரிக்கி

பொங்க
நாளுக்கு காசு கேட்டு
அழுது வாங்கி
பஞ்சு மிட்டாய்
பங்கு போட்டு

அச்சு வெல்லம்
கடி கடிக்க
கடவாயில் ஒழுகி நிக்க

புறங்கை
தொடச்சி 
கால்சட்டை மிச்சம் 
வைக்க

தூக்க நடுவில்
எறும்பு
கடிச்சி வைக்க
வீங்கிய அந்த இடம்
உன்னிடம்
காட்டி நிக்க

நீ
சிரிச்ச
அந்த சிரப்பு
இன்னும் மின்னும்
கண்ணுக்குள்ள

பனங்கா
வண்டி செஞ்சி
டுர்ர்ருனு
பந்தயம் வச்சி

கிட்டி புள்ளு
விளையாட
பான ஒன்னு
ஒடஞ்சி போக
தொடப்ப அடி வாங்கினது

படிப்பாகி
நீ பட்டணம் போக
படிக்காம
நா வயல் பாக்க

செமிக்கா
ஞாபகத்த
சேத்திருக்கேன்
என் நண்பா...

நலமா நீ
எங்கிருக்க..?

@@@

பழைய இரும்பு வாங்கும் கிழவனின் நேசம் அவன்  குடும்பத்தையும் நினைக்க வைக்கிறது...

பழய பாத்திரத்துக்கு
பேரீட்ச பழேய்ய்ய்
பழய இரும்புக்கு
பேரீட்ச பழேய்ய்ய்
பழய பேப்பருக்கு
பேரீட்ச பழேய்ய்ய்னு
தெரு முக்க கத்தி ஏதும்
கெடைக்காம
அழும் தெரு பிள்ளைக்கு
ஒரு பேரீட்சைய கையில கொடுத்து
கன்னம் தட்டி 
சிரிக்கவைத்துப்போகும்
அந்த கிழவன் வீட்டிலும் இருக்கலாம்
பசியோடு
பேரப்பிள்ளைகள்........

@@@

ஆற்றோரம் தவழ்ந்த காதலை அழகாக சொல்லிவரும் கவிஞர் மண் கடத்தலில் தன் காதலையும் கடத்துவது ஒரு வித்தியாசமான பார்வை...

நினைவிருக்கிறதா...?
ஆற்றுப்படுகையில் முன்னே
நீ நடக்க
உன் கால்தடம் ஒற்றி
என் கால்தடம் பதிய பின்
வருவேன் நான்
வளைந்து வளைந்து செல்வாய்
நான் தவிப்பேன்
கிண்டலாய் சிரிப்பாய்
ஒரு கிளிஞ்சல் குத்தியதற்கு
ஆற்றையே சபித்தாயே
துளி உதிரத்திற்கு பதறி
கண்ணீர் உகுத்தாயே
நான் கூட விளையாட்டாய்
சொன்னேன்
ஆறு நிரம்பிவிடப்போகிறதென்று
மண்ணள்ளி கடத்துவதாய்
நினைத்து
காதல் கால்தடங்களை
சுமந்து போகிறது
மண் லாரி
இதோ ஒற்றை கால்தடத்தை
பதியவைக்க முயல்கிறேன்
பதிய மறுக்கிறது
உன் சாபம் பலித்ததபோல
உன்னை போல இறந்துபோயிருந்தது
ஆறு......

@@@

சமையலிலும் சாதூர்யமாக அரசியல் பேசும் கவிதை

வெங்காயம் தக்காளி
பச்சமிளகாய் இஞ்சி பூண்டு
சீரகம் கடுகு உளுத்தம்பருப்பு
கூடவே கத்திரிக்காயென
கூட்டணி வைத்துக்கொண்டது
சமையலறையில் உணவுக்கென
பரிமாறலுக்கான பின்பு
ஒதுக்கப்பட்டு குப்பையில்
சேர்ந்தன சனநாயகமெனும்
கருவேப்பிலைகள்.......

@@@

ஒரு ஏழைவீட்டின் மழை நாள் சில துயரங்களையும் சில மகிழ்ச்சிகளையும் கொண்டு நகர்வதை கவிதையாக படித்துவிடுவது சிறப்பு....

கஞ்சி மட்டுந்தான் காச்சிருக்கேன்
தொட்டுக்க ஏதாவது வாங்கிவரப்படாதாவென
கவலயோட கேக்கும் மனைவி

இன்னைக்கும் கஞ்சிதான
அலுக்கும் பெரியவள்

யப்பேய் பிஸ்கோத்து என கேட்டு
வெறுங்கை கண்டு முகம்
சுறுங்கும் சின்னவன்

இன்னைய தண்டல எப்படி
கட்டுவதென குழப்பத்தில்
நான்

சட சடவென பெய்தமழையில்
ஒழுகும் கூரைக்கு
கஞ்சியை மூடுகிறாள் மனைவி

ஒழுகா இடம் தேடி பதுங்கும்
பெரியவள்

ஐ மழையென குதித்து
கும்மாளமிடும் சின்னவன்

அப்பாடா இன்னைக்கு
தண்டல்காரன் வரமாட்டான்
பெரு மூச்சுடன் நான்

எது எப்படியோ
அந்த நேரத்திற்கான கவலைகளை
கழுவிவிட்டிருந்தது மழை.........

@@@

தூர் வாரும் கிணற்றில் ஒரு கிராமத்து கதையே உட்கார்ந்திருக்கிறது... என்னவொரு நயம்!

காத்து கருப்பு
அடிச்சதுன்னு ராமாயிக்கு
தைய்காவுல 
ஓதி வாங்கி
கழுத்துல கட்டுன
தாயத்து
பழனிக்கு போயி
ஆசையா யாருக்கும்
தெரியாம காதலிக்கு
தொரப்பாண்டி
வாங்கி தந்த
முருகன் டாலர் வச்ச
அலுமினிய சங்கிலி
தொலைஞ்ச
சொம்புக்கு ஐயனாகிட்ட
முட்டை வைப்பேன்னு
மண் தூவுன
ராமாயியோட
நசுங்குன
பித்தள சொம்பு
நாலு ஒடைஞ்ச
மண்சட்டி
துருப்பிடிச்ச
துரும்பு வாளி
கிழிஞ்சி நாரான
எட்டு மொழ சேல
தெக்கால
திருடுபோச்சுன்னு
குறியாடி சொன்ன
இத்தனூன்டு
செம்பு செல
கட்டி கட்டியா
கப்பிக்கல்லு இன்னும்
என்னென்னவோ
வந்து விழுந்தது
நூறடி
தோண்டியபின்பும்
வத்திய கெணத்துல
தண்ணியத்தவிர......

@@@

கவிஞரின் கவிதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதையை நம் முன் பேசிவிடுகிறது...  இதோ மேலும் சில அற்புதமான கவிதைகள்....

கால் கடுக்க
மூனு மைலு நடந்து
பாடம் படிக்க போனவதான்
செறுப்பு தைக்கும் அப்பனின்
வேர்வை அறிஞ்சவதான்
பூ கட்டும் ஆத்தாளின்
கை வலிக்கு இராவுல
களிம்ப தேச்சுவிட்டு
அழுதவதான்
எத பாத்து  மயங்கினாளோ
இராவோட இராவ மேஞ்சாதிக்காரனோடு
ஓடிப்போனா
தெரு ரெண்டுபட்டு
ஊரே பத்தியெறிஞ்சி
ஒரு வழியா முடிஞ்சது
அப்பனாத்தா தூக்குல தொங்குனதாவும்
அவ மூளியா நின்னதாவும்
காலம் கடந்து போக
அவ புள்ள மூனாப்பு படிக்கிறான்
இதோ சத்தமா....
சாதிகள் இல்லையடி பாப்பான்னு
அவளும் ரசிச்சிகிட்டு கட்டுறா
வவுத்து பொழப்புக்கான
#சாதிப்பூவ.....

@@@

தொண
மாட்ட காணாம
கத்துது செவல மாடு

ஓரமா கெடக்கு
எரிச்ச 
தாம்பு கவுறு சாம்பலா

மூலையா
மொடங்கி கெடக்கா
வள்ளி
கயித்து கவுறு அந்து

எத்தன
சொல்லியும் நிக்காத
கண்ணீர
எப்படி நிப்பாட்ட
பொலம்புறா மாமியா

முடியா காலத்தே
நானிருக்க
முன்னமே போனியே
ராசான்னு அவளும்
தம்புள்ளைய
எண்ணி அழ

வெதைக்க வாங்குன
கடனைடைக்க
வட்டி கட்டி மாளாம
மனமொடிஞ்சி
தொங்குன கவுறு
மாட்டோடது
அந்த தாலி
இவளோடது

கண்ணீர சுண்டி விட்டு
முந்தி உதறி சொறுகி
மாமியாவ
தொணைக்கழச்சி
மாட்டுல
ஒன்னா மாறி உழுவுறா
ஒழவ

மனசு கணக்க
அறுவட முடிஞ்சி
கடனடைச்சி
கடவுளுக்கும்
படைய வச்சி

இப்ப திருப்பித்தா
எம்புருசன் உயிரன்னு
கேக்குற உறுதியோட
முன்னங்கால
எடுத்து வைக்குறா
இன்னும் அழுத்தமா.....

@@@

அந்த கண்ணாடி
அழுக்காய் இருந்தாலும்
எப்போதும் எங்கள்
முகத்தினை அழகாகவே
காட்டும்

சிரிக்கும்பொழுது சிரிக்கும்
அழும்பொழுது அழுது
தவிக்கும்
ஆறுதல் படுத்தும்

எங்கள் ஆடைகளை
வெளுப்பாய் காட்டுவதில்
அதற்கு அத்தனை ப்ரியம்

தன் ரசம்போன
பக்கங்களை ஒரு போதும்
எங்களுக்கு காட்டுவதில்லை

இரவில் உறங்குமா
என்ற சந்தேகம்
எங்களுக்கு
நாங்கள் மட்டுமே உலகென
வாழ்கிறது அது

உடைந்த கண்ணாடியென
சிலர் வீதியில்
வீசியிருந்தனர் அதனை

சமயங்களில் அது
தனக்கு தெரிந்தவரென
மின்னி மறையும்
சிறு மின்னல் புன்னகையென

இனியேனும்
வீதியில் வீசாதீர்கள் பாவம்
அப்பாவெனும்
கண்ணாடிகளை......

@@@

முதன் முதலில்
பாடத்தில் பூஜ்ஜியம்
பெற்றதில் அழுதேன்

எனது பூஜ்ஜிய வரைவும்
தொடக்க புள்ளியில்
சேரும் பொழுது
ஒரு வாயினை போலவே
முடிந்திருந்தது

முடிவாய் உடைத்த
என் கொள்ளிப்பானையும்
ஒரு பூஜ்ஜியத்தை சுமந்து
வாய் பிளந்திருந்தது

பிறந்த பனிக்குடத்தை போலவே.......

@@@

எல்லை சாமிகள் காக்குமென
கொல்லையில் பிடித்துவைத்த
மண்சாமிகளும் மங்களமெனத்தான் இருந்தன
எங்கள் பெண்டிரை போலவே

குளத்துக்கு குளிக்கப்போய்
ஈர துணியோடு வருபவளுக்கு
தலை குனிந்து வழிவிடும்
ஆண் மனிதம்

கள் கடைகள் கூட
ஊருக்கு மறைவாய்தான்
குடித்து வருபவன் முகத்தினை
முக்காடு சூடியிருக்கும்

வேலி தாண்டியதில்லை
எந்த காளி மனங்களும்
தழைய தழையத்தான்
தழைத்துக்கிடந்தன பயிர்களும்
வாழ்க்கையும்

விவித பாரதியும் வர்த்தக
ஒலி பறப்புமென ரேடியோ பெட்டியில்
லயித்துக்கிடந்தது
கோவண சனம்

சாயந்திரம் கேட்கும்
டென்ட் கொட்டகையின்
ஒலி இசைக்கு
வரப்பு வழியே குறுக்கால
ஓடின வெள்ளி திரைகாண

ஆடி அசைந்து வந்து நின்ன
பேருந்தில் தொலையத்துவங்கின
கிராமத்து மொட்டுகள்

விஞ்ஞானம் மெய்ஞானம்
திண்றதில்
கரைந்து போகின இளகிய
மனங்கள்

படுக்கையறை காட்சிகள்
முற்றம் வரைவந்ததில்
முறை தவறிப்போகின
உறவுகளின் உன்னதம்

கருக்கலைப்புக்கு தப்பிய
பெண் சிசுக்கள் இன்னும்
பிறக்கின்றன
காக்க ஓர் அண்ணண் 
இருப்பானென.........

@@@

அழுக்கு பைக்குள்
கை விட்டு
எதையோ எடுத்து
வீசுவதுபோல்
பாசாங்கு செய்கிறான்
அவன்
குரைத்தபடி பின்னோடி
பின் முன்னேறியபடி
அந்த ஐந்தறிவு

கண்டு கடந்து
திரும்ப கடக்கையில்
அழுக்குப்பையில்
தலை வைத்து ஐந்தறிவும்
வெறுந்தரையில்
அழுக்கான அவனும்
சமயத்தில் புரிவதில்லை
இவர்களுக்கான மொழி..

@@@

இந்த அற்புதமான கவிஞனுக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருதினை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது மேலும் சிறந்த படைப்புகளை வழங்க பெருமையுடன் வாழ்த்துகிறது நம் படைப்பு குழுமம்.

View

மாதாந்திர பரிசு

ஜெ.ப. செல்வம்

    

View

மாதாந்திர பரிசு

சுரேஷ்பாபு ராசேந்திரன்

View

மாதாந்திர பரிசு

அ.க இராஜாராமன்

View

மாதாந்திர பரிசு

ஜே ஜே அனிட்டா

View

கவிச்சுடர் விருது

ரிஸ்கா முக்தார்

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் – ஒரு அறிமுகம்
*************************************************** 
வர்ணங்களற்ற தேசத்தில்..
கனவுகள்
விற்பவளிடம் 
சில ஓவியங்கள் இருக்கின்றன..

வரிகள் எங்கிருந்து தொடங்குகின்றன என்பது விடயமில்லை. அது தொடங்குமிடம் ஒரு தீ பந்தத்தையாவது எரியவிட்டு நகரவேண்டும். நமது  கவிஞர் ரிஸ்கா முக்தாரின் எழுத்துகளில் அதனை நாம் காணமுடிகிறது.

கவிஞர் ரிஸ்கா முக்தார் இலங்கைத்தீவின் புத்தளம் எனும் ஊரைச்சேர்ந்தவர். சமூகவியல் பட்டதாரியான படைப்பாளி தற்போது ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகிறார். படைப்பாளி ரிஸ்கா முக்தார் அவர்களின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான கவிச்சுடர் விருதை, நமது படைப்புக்குழுமம் வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

வாசிப்பின் மீதும் ஈடுபாடு கொண்ட கவிஞரின் படைப்புகள் வெளி இதழ்களிலும் பிரசுரம் கண்டிருக்கிறது. மேலும் இவர் நமது படைப்பு குழுமத்தில் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
நேசத்தின் பெயரால் தண்ணீர் கேட்டு அருந்திவிட்டு சற்றே இளைப்பாறலாம் என்று வருபவர்களிடம் நீ உன் வீட்டு சாவியையே கொடுத்துவிடுகிறாய்..ஏன் இத்தனை அவசரம் உனக்கு? அப்படி வந்தவர்கள் உன்னிடம் சொல்லாமல் செல்லும் போது நீ தனிமையில் அமர்ந்து அதற்காக வருந்துகிறாய்! என தன் தோழி கடிந்து கொள்வதுபோல் ஒரு கவிதை.. சங்க இலக்கியத்தை மீட்டெடுத்து கொடுக்கிறது...

நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள்நுழைகிறார்..

அவர் உன்னிடம்
அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் 
வேண்டி நிற்கிறார்;
நீயோ அவருக்கு
பேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்..

ஒரு துளி கருணைக்காகத்தான் 
வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;
நீயோ அவர்மேல்
கருணையை 
பெரும் மழையென கொட்டித்தீர்த்து விடுகிறாய்..

நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
ஒரு விருந்தினராக
சற்றுநேரம் உன் வரவேற்பறையில் 
அமர்ந்து செல்லவே வருகிறார்கள்;
நீதான் 
அத்தனை ஆனந்தத்துடன்
உன் வீட்டுச்சாவியையே 
அவர்களிடத்தே ஒப்படைத்து விடுகிறாய்..

சகி..
நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள்நுழையும் போது..
நீ ஏன் இத்தனை அவசரப்படுகிறாய்..?
நீ ஏன் இத்தனை அமைதியிழக்கிறாய்..?

நேசத்தின் பெயரால் உள்நுழைந்தவர்கள்
ஒருநாள்
ஏதும் சொல்லாமல் திடீரென  உன்னிலிருந்து தொலைவாகிப்போய் விடுகிறார்கள்..

அப்போது உனை பற்றிக்கொள்கிறது;
நீங்கவே நீங்காத ஒரு வருத்தம்..
அப்போது உனை சூழ்ந்துக்கொள்கிறது;
விலகவே விலகாத  ஒரு இருட்டு..

இன்னும்
நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
வந்த வழியே திரும்பிச்செல்வதே இல்லை..

அவர்கள்
வெளியேறுகிறார்கள்;
உன் கண்ணீரின் வழியே..
உன் உடைந்த நம்பிக்கைகளின் வழியே..
உன் சிதைந்த கனவுகளின் வழியே..!!!
 
*
மரணமென்பது முகம் பார்க்கும் கண்ணாடி அது எப்போது உடையுமென்று யாருக்கும் தெரியாது... தெரியாது என்பதால்தான் தாமதங்கள் இங்கே முளைத்துவிடுகின்றன... மரணம் வந்து, தன் முன் நிற்பதாக கற்பனை கொள்ளும் கவிஞர்... அதனிடமே நீ ஏன் இத்துணை அவசரப்படுகிறாய்? எனக்கான இறுதி வேலைகள் நிறையவே இருக்கின்றன என பட்டியலிட்டு தாமதிக்க வைக்க விரும்பும் கவிஞரின் வரிகள் இதோ:

அப்படியென்ன அவசரம் இந்த மரணத்திற்கு..?!

இறப்பதற்கு நான் 
சிறிதும் ஆயத்தமாகாவொரு நொடியில் 
முன் வந்து நிற்கிறதே.!!

இங்கே நான் செய்து முடிக்க எத்தனையோ மிச்சமிருக்கிறது..

கேட்காமல் விட்டு விட்ட மன்னிப்பொன்றை கேட்டுவிட வேண்டும்..
அன்பிற்கினியவர்களிடம் விடைப்பெற்றுக் கொள்ள வேண்டும்..
என் தவறுகளின் சாட்சியை இவ்வுலகிலிருந்து மொத்தமாய் அழித்திட வேண்டும்..
என் நினைவுகளை மிக அழகாய் செதுக்கிட வேண்டும்..
இத்தனை நாளும் உடனிருந்தவர்களுக்கு நன்றியேனும் சொல்லிடத்தான் வேண்டும்..

இப்படியாய்..
இன்னும் இன்னும் எத்தனையோ இருக்க..

கலைந்திருக்கும்
ஆடையினைக்கூட ஒழுங்குப் படுத்திக் கொள்ள
அவகாசம் தராமல் 
சட்டென முன்வந்து நிற்கிறதிந்த மரணம்..

என் அன்பிற்கினிய மரணமே!!
சற்றே பொறுத்துக்கொள்..

என் இறுதி உணவை முடித்துக் கொள்கிறேன்..
என் இறுதி வார்த்தையை பேசிக் கொள்கிறேன்..
என் இறுதி கவிதையை எழுதி விடுகிறேன்..
என் இறுதி ஆடையை அணிந்து கொள்கிறேன்..
என் இறுதி கண்ணீரை சிந்திக் கொள்கிறேன்..

அப்படியென்ன அவசரம் இந்த மரணத்திற்கு..?!

நான் ஆயத்தமாகும் வரையேனும்
கொஞ்சம் தாமதித்திட கூடாதா..?!!

*

காதலென்பது சந்திப்புகளில்தான் முழுமையடைகிறது. அப்படி சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை தவிர்ப்பதும் ஒரு காதலின் தயக்கம்தான். அல்லது ஊராரின் மொழிக்கண்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் சிறை. அப்படியிருந்தும் சந்திப்போமா? என்று காதலின் வினாவிற்குள் விழுந்தவள் அமைதியிழந்து கவிதைகளில் நுழைந்து கொள்கிறாள்...

அன்பே..
இந்நகரத்தில்
நாம் சந்தித்துக்கொள்ள
எந்தத்தடையும் இல்லை
என்றபோதும்
நாம் ஒரு நாளும்
அதற்காய் முன் வந்ததே 
இல்லை..

நமக்கான தூரமென்பது
சில மைல் தொலைவுகள்தான்
என்றபோதும்
நாம் ஒரு நாளும்
அதை கடந்துவர
நினைத்ததே
இல்லை..

நாம் இணைந்திருக்க வேண்டிய 
ஒரு தேநீர் மாலையை 
நீண்ட காலமாய்
புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம்..

இன்னும்
நாம்
சந்திக்கலாமென தேர்ந்தெடுக்கும் நாளொன்றில்..
நமக்கேதும் 
ஒரு அவசர வேலை வந்து விடுகின்றது..
அல்லது
பாதி வழியில் 
நமது  பாதைகள் முடிந்து விடுகின்றன..

எப்போதும் இப்படித்தான்!
நம் சந்திப்புக்கள்
அத்தனை தந்திரமாய் தவிர்க்கப்படுகின்றன..
அத்தனை மறைமுகமாய் மறுக்கப்படுகின்றன..

அன்பே..
நாம் 
ஒருவருக்கொருவர்
எவ்வளவோ
அர்த்தமற்றுப்போன 
பின்னாளில்..

ஒருமுறை நாம் சந்தித்துக்கொள்ளலாமா..? என நீ கேட்கிறாய்..

அது அத்தனை எளிய கோரிக்கைதான்
என்றபோதும்
அது என்னை சற்றே அமைதியிழக்கச் செய்து விடுகிறது!!!

மன்னிப்பு என்பது மனிதத்தின் மகத்தான மொழி... அது மொழியும் நேரம் காலம் கடந்துவிட்டது என்றால் அதனாலென்ன பயன் இருக்கமுடியும்? மன்னிப்பை பற்றி ஒரு சிறப்பான கவிதையாகவே இதை நாம் காண முடியும்...



மன்னித்து விடு என்பது அத்தனை எளிய வார்த்தை தான்..

நீங்கள் இதை கேட்கும் போது..
அவர்களின் வாழ்வில் பாதி முடிந்து போயிருக்கும்
அவர்களின் கண்களில் நீர் வற்றிப்போயிருக்கும்
அவர்களின் ஒளி தீபங்களோ எண்ணெய் தீர்ந்து அணைந்து போயிருக்கும்
அவர்களின் சிதையோ  முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகியிருக்கும்..

மன்னித்து விடு என அத்தனை எளிதாய் கேட்டு விடுகிறீர்கள்

மன்னிப்பென்பது ஒரு வார்த்தையில் தொக்கி நிற்பதா??
அது ஒரு வாழ்க்கையையே பற்றிக்கொள்வது அல்லவா..?!

அத்தனைக்கும் பின்பு
நீங்கள் கேட்கும் மன்னிப்பென்பது..

அவர்களுக்காக உங்களிடம் நீங்களே 
நீதி கேட்டு கொள்வது
அவர்களுக்காக உங்களை நீங்களே
தண்டித்துக் கொள்வது
அவர்களுக்காக உங்களுக்கு நீங்களே 
சவுக்கடிகளை கொடுத்துக் கொள்வது
அவர்களுக்காக உங்களை நீங்களே 
ஒப்புக் கொடுப்பது..

மன்னித்து விடு என அத்தனை எளிதாய் கேட்டு விடுகிறீர்கள் 

நீங்கள் பாதிவழியில் கைவிட்டு வந்த கரங்களை யாரோ ஒருவர் பற்றிக்கொள்ளும் வரை
நீங்கள் சுக்கு நூறாய் உடைத்திட்ட மனதின் துண்டுகளை
யாரோ ஒருவர் மீளிணைக்கும்  வரை..
நீங்கள் வளர்த்து வந்த விஷச்செடிகளை
யாரோ ஒருவர் வேரோடு பிடிங்கி எரியும் வரை
உங்களுக்கான மன்னிப்பென்பது சாத்தியமேயில்லை..

மன்னிப்பென்பது ஒரு வார்த்தையில் முடிந்து போவதா..?
அது ஒரு வாழ்க்கையாய் வாழ்ந்து தீர்ப்பதல்லவா..?!

இப்படித்தான் 
எப்போதோ தவறுதலாய் உதிர்த்த ஒரு வார்த்தைக்காக
ஜென்ம ஜென்மமாய்
நான் 
உதிர்ந்து கொண்டிருக்கிறேன்..

இன்னும் 
என் தேசத்தில் மன்னிப்பின் மேகங்கள் 
சூழவேயில்லை!!!

*
எழுதிக் கொண்டிருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்... அவர்கள் இந்த சமூகத்தை திருத்திவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்... அப்படியெல்லாம் இல்லை அவர்கள் பைத்தியம் ஆகாமல் இருப்பதற்காக எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்... வித்தியாசமான பார்வைதான்...

எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள் தங்கள் அன்பின் விஷத்தை 
மீண்டும் மீண்டும் பருகிக்கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் தங்கள் ஆறாக்காயத்தை 
மீண்டும் மீண்டும் திறந்துப்பார்க்கிறார்கள்..
அவர்கள் தங்கள் மீளாத்துயரை 
மீண்டும் மீண்டும் தேடிச்செல்கிறார்கள்..

எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள்
துளி அன்பிற்காய்
மூடிய கதவுகளை ஓயாமல் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்..
ஒரு மன்னிப்பிற்காய் கண்ணீரோடு மண்டியிடுகிறார்கள்..
சிறு ஆறுதலுக்காய் காலங்காலமாய் காத்துக்கிடக்கிறார்கள்..

எழுதிக்கொண்டிருப்பவர்கள் 
பைத்தியக்காரர்கள்!!

இவ்வெழுத்துக்களால்
இறந்துக்கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கையை உயிர்ப்பிக்க முடியுமென..
எல்லா அவமானங்களிலிருந்தும் வெகுதூரம் சென்றுவிட முடியுமென..
இன்னும்
இவ்வெழுத்துக்களால் 
ஒருவரை மனம் சிதறச்செய்து 
தன்னிடத்தே திரும்பி வரவழைக்க முடியுமென
அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்..

ஆம்..
எழுதிக்கொண்டிருப்பவர்கள்
பைத்தியக்காரர்கள்!!

அவர்கள்
பைத்தியமென்பதால்
எழுதுகிறார்கள்..
இன்னும்
பைத்தியம் ஆகிவிடக்கூடாதென்பதற்காகவே
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!!!

*
மேலும் கவிஞரின் சில கவிதைகள்

அமைதியாய் ஒரு நேசத்தை அரவணைக்கத் தெரியவில்லை..
ஆர்ப்பாட்டமின்றி பிரிவொன்றை ஏற்கத் தெரியவில்லை..

உறுதியாய் யாரையும் நிராகரிக்கத் தெரியவில்லை..
தயக்கமின்றி எதையும் பேசத் தெரியவில்லை..

இதுதான் வேண்டுமென அடம்பிடிக்கத் தெரியவில்லை..
சுயத்தோடு வெறுப்பை வெளிப்படுத்தத் தெரியவில்லை..

நிதானமாய் ஒரு முடிவை எடுக்கத் தெரியவில்லை..
கண்ணீரின்றி நினைவுகளை கடக்கத் தெரியவில்லை..

முழுமையாய் யாரையும் வெறுக்கத்தெரியவில்லை..
எதிர்ப்பார்ப்பின்றி ஒரு நாளையேனும் எதிர்க்கொள்ளத் தெரியவில்லை..

இருந்தும்
அன்பே..

இந்த 
காலத்தையும்
காதலையும்
என்னைவிட அறிந்தவர் யாரென்ற
வெற்று கர்வத்திற்கு 
மட்டும்
குறைவேதுமில்லை!!!

*
இன்றைய நாளில் 
நீ சந்திக்கும் நபர்களில் 
நான் இரண்டாவது நபர்

இன்றைய நாளில்
நீ அணியும் ஆடைகளில்
நான் இரண்டாவது ஆடை

இன்றைய நாளில்
நீ விரும்பிக்கேட்கும் பாடல்களில்
நான் இரண்டாவது பாடல்

இன்றைய நாளில் 
நீ சுவைப்பவற்றில்
நான் இரண்டாவது தேநீர்க்கோப்பை

இன்றைய நாளில்
நீ சிந்தும் கண்ணீரில்
நான் இரண்டாவது துளி

சகி
இரண்டாம் தேர்வுகள் 
உன்னில் எதையும் உருவாக்கும் 
திறனற்றவை
எனினும்
அவை மாற்றுகின்றன
கொஞ்சமாய் 
உன் ரசனையை..

இன்னும்
இரண்டாம் தேர்வுகளென்பது
நீ இளைப்பாற தேர்ந்தெடுக்கும் 
ஒரு சிறு நிழல்
அவ்வளவே!!

எனினும்
எவருக்கும்
எவருடைய வாழ்விலும்
ஒரு இரண்டாந்தேர்வாக மட்டுமே
இருந்து விடும் 
துயரம்
வாய்க்காமலிருக்கட்டும்!!!

**

வர்ணங்களற்ற தேசத்தில்..
கனவுகள்
விற்பவளிடம் 
சில ஓவியங்கள் இருக்கின்றன..

அதிலொரு ஓவியம் 
தனிமையில் மூச்சடைத்து இறந்து போனது..
அதிலொரு ஓவியம் 
கண்ணீரில் ஆரம்பித்தது..
அதிலொரு ஓவியம் 
மீட்பாளரை தேடியலைந்தது..

அவளோ கனவுகளை விற்பவள்;
விற்க விற்க தீர்ந்து போகா கனவுகள் தான் அவளுடையன!!

இன்னும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் மகிழ்ச்சி ஒளிந்திருக்கக்கூடும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் நேசம் மறைந்திருக்கக்கூடும்..
வரையப்படா ஓவியமொன்றில்
அவளின் இதயம்
சிறை வைக்கப்பட்டிருக்கவும் கூடும்..

முன்னெப்போதோ ஒரு பொழுதில்..
வர்ணங்கள் கொடுத்து
அவள் கனவுகளை வாங்கி வந்ததாயொரு ஞாபகம்..

என் வர்ணங்களைப் பெற்று அவளொரு ஓவியம் தீட்ட துவங்கினாள்..

வர்ணங்களற்ற தேசத்தில்..
ஓவியம் வரைபவளின்
இதயத்திலும்
துளி வெளிச்சம் எஞ்சியிருக்கக்கூடும்..
இருள் பற்றிய பயமேதுமின்றி!!

**
இது காதலில்லை!!
அதனாலென்ன??

பிடித்த நிறத்தில் உடையணியச்சொல்லி
கேட்டுக்கொள்ளலாம்..
உரிமையாய் விருப்பு வெறுப்புக்களை
பகிர்ந்து கொள்ளலாம்..
விளையாட்டாய் இருவரின் பாஸ்வேர்ட்களையும்
மாற்றிக்கொள்ளலாம்..

இது காதலில்லை!!
அதனாலென்ன???

யாரின் செல்ஃபிக்கோ ஹார்ட்டின் விட்டதற்காய்
கடுப்பாகி ஓஃப் லைன் போகலாம்..
நீண்ட காத்திருப்புக்குப்பின் பதிலளிக்கப்படும் குறுஞ்செய்திக்காய்
கோபப்படலாம்..
நள்ளிரவில் அழைப்பெடுத்து பேசச்சொல்லி
இம்சை செய்யலாம்..

இருந்தும்..
நிச்சயமாய் 
இது காதலில்லை!!
அதனாலென்ன??
**

ஒவ்வொரு தொலைபேசியிலும் இருக்கக்கூடும்..
அழிக்க முடியா
அழைக்கவும் முடியா 
சில எண்கள்...

இறந்து போனதோர் உறவோ..
விலகிச் சென்றதோர் நேசமோ..
மறந்து போனதோர் தோழமையோ..
என யாரோவொருவரின் ஞாபகத்தை தேக்கி வைத்திருக்குமிந்த எண்களை கடந்து போதலென்பது அத்தனை எளிதல்லவே..

ஒரு அழைப்பென்பது வெறும் எண் மட்டும் தானா..?
 
அது..
யாரோவொருவரின் உயிரை..
யாரோவொருவரின் நேசத்தை..
யாரோவொருவரின் நினைவை..
யாரோவொருவரின் வாழ்வையல்லவா சுமந்தலைகிறது..

அறியாமல்..
எத்தனை எண்களை..
எத்தனை அழைப்புக்களை..
எத்தனை எத்தனை குறுஞ்செய்திகளை..
அலட்சியமாய் நிராகரித்திருப்போம்..

உறவுகளை தொலைத்து விட்டு இப்போதிந்த எண்களை கட்டிக் கொண்டு அழுவதால் ஏதும் மாறிடக் கூடுமா..?

இல்லை..
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டவர்கள்
இனி ஒருபோதும் நம்மை அழைக்கப் போவதில்லை...
அவ்வளவே!!!

**

இப்போதெல்லாம்..
வாழ்தல் அத்தனை சுவாரஸ்யப்படவில்லை..

அந்திநேர மழை..
பயணத்துணையாய் வந்த நிலா..
கையோடு ஒட்டிக்கொண்டதொரு பட்டாம்பூச்சியின் வண்ணங்களென எதுவும் ரசிக்கும் படியாய் இல்லை..

எதிர்ப்பார்த்திருந்ததொரு சந்திப்பு..
மெல்லியதாய் ஒரு தலைகோதல்..
உயிர்த்தொடுமொரு குழந்தையின் முத்தமென எதுவொன்றும் என்னை சலனப்படுத்துவதேயில்லை..

தோழா..
வாழ்தலென்பதொரு கலை;
அது எல்லாருக்கும் வசப்படுவதில்லை..

ஆம்..
நான் இருக்கிறேன்..
வாழ்தலின் கணங்களில் நின்று 
மரணத்தின் வாசனையை நுகர்ந்தபடி
இருந்தும் இல்லாமலும் இருந்துக் கொண்டிருக்கிறேன்...!!!

**

எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒரு புன்னகையில் உயிர் வளர்க்க..
ஒரு தலைகோதலில் சோகம் ஆற்ற..
ஒரு குறுஞ்செய்தியில் நலம் கேட்க..
ஒரு பின் தொடரலில் நேசம் உணர்த்தவென..

எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒவ்வொரு துன்பத்திலும் யாரோவொருவர் துணை நிற்கிறார்..
ஒவ்வொரு பயணத்திலும் யாரோவொருவர் அறிமுகமாகிறார்..
ஒவ்வொரு தொலைபேசியிலும் யாரோவொருவர் இணைப்பிலிருக்கிறார்..

ஆம் எல்லோருடனும் எவரேனும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..

எல்லா கவிதைகளும் யாரோ ஒருவரால் படிக்கப்படுகின்றன..
எல்லா கரங்களும் யாரோவொருவரால் பற்றப்படுகின்றன..
எல்லா நினைவுகளும் யாரோவொருவரால் சேகரிக்கப் படுகின்றன..

இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் யாருமில்லாதவரென எவருமே இல்லை..

இங்கே எப்போதும் எல்லோருடனும் எவரேனுமொருவர் இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்...!!!


.........

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

நீ தொலைத்த புன்னகைதனை 
நான் தேடித்தருகிறேன்..
நீ மறக்கத்துடிக்கும் பெருஞ்சோகமொன்றை 
நான் மறக்கச் செய்கிறேன்..
நீ பாதிவழியே விட்டு வந்த கனவொன்றை 
நான் மீட்டுத் தருகிறேன்..

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

உன் துன்பம் தோய்ந்த பக்கங்களை
நான் எரித்து விடுகிறேன்..
உன் சாலைதனில் உதிரா விண்மீன்களை
நான் பூக்கச்செய்கிறேன்..
இன்னும் புறக்கணித்தவர்களையும் புன்னகைத்துக் கடக்க 
நான் கற்றுத்தருகிறேன்..

தவிர
இந்த இரவுகள் வெறுமையிலானவை..
இந்த விடியல்கள் சாபம் சுமந்தலைவன..
இந்த உலகமோ வெறும் பொய்களாலானது!!

இது நேசம் தானென ஒப்புக்கொள்!!

உன் இரவுகளை கனவுகளால் நிரப்பித் தருகிறேன்..
உன் விடியல்களை புன்னகையால் உயிர்ப்பித்து நகர்கிறேன்..
மேலும் உன் உலகத்தை 
மெல்லிசைக் கொண்டு மலர வைக்கிறேன்..

நேசமென்பதொரு கலை
நேசமென்பதொரு கனவு
நேசமென்பதொரு மெல்லிசை..

எனினும் 
உண்மையில்..
உன் நேசமற்ற பொழுதுகள் 
நரகத்தை அணுகுபவை..

அதற்காகவேனும் ஒப்புக்கொள்..
இது தான் நேசமென!!!

**

கவிச்சுடர் ரிஸ்கா முக்தார் அவர்கள் மேலும் சிறந்த படைப்புகளை வழங்க பெருமையுடன் வாழ்த்துகிறது  நம் படைப்பு குழுமம்.

View

மாதாந்திர பரிசு

கரு. கிருஷ்ணமூர்த்தி

View

மாதாந்திர பரிசு

தமிழ்மணவாளன்

View

மாதாந்திர பரிசு

வ.இரா. தமிழ்நேசன்

View

மாதாந்திர பரிசு

நிஸ்பன் ஹம்ஜா

View

மாதாந்திர பரிசு

அ. வால்டர் ராபின்சன்

View

கவிச்சுடர் விருது

மதுசூதன்

கவிச்சுடர் மதுசூதன் – ஒரு அறிமுகம்
*************************************************** 

இன்னும் முடிவாகவில்லை 
இறந்த ஜனநாயகத்தை 
புதைப்பதா எரிப்பதா என்று. 

நமது படைப்புக் குழுமத்தில் நீண்ட நாட்களாக எழுதி வரும் படைப்பாளி மதுசூதன் செதுக்கிய வார்த்தைகள்தான் இவை. 

வார்த்தைகளைச் சரியான இடத்தில் கையாளும்போதுதான் ஒரு தாக்கத்தை அவ் வார்த்தைகளால் எழுப்ப முடியும். கவிஞர் மதுசூதன் அவர்களின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி  மாதத்திற்கான கவிச்சுடர் விருதை, நமது படைப்புக்குழுமம் வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம். 

பிறந்தது வளர்ந்தது மற்றும் பணி செய்தது எல்லாமே சேலத்தில் என்றாலும் தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் மேலாளராகப் பணி புரிந்து வருகிறார் கவிஞர் அவர்கள். 

உயர் கல்வியின் போதுதான் கவிதைகளின் மீது நாட்டமேற்பட்டதாகச் சொல்லும் கவிஞர், தன்னை எழுதத் தூண்டியது பாரதி வரிகளின் மீது ஏற்பட்ட ஓர் ஈர்ப்பும்தான் காரணம் என்று சொல்கிறார். இவரை மானசீகமாக இலக்கியத்தின் பக்கம் நகர்த்தியவர்கள் ஜீவா, மேத்தா, சுரதா அப்துல் ரகுமான்,மீரா போன்றவர்கள்தான். இவரின் வாசிப்பின் நேசிப்புதான் தமிழை ஆராதிக்கக் காரணமாயிற்று. இவரது கவிதையின் மீதான ஆர்வத்தை மேலும் தட்டி நகர்த்துகிறது நமது படைப்புக் குழுமம். இதோ அவரது சில படைப்புகள்:

கவிச்சுடர் மதுசூதன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
குருவிகளுடன் குருவியாகக் கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடும் கவிஞர், அதனைத் தொலைத்துவிட்டு நகர்ந்த வாழ்க்கையில் அவரோடு ஒன்றியிருப்பது ஒரு குருவியின் படம் மட்டும்தான். 

கடைசியாய் என் 
வீட்டுக் கிணற்றுக்குள் 
கூடி கட்டியிருந்தது குருவி. 
பெட்டையின் மீதான 
பெருங்காதலில் 
நான் எட்டிப்பார்ப்பதை 
கவனிக்காது. 
இருந்தாலும் 
கொஞ்சமாய் வெளியில் 
தெரியும் வைக்கோலும் 
ஒரு குச்சியின் 
அசைவும் குருவிகளின் 
தனிமையைச் சொல்லும் 
எனக்கு. 
அப்போது நான் எட்டிப் 
பார்க்கும் என் தலை 
விலகும். 
முட்டைகள் ஒன்றிரண்டு 
பொறிந்த பின் 
கேட்ட "கீச் கீச்" 
சப்தமும் 
தகப்பன் குருவி 
நொடிக்கொரு தரம் 
கிணற்றுக் கம்பியில் 
அமரும் பதட்டத்தில் 
நானும் கலவரமாயிருக்கிறேன். 
என் அம்மாவை நேசித்த 
அளவில் சற்றும் 
குறையாத நேசம் 
குருவிகளிடம் எனக்கு. 
ஒரு ஞாயிறு காலையில் 
பெரு நகரத்தில் 
வேறொரு வீட்டிற்கு 
குடி பெயர்ந்த பின்னர் 
இன்னும் காதில் கேட்டபடி 
இருக்கிறது கீச் கீச்செனும் 
சப்தமும் தகப்பன் குருவியின் 
படபடத்த இறக்கை சத்தமும். 
கூடில்லா வீட்டில் 
குடியிருப்பதென்பது 
குறையாயிருக்கிறது 
அதுவும் வரவேற்பறையில் 
குருவிகள் படம் மாட்டிய 
சுவரிருக்கும் வீட்டில்... 

கவிதைகளோடு வாழும் கவிஞரின் கவிதையும் நகரத்து வாழ்க்கைக்குப் பழகிவிட்டது என்பதைத் தனது இந்தக் கவிதை மூலம் அழகாகச் சொல்கிறார்... 

அன்றொரு நாளில்
மெட்ரோ ரயிலின் மூன்றாம்
பெட்டியில் பயணிக்கும் போது 
இயர் ஃபோனில் அர்த்தம்
புரியாத ஆங்கிலப் பாடலுக்கு
நடுவே என் கைபேசி அழைப்பை
நிராகரித்த போது என் 
சிறு நகரத்துக்கவிதை 
அப்படி மாறுமென
உணரவில்லை.
பின்பொரு நாளில்,
மாலொன்றில் ஃப்ரென்ச் 
ஃப்ரையும் கோக்கும் குடித்து,
ஹைஹீல்ஸ் செருப்புகளின்
அகங்கார நடையில்,
கலைந்த கேசத்தை கைவிரலில்
கோதி கழுத்து சாய்த்த பேரழகோடு
இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் 
உதடொற்றி அழியாமலிருக்க 
கொஞ்சமாய் பேசி,
அகன்ற பழுப்பு நிற
கூலிங் கிளாஸை
இடக்கையில் நெற்றிக்கேற்றி
என்னைப் பார்த்து 
ஹாய் என கையசைக்கிறது
முழுதும் நகரமயமான
என் கவிதை.
நான் தான் மீச்சிறு புள்ளியாகி
அசைக்க என் கைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

படுக்கை விரிப்பில் யானைகளின் படம், தலையணையில் பறவைகளின் படம், போர்வையில் பூக்களை உதிர்க்கும் மரம் , தலைக்கு மேல் உள்ள ஓவியத்தில் சிறுத்தையின் படம் என்று ஒரு குட்டி வனமாகத் தனது படுக்கையறை மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டும் கவிஞர் அதில் ராஜக்குமரனாக வலம் வரும் போது சிறுத்தையின் படம் உறுமுகிறதாம்... அதனை நினைக்கும் போது அந்தச் சிறுத்தையை வாங்கிய கடனின் உருவகமாகச் சித்தரிக்கும் அற்புத கவிதை

அம்பாரி அலங்காரத்துடன்
ராஜகுமாரனைச் சுமந்த
யானைகள் வரிசையோடு
படுக்கை விரிப்பு.
பறக்க எத்தனிக்கும்
பறவைகளோடிருந்த
தலையணை உறை.
பூக்களை இறைத்து
மரங்களடர்ந்த போர்வை.
தலைக்கு மேல் ஓவியத்தில்
பெருமரத்தடியில்
பதுங்கிய சிறுத்தை.
நன்றாய்த் தானிருக்கிறது
என் குட்டி வனம்.
கவலைகளில் தூக்கத்தை
தொலைக்கும்போது
ராஜகுமாரனை இறக்கி
என்னை ஏற்றிக்கொள்கிறது
விரிப்பு யானைகள்.
காதலை நினைக்கையில்
கூடப்பறக்க
இறக்கைகள் தருகின்றன
தலையணைப் பறவைகள்.
பழையதை எண்ணி
கொஞ்சம் சிரிக்கையில்
பூக்களை உதிர்க்கிறது
போர்வை மரங்கள்.
திடுமென உறுமுகிறது
ஓவியச்சிறுத்தை.
அநேகமாய் நான் வாங்கிய
கடனின் உருவகம்
அதுவாகத்தானிருக்கும்.

இரவை படிமங்களுக்குள் அடைத்து வைத்து நகரும் இந்தக் கவிதையும் ஒரு விடியலின் எதிர்பார்ப்புதான்.

ஒரு குடுவையில்
அடைக்கப்பட்டிருந்தது இரவு.
முன்னதாகக் கருமையை
வடிகட்டி வைத்திருந்தார்கள்.
கடந்து போன சிலர்
அருகே போய்
மோப்பம் பிடித்தனர்.
அவரைப் பூவின்
வாசம் இருக்கிறது
எனப் பொய்யும்
பேசினார்கள்.
நேசமில்லாத
இரவுக்கு வாசம்
எப்படி இருக்கும்..?
எனக் குறுங்கவிதை
உளறப்பட்டது.
சிலர் தெருவோரம்
நின்று நியாயம்
கேட்டார்கள்.
எதிர் வீட்டுக் குழந்தை
வரைந்த நட்சத்திர
ஓவியம் குடுவைக்குள்
போடப்பட்டது.
இரவைத்
தேடி வந்த துண்டு
நிலாவுக்கு
வகுப்பெடுத்துக்
கொண்டிருந்தனர்
யாரோ இருவர்.
கடிகையில் சரிந்த
மணலாக நிமிடங்கள்
குடுவையின்
சார்பாக விரைந்தபடி
இருந்தது.
ரோந்து வந்த காவல்காரர்
சிகரெட் சாம்பல்
தட்ட குடுவை கேட்டார்.
சாம்பல் தட்டப்பட்ட
இரவாய் இருப்பதில்
யாருக்கும் விருப்பமில்லை.
இனிமேல் இரவு
விடுவிக்கப்படும் போது
அதுவும்
கருமையற்று தான்
வரும்‌ என்பதை
நீங்கள் ஏற்றே
ஆகவேண்டும்.

வசதிக்கும் ஏழ்மைக்குமான பேதங்களைப் பட்டியலிடும் கவிஞர், அதிலிருந்து சமத்துவம் பெறவும் வழியைச் சொல்கிறார், தனது மேலான்மையில்.. 

நான் நெய்யுக்கழுத போது 
அவன் பாலுக்கேங்கிக் 
கொண்டிருந்தான். 
நான் சோற்றுக்கழுத போது 
அவன் கஞ்சிக்கு அழுது கொண்டிருந்தான். 
நான் முழுக்கை சட்டையில் 
இருந்த போது 
அவன் கோவணத்தைக் கசக்கிக்கொண்டிருந்தான். 
நான் அவனாவதை விட, அவன் 
நானாவதில் இருக்கிறது 
என் சமத்துவம்.


கற்பனையென்பது கவிஞனின் வீடு. அங்குதான் அவனால் எல்லா வித்தைகளையும் செய்ய முடியும். இங்கும் கவிஞர் தனது கற்பனையை அழகாக பதிவேற்றுகிறார். நிலாவின் வெளிச்சத்தை தொலைத்துவிட்ட வானம் தேடி அலைகிறது. ஒவ்வொன்றும் யூகங்களை விரித்து அங்கிருக்கலாம் இங்கிருக்கலாம் எனச் சொல்ல கவிஞருக்கு மட்டுமே தெரிந்த உண்மையை கவிதைக்கு மட்டும் சொல்கிறார்... நீரில் இருந்த வெளிச்சத்தை அவரது காதலி கையில் எடுத்து சென்றுவிட்டாளாம்...

ஒரு கோடையில்
நிலா வெளிச்சத்தைத் 
தொலைத்து விட்டிருந்தது
வானம்.

சதுப்பு நிலக்காட்டில்
இருக்குமென துருவ நட்சத்திரம்
உளவு சொன்னது.

புல்வெளிகளில் வேருக்கடியில்
மறைந்திருக்கும் என
ஆலங்கட்டி அனுப்பி
வேவு பார்த்தது  வானம்.

கடலுக்கடியில் இருக்கலாம்
என மேகம் பெரும் 
மழைத்துளியை அனுப்பியது.

மூங்கில் மரக்கணுக்களில் 
ஒளிந்திருக்குமென
காற்று ரகசியமாய்ச்சொன்னது.

கார்காலத்துக்குள் 
நிலாவெளிச்சத்தைக்
கண்டு பிடிப்போம் என
சொல்லிப் போனது மின்னல் .

நானும் அவளும் சந்தித்த
முன்னிரவில் குளத்து 
நீரில் இருந்த வெளிச்சத்தை
கையில் எடுத்தவள்
திருப்பித் தராததை நான்
யாரிடமும் சொல்லப்போவதில்லை.


கவிஞரின்  மேலும் சில சிறந்த கவிதைகளையும் வாசியுங்கள்:

மாரியம்மன் கோவிலும்
மாதா கோவிலும்
மசூதியும் என்‌ நீண்ட
தெருவுக்குள்.....
ஜோசப்பின் கிறிஸ்துமஸ் கேக்கும்
பாய் வீட்டு பிரியாணியும்
என் வீட்டு மாவிளக்கு மாவும்
பரிமாறிக்கொள்ளப் படும்
சமத்துவ வீதியில்.
நேற்றைக்கு அடிபட்ட கந்தசாமிக்கு
ஆன்டனியின் ரத்தம்.
அகமதுவின் ஆபரேஷன்
சிலவுக்கு என் சாமி உண்டியல்
உடைக்கப்பட்டது.
மரியாவின் பிரசவத்தை
நூர்ஜஹான் பாட்டி தான்
பார்த்தாள்.
கன்னியம்மா பூப்படைந்த
சடங்கில் மாமா வகையில்
மொய்யெழுதினார் எட்வர்டு.
மோனிஷாவின் திருமண
நிகழ்ச்சியில் மகாதேவனின்
இன்னிசைக் கச்சேரி.
எங்கள் வீதி எல்லா
தெய்வங்களாலும்
ஆசீர்வதிக்கப்பட்டது!

@

நீரில் படர்ந்த மர நிழலாய்
நான் படர்கிறேன்.
யாருக்கும் தராத உன் முத்தங்களால்
என் உடம்பு கர்வப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சத்திலிருந்து  கூட ஒரு
துளியை இறுதியாகப் பருகுகிறேன்.
பனங்குலைகளாய் காய்த்துத்
தொங்கும் காமக்கனிகளில்
கொஞ்சம் மட்டும் தீண்டப்பட்டிருக்கிறது
நம் இருவராலும்.
சொர்க்கத்துக்கும் நரகத்துக்குமான
இடைவெளியில் பிரிய மனமில்லாமல்
விடை கொடுக்கிறோம்.
பூக்களுக்கு சிறகு முளைத்த
மாயவனத்தில் விட்டுச்செல்கிறேன்
என் நீண்ட பெருமுச்சை.
உன் முத்தங்கள் மிதந்த
நீரோடையில் ஒரு கை அள்ளிப்
பருகிவிட்டு நாளைக்கு மீதம்
வைக்கிறேன். 
அப்போது தான் கவனித்தேன்
பொறாமையில் சொட்டுச்சொட்டாய் 
வழிந்து தேய்ந்திருக்கிறது விடியலில் நிலா.

@

பட்டை சாராயத்தை
கள்ளத்தனமாய்க்
காய்ச்சி
சைக்கிள் ட்யூபுகளில்
ஏற்றி அமோகமாய்
வியாபாரம் செய்த
மீசை கோவிந்தன்
கரை வேட்டி கட்டி
கவுன்சிலர் ஆன பிறகு
காந்தி படத்திற்கு
மாலை போட்டு
மது விலக்கை அமல்
படுத்தச் சொன்ன ஒரு
அக்டோபர் இரண்டாம்
நாள் முதல்
என் வீட்டுப்படத்தில்
சிரிப்பை நிறுத்திவிட்டார்
தேசத்தந்தை.
@

ஒரு தாயம்,
இரு தாயம், ஈரஞ்சு, மூணு 
இப்படி உருட்டி 
விளையாடிய 
தாயமாட்டத்தில்
சித்தி சொன்னபடி 
உருளும் தாயக்கட்டைகள்.
என் காய்களை 
வெட்டித்தள்ளி
வெட்டாட்டம் ஆடி
மீண்டும் ஈரஞ்சு 
ஒரு ஆறு, 
இரண்டெனக் கட்டங்களைத்
தாண்டி போனாள் சித்தி
என் பால்யத்தின்
நாட்களில்......
ஆஸ்பத்திரியில் அபாயக்
கட்டத்தைத்  தாண்டாமல்
இழுத்துக் கிடந்த
முதுமை நாளில் 
ஈனஸ்வரமாய் முனகினாலும்
எனக்குக் காதில் 
விழுவதென்னவோ
ஒரு தாயம்
இரு தாயம் ஈரஞ்சு மூணு தான்.
@

தூறெடுக்காத  இந்தக் குளத்தில்
அப்போதெல்லாம் 
நான்கைந்து தேவதைகள் 
குளிப்பார்கள்.
பாசம் படர்ந்த படிக்கட்டுக்களில்
கழட்டப்பட்ட தேவதைகளின்
இறக்கைகளை பொன்வண்டுகள்
மொய்த்துக் கொண்டிருக்கும்.
கால் மட்டும்  
நனைக்கும் சில 
தேவதைகளை உள்ளூர்த்
தவளைகள் பரிகாசம் செய்தன
இறங்கிக் குளித்த தேவதைகளின்
பூனை மயிர்கோடாய் இறங்கும்
உந்திச்சுழிகளை உரசிப்
போனது கெண்டை மீன்கள்.
வலப்பக்க மார்பில் காசளவு
மச்சம் இருந்த தேவதைக்கு
கொஞ்சம் கூச்சம் தான்.
நரம்புகளை மீட்டும் சொர்க்கத்தின்
வாசனையை அவர்கள்
குளத்தில் மிதக்கவிட்போது
நான் லில்லிப் பூவாக
மிதந்து கொண்டே முகர்கிறேன்.
ஏழாம் படியில் யாரோ ஒருவனின்
கண்ணுக்குத் தெரியாமல்
நடக்கும் சூட்சுமக் குளியல்
முடித்த தேவதை தன் உலர்ந்த
கூந்தலை அள்ளிக் கட்டியபோது
வெளிச்சத்தை இரவல்
வாங்கிக் கொண்டிருந்தது குளம்.

@

சிலரின் அப்பாக்களுக்கு
சிரித்த முகம்
எப்போதோ கோபம் வந்து
போகும்.

சிலரின் அப்பாக்கள்
கையகலக் கண்ணாடியும்
கருப்பு நெற்றியும்
நரைத்த மீசையும்
நிறைய வருத்தமும்
வைத்திருப்பார்கள்.

சிலரின் அப்பாக்கள் 
ஒடிசல் தேகம்
வார்த்தைகளை அடக்கி
வாசிப்பார்கள்.

சிலரின் அப்பாக்கள்
பெருத்தவர்கள்
கம்பீரச்சிரிப்பும்
கட்டைக்குரலும்
பயமாயிருக்கும்.

சிலரின் அப்பாக்கள்
வழிக்கப்பட்ட மீசையோடும்
நரைத்த தலையோடும்
இருக்கும் முன்கோபிகள்.

சிலரின் அப்பாக்கள்
புரட்டிப்போட்ட வாழ்க்கையின்
மௌன பிம்பங்கள்
இவர்கள் சுமை தாங்கி
ஓய்ந்தவர்கள்.

சிலரின் அப்பாக்கள்
நடிக்கத் தெரியாதவர்கள்
நிறைய ஏமாளித்தனமும்
கொஞ்சம் வசதியும்
இருக்கும்.

அப்பாக்களுக்கு அடையாளம்
சொல்வது எளிதான
வார்த்தைகளில் அடக்க
இயலாது என்றாலும்
அவர்களின் புறத்தோற்றங்களில்
புலப்படாத இன்னொரு
பாத்திரம் உள் தோற்றத்தில்
வேறொரு அடையாளமாய்
இருக்கிறது.

கோர்வைகள் மாறிப்போகும்
ஆனாலும் எல்லா அப்பாக்களும்
மகனுக்கோ மகளுக்கோ
தன் அடையாளத்தை ஏதோ
ஒரு கட்டத்தில் முற்றிலும்
இழந்தவர்களாகவே 
இருக்கிறார்கள்.

@
ரின் மேல் கை நீட்டிய
இலையுதிர் காலத்து கிளை
நிலாவை எப்போது உதிர்த்தது
என யாராலும் சொல்ல முடியவில்லை.

ஊரடங்கும் வேளையில்
மின்மினிகள் வெளிச்சத்தைக் 
கடன் வாங்கிய குளத்துக் கரை
இன்னும் திருப்பித் தராததை
யாரும்  கேட்கவில்லை.

பூக்காம்பு தொடங்கி பூவை
முழுப்பகலில் புணர்ந்த
கறுப்பும் சிவந்த கலந்த
வண்ண்த்துப்பூச்சியின்
களைப்பை யாரும்
உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பனித்துளிகள் அடுக்கிய
சிவப்பு மலரின் சின்னக் கதறலோ
சின்ன சருகொன்று விழுந்த
வலியில் அழுத மரக்காளான்
அழுகையொலியோ
யாரும் பொருட்படுத்தவேயில்லை.

யாரோ கடக்கிறார்கள்
யாரோ பேசுகிறார்கள், யாரோ
சிரிக்கிறார்கள் இன்னும் சிலர்
அன்றைய நாளிதழ் வாசிக்கிறார்கள்.
யாரோ சண்டையிடுகிறார்கள்.

அந்த ஊரில் புறக்கணிக்கப்பட்ட
புராதனக் கோயிலைப் போல
ஒரு விசும்பலோடு நிறுத்திக்
கொள்கிறது குருவிகள்
கூடு தொங்கும் மரங்களோடிருந்த
குளக்கரை.

கவிச்சுடர் மதுசூதனன் மேலும் சிறந்த கவிதைகளை படைக்கவும் அவரின் தமிழ் பணி சிறக்கவும் உங்களோடு சேர்ந்து படைப்புக்குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது.

View

கவிச்சுடர் விருது

சுயம்பு

கவிச்சுடர் சுயம்பு  ஒரு அறிமுகம்
*********************************
கவிதைகளின் வரிகளின் நீளம் அகலம் அவசியமில்லை. ஆழம் மிக முக்கியம். படைப்பாளி சுயம்புவின் கவிதைகளும் மிகுந்த பொருட்செறிவை கொண்டதுதான்.

நம் படைப்பு குழுமத்தின் ஆரம்பம் முதல் இயங்கிவரும் நமது கவிஞர் சுயம்பு அவர்கள்தான் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை பெறுகிறார். அவருக்கு இந்த விருதினை அளிப்பதில் படைப்புக் குழுமம் பெருமை கொள்கிறது.

10ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் கவிஞர், திருநெல்வேலி லெப்பைகுடியிருப்பு எனும் கிராமத்தை சேர்ந்தவர். குடும்பச்சூழல் அவரை மேற்கல்விக்கு அனுமதிக்கவில்லை என்பது காலத்தின் கட்டாயம் என்றாலும், தமிழின் மீதும் கவிதையின் மீதும் உள்ள பற்றினால் சுயம்புவாகவே கவிதைகளை எழுதத் தொடங்கியவர். தற்போது சென்னையில் சொந்தமாக டிஜிட்டல் பிளக்ஸ் தொழில் செய்துவரும் கவிஞர், ஓவியம் வரையும் தனித்த ஆற்றலுமுள்ளவர்.

அவரது சில கவிதைகளை ஆய்வு செய்வோம்...
---------------------------------------------------------------------
புத்தன் என்று யாரை சொல்வது ? அரங்கம் ஒன்று, அந்தரங்கம் ஒன்று... எல்லோருக்குள்ளும் இருவேறு முகங்கள்! முகத்திரை கிழியும் வரைதான் ஒப்பனைக்கு மரியாதை இருக்கிறது... இந்தக்கவிதையும் அப்படியான தோலுரிப்புதான்.

நான்
நிறையக் காதலும்
கொஞ்சம் காமமும் கலந்தவன்...

சில நேரங்களில்
கடவுளை துரத்தும் மிருகமாகவும்
மிருகத்தைத் துரத்தும் கடவுளாகவும்
பரவி கிடக்கிறேன்....

சிலப்பதிகாரம்....சீவக சிந்தாமணியென்று
படித்த காப்பியங்களுக்குள்
மறைந்திருந்துதான்
கொளுத்த சிந்தாமணியின்
ராத்திாி ரகசியங்களையும் வாசிக்கிறேன்....

எனது மறைவு பிரதேசங்களில்
தேநீா் கோப்பைகளை மிஞ்சும்
மதுக் கோப்பைகளும் உண்டு.....
மதுக் கோப்பைகளை மிஞ்சும்
மயிலிறகுகளும் உண்டு......

எனது பருவ முகாம்களில்
பட்டாம் பூச்சிகளுக்கிணையா
பெண்களின் சில காந்த விழிகளும் உண்டு
சில கந்தக ஸ்பாிசங்களும் உண்டு

வீட்டின் முகப்பறையில் கூட
மல்லி வாசனையுடன் கலந்து
சில சிகரெட் வாசனைகளும்
புகைந்து கொண்டுதானிருக்கிறது.....

படுக்கையறைக்குள் பிரவேசிப்பீா்களானால்
சில பிரேத நாத்தங்களை மறைப்பதற்காய்
பல ரோஜா இதழ்களைப் பிய்த்தொிந்திருக்கிறேன்.....

தலையணைக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
அமிலத்தில் எாித்த
ஓராயிரம் ஒவியக் கூடுகளையும்
ஈராயிர ஒவியத் தூாிகைகளையும்.....

சிதைந்த ஒரு வீணையும்
சிதையாத ஒரு புல்லாங்குழலும்
என் இசையுணா்வின் அடையாளமாய்
இன்னமும் மிச்சமிருக்கின்றன.....

இன்னுமென் மெளனத்தைக் கொஞ்சம்
நெருக்கமாகக் கலைப்பீா்களானால்.....
உங்களுக்குப் புாிந்து விடும்....

உங்கள் முகத்திரை கிழிகிற வரையிலும்
உங்களில் நானும் ஒருவனென்று.....!
- சுயம்பு -

மகளின் உறக்கத்தைக் கடவுளின் மறு பிரசவமாகப் பார்க்கும் ஒரு எளிய தந்தையின் ஆதங்கம் என்னவெல்லாமிருக்கும்! தன் பிணத்தையே அவளிடமிருந்து மீட்டுவதாகச் சொல்கிறான். அவளின் அழகை எதுவும் மிஞ்சிவிடாது என்பது அவனது ஆழ்ந்த நம்பிக்கை... யாரும் சப்தமிடாதீர்கள் மகள் உறங்குகிறாள்...

என் மகள் தூங்குகிறாள்
யாரும் சத்தமிடாதீர்கள்,,,,

என் மனைவியோடு
பேச வந்த தோழிமார்களே,,,!
கதவடைத்துக் கொண்டு
வெளியில் சென்று பேசுங்கள்,,,,,
என் மகள் தூங்குகிறாள்,,,,

உங்கள் சீரியல் பற்றிய
சீரியஸ் பேச்சு
என் மகள் புரண்டு படுக்கையில்
இசைக்கும் கொலுசு ராகங்களை
வெறும் இரைச்சலாக்கி தருகிறது,,,,

வெளியில் சென்று பேசுங்கள்
என் மகள் தூங்குகிறாள்,,,,,

உன் வீட்டில் என்ன குழம்பு?
என் வீட்டில் இந்தக் குழம்பு?
பேசாதீர்கள்,,,

என் மகள்
தூக்கத்தின் இடையில் நெழியும் போது
ஒலிக்கும் புல்லாங்குழல் மெல்லிசையை
கேட்க விடாமல் துண்டிக்கிறது
உங்கள் சத்தங்கள்,,,,

ஆகையால், பேசாதீங்கள்
என் மகள் தூங்குகிறாள்,,,,,

என் புடவையின் நிறங்கள்
கொஞ்சம் தூக்கலாகவும்
உன் புடவையின் நிறங்கள்
கொஞ்சம் இறக்கலாகவும்
அய்யோ,,! பேசாதீர்கள்,,

என் மகள் தூங்குகிறாள்,,,,
தொட்டிலுக்குள் தூங்கும்
இந்தக் குட்டி வர்ணத்தை விடவா
வாங்கிவிடப் போகிறீங்கள்
உயர்ந்ததோர் வர்ண நிறங்களை,,,,,,?

ஆகையால் பேசாதீங்கள்
என் மகள் தூங்குகிறாள்,,,,

அவளுக்கு
அவனோடு ,,,,இவளுக்கு இவனோடு
சட்டம் அனுமதித்த பிறகு
உங்களுக்கென்ன ஊர் வம்பு,,,,,
உலக வம்பு,,,,,,
என் காது பட எதுவும் கனைக்காதீர்கள்,,,,

என் மகளின் தூக்கத்தை
நிலா பதிவிறக்கம்
செய்து கொண்டிருக்கிறது,,,,

ஆகையால்,,,,,
யாரும் சத்தமிடாதீர்கள்,,
என் மகள் தூங்குகிறாள்,,,,,

அவளுக்குள்ளிருந்துதான்
இறந்து போன
என் பிணத்தைத் தட்டி எழுப்புகிறேன்,,,,

கொஞ்சம் பொறுங்கள்,,!
எனக்கடுத்த பிணமாய்
கடவுள் காவலிருக்கிறான்,,,,
அவனும் கொஞ்சம்
உயிர்தெழட்டும்,,,,,

ஆகையால் சத்தமிடாதீர்கள்
அவளது தூக்கமென்பது,,,
கடவுளின் மறு பிரசவம்,,,,,,
- சுயம்பு -

படிப்பறிவை தவறவிட்ட தந்தைக்குத்தான் தெரியும் அதன் வாசனை. மகனைக் கடிந்துகொள்ளும் கை நாட்டு அப்பனை, அவரின் இறப்பிற்குப் பிறகு பாக்கெட்டில் வைத்திருந்த கடிதமொன்று நெகிழ்த்துகிறது... இதுதான் அந்தக்கடிதம்!

எப்போதும்
படி, படி என்று
நச்சரித்துக் கொண்டிருக்கும்
அப்பாவுக்கும் எனக்கும்
கீரி, பாம்பு உறவுதான்,,,,

அப்பா இறந்த போன ஒருநாளில்
இது அப்பா சட்டை பையில் இருந்ததாக
அந்தக் கடிதத்தை நீட்டினாள் அம்மா,,

வெற்றுக் காகிதத்தில்
எனது பெயர் எழுதி
அடியில் அப்பாவின்
கைநாட்டு மட்டுமே இருந்தது,,,,,

அவர் பெயரை மறந்து
என் பெயரை மட்டுமே
எழுதி பழகிய
அப்பாவின் கல்வியை,,,
அறிந்த பிறகுதான்,,,,

எனது கல்வியை
கற்க தொடங்கினேன்,,,,
என் நேசத்தின் ஆழ வெற்றிடத்தில்,,,,,
அப்பாவின் பெயரெழுதி,,,,

- சுயம்பு -

சுயம்புவின் கவிதைகளில் இஃதொரு சிறந்த கவிதையென்று அறுதியிட்டுச் சொல்லலாம். மகன் தந்தை பாசம் பற்றிய கவிதைதான் இஃதென்றாலும்... ஒரு தந்தையாக மகனுக்குச் சில விசயங்களையும் பொருள்களையும் தருவதாகச் சொல்லி விரியும் இந்தக்கவிதை, கடைசியில் தனக்கான வேண்டுகோள் ஒன்றையும் மகனிடம் வைக்கிறது...

கொஞ்சம் வேப்பஞ் சாறும்
கொஞ்சம் தேன் சாறும்
நானுனக்கு கலந்து தருவேன்
மகனே...நீ...!
அருந்த பழகிக்கொள்...!

கொஞ்சம் நட்சத்திரங்களும்
குட்டி நிலவும் , சூாியனும்
நானுனக்குச் சிருஷ்டித்துத் தருவேன்....
மகனே...நீ.....!
வானமாய் விாிய பழகிக்கொள்...!

கொஞ்சம் நீா்த் துளிகளும்
கொஞ்சம் தடங்களும்
நானுனக்கு உண்டு பண்ணித் தருவேன்
மகனே....நீ...!
பெரும் நதியாய் உருவாகக் கற்றுக்கொள்....!

கொஞ்சம் விதைகளும்
கொஞ்சம் நிலமும்
நானுனக்குச் சேகரித்துத் தருவேன்
மகனே....நீ...!
விருட்சமாய்க் கிளை பரப்பக் பழகிக்கொள்....!

கொஞ்சம் பனித்துளிகளும்
கொஞ்சம் வியா்வைத் துளிகளும்
நானுனக்குச் சேகாித்துத் தருவேன்
மகனே....நீ...!
பேரானந்தம் பழகிக்கொள்.....!

கொஞ்சம் தூக்கமும்
கொஞ்சம் இரவுகளும்
நானுனக்கு நிரப்பித் தருவேன்
மகனே....நீ..!
கனாக்களைப் பிரசவிக்கப் பழகிக்கொள்...!

ஒரு கையில் கேடயமும்
மறு கையில் வீரவாளும்
நானுனக்கு படைத்து தருவேன்
மகனே....நீ...!
போா்முறை பழகிக்கொள்..!

கொஞ்சம் அறிவும்
கொஞ்சம்அனுபவமும்
நானுனக்கு சோ்த்து தருவேன்
மகனே....நீ...!
வாழ்க்கையை வடிவமைக்கப் பழகிக்கொள்....!

கடைசியாய்..
என் மரணத்தையும்
கொஞ்சம் சொட்டு கண்ணீா்த்துளிகளையும்
நானுனக்குப் பாிசளிப்பேன்
மகனே....நீ....!
இந்தப் பிடிவாதக்கிறுக்கன்
எனையறியாமல் உனக்கேதும்
தீங்கிழைத்திருந்தால் மன்னித்து
ஒற்றை முத்தமிட்டு வழியனுப்பு....!

- சுயம்பு -

என்னதான் ஒப்பனையைப் பூசி வெளி உலகிற்குப் பிரமாதமாய்க் காட்டிக் கொண்டாலும் கிராமத்திற்குச் சென்றவுடன் அங்குக் காணும் நிதர்சனம் நம்மைக் கரைத்துவிடும்... ஒரு புழுக்கமான கவிதையை அழகாகச் செதுக்கியிருக்கிறார்....

செத்த பல் துலக்கி
செத்த குளியலிட்டு
செத்த மேக்கப்பிட்டு
அவசர அவசரமாக
பஸ் ஏறி
அம்மாவை பார்க்கச் சென்றால்.....
வழக்கம் போல்
வாய் திறந்த குடிசைக்கு
கொஞ்சம் ஒலை ......
சதை கரைந்த ஒல்லிகுச்சி சுவருக்கு
கொஞ்சம் மண் பூச்சி வேலை.....
ஆங்காங்கே கொஞ்சம்
தரையில் மழை பெய்த குழியடைத்தல்......
கரையானாித்த கதவுக்கு
கொஞ்சம் ஒட்டையடைத்தல்.......
பூட்டாத நாராங்கிக்குக் கொஞ்சம்
எண்ணெய் விட்டு தட்டி தட்டி
அதன் கீச்....கீச்.........குறைத்தல்
பண அனுப்பும் சுனக்கத்தில்
அக்கம் பக்கத்தில்
அம்மா வாங்கும் கடன்
கொஞ்சம் கொடுத்தல்.........
பாழடைந்த அரிசி பானையை
தூசிதட்டி கொஞ்சம் அரிசி நிரப்பி....
அதன்கூடக் கொஞ்சம்
மஞ்சா மசலான்னி
புளி உப்புன்னி வாங்கி அடைத்தல்........
இப்படிச் சொல்லிக்கொண்டே போகும்
நிலையிருக்கும் எனக்கெல்லாம்
ஒரு தடவையாவது
தீபாவளி கொண்டாடிடனுமென்பது
பேராசையெனினும்.............
என் சிறு ஆசை நிறைவேறுவது.....
இத் தீபாவளியில்தான்.......
இல்லையென்றால் ஏது
நயிந்த சேலைக்கு ஈடாய்
அம்மாவுக்கொரு புதுச் சேலை.........?

- சுயம்பு -

தாயிடம் மகளின் சேட்டைகள் அப்பாவைப்போல் இருக்கிறதாம்... ஆனால் ஒன்று மட்டும் அதில் இல்லை என்று சொல்லும் இந்தக் கவிதை அன்பின் ஆழம் நிறைந்தது....

அடுப்பாங்காி எடுத்து
அப்பாவை போல்
மிடுக்கு மீசையொன்றை
வரைந்து கொண்ட மகள்
திருட்டு பூனையாய்
அடுப்படி நுழைந்து பின்னாடியே சென்று
அப்பாவை போல்
அம்மாவை கட்டிபிடிக்கிறாள்.....
அப்பாவை போல்
அம்மாவை கொஞ்சுகிறாள்
அப்பாவை போல்
அம்மாவை முத்தமிடுகிறாள்...
சட்டெனக் கோபம் வந்து
அப்பாவை போல்
அம்மாவை அதட்டுகிறாள்....
சண்டையிடுகிறாள்....பாத்திரங்களை
அங்குமிங்குமாகத் தூக்கியடிக்கிறாள்....
அப்பாவை போல்
அம்மாவை கன்னத்தில் அறைகிறாள்...
எல்லாமே அப்பாவை போல்
நடித்துக் காட்டிய மகள்
அதுவரை அம்மாவிடம் அப்பா கேட்காத
ஒரு வாா்த்தையைக் கேட்டு விட்டு வந்தாள்.
அம்மா சாப்டியாம்மா

- சுயம்பு -

நாகரீகத்தை நோக்கி ஒரு சமூகம் நகர்ந்து கொண்டிருக்கிறது... அதன் ஒப்பனைகள் அடர்த்தியானது... அதன் கனவுகள் கவர்ச்சியானது... ஏன் கண்ணீரும் கூடப் போலியானது... சம்பந்தமில்லாமல் நகரும் இந்த அவலத்தை இந்தக் கவிதையால் இப்படித்தான் சொல்ல முடியும்.

கண்ணீருக்கு
தொடா்பில்லாமல்
என் விழிகள் அழுதுகொண்டிருக்கின்றன....

வார்த்தைகளுக்கு
தொடா்பில்லாமல்
என் உதடுகள் பேசிகொண்டிருக்கின்றன....

முகங்களுக்கு
ஒப்பில்லாத ஒப்பனைகளை
முகமெடுத்துப் பூசிக்கொள்கின்றன.......

பாதங்களுக்கு
தொடா்பில்லாத
பாதைகளைத் தேடி
என் கால்கள் போய்கொண்டிருக்கின்றன.......

தூரிகைகளுக்கு
ஒவ்வாத ஒவியங்களை
எனது விரல்கள்
வரைந்து கொண்டிருக்கின்றன..............

காயங்களுக்கு
தொடா்பில்லாமல்
என் இரத்தங்கள்
வழிந்து கொண்டிருக்கின்றன....

உணர்வுகளுக்கு
தொடா்பில்லாமல்
என் மனம் காதல்
செய்துகொண்டிருக்கின்றன.....

இப்படிதான்
நவீன காலத்தின் சூட்சமம்
புரியாத யாவருக்கும்
ஒன்றையொன்று தொடா்பற்றதாகவே
போய்விடுகிறது.................

ஆகையால்....!
நான்
நகர்ந்து கொண்டிருக்கிறேன்
என் பிணத்துக்குத் தொடா்பில்லாத
ஒரு சுடுகாட்டை நோக்கி......

- சுயம்பு -

இன்னமும் கவிஞரின் சில சிறப்பான கவிதைகள்:

நீண்ட நாட்களுக்குப் பிறகு
பள்ளி தோழியைச் சந்தித்த மகிழ்ச்சியில்
கடந்த காலங்களையும் ,
கடந்து வந்த பாதைகளையும்
சிறு தேநீா் கோப்பைகளுடன்
பகிர்ந்து கொண்டோம்......

படிக்கையில் கட்டிய நாடக வேசங்களில்
அதிகமாய்த் துாியோதனாகவும்,
இராவணனாகவும்,நம்பியாராகவும்
வில்லன் வேசம் கட்டிய ஜானகிராமன்
இன்று நிறைய
அநாதை ஆசிரமங்களை நடத்தி
சிறந்த சமூகச் சேவகருக்கான விருதுகளுடன்
மதிப்புற வாழ்ந்துகொண்டிருக்கிறான்.......

நடிக்கும் நாடகங்களிளெல்லாம்
விலைமாது கதாபாத்திரமாகவே
அமைந்து விடுகிற சீதாலட்சுமிக்கு
இன்று அரசாங்க உயர் பதவியிலுள்ள
கூடப் படிச்ச சுந்தரராமனுடன்
திருமணம் முடிந்து
மிகுந்த செல்வாக்குடன் பேரதிஷ்டகார
சீதாபிராட்டியாகவே வாழ்கிறாள்.......

அனைத்து நாடகங்களிலும்
பிச்சைகார வேசம் கட்டிய பிச்சைமுத்துதான்
இன்று சிட்டிக்குள்
நாலு நகைகடைகளுக்குச் சொந்தக்காரன்........

கூலிக்கு மாறடிக்கும் தொழிலாளியாய்
வேசம் கட்டிய மாறன்தான்
இன்று அரசாங்கமே சலியூட் அடித்து
வியக்கும்படியான தொழிலதிபர்...

எப்போதும் மக்கு வேசம் கட்டுவாளே
கடைசிப் பென்ஞ்ச் கார்த்திகா
இன்று நாம் படித்த பள்ளியிலே
பணி புாிகிறாள் ஆசிரியராக .......

நல்ல வாட்டசாட்டமாக இருந்ததாலே
எந்த நாடகமென்றாலும் கார்த்திகேயனுக்கு
காவல் அதிகாரி வேடம்தான்.....
இன்று பொறுக்கி, பிக்பாக்கெட்,
கஞ்சா வியாபாாின்னி அவன்
வாழ்க்கையே திசைமாறி போச்சி....

அப்போதே வரதட்சனையையும்,
மதுக்கடைகளையையும்
எதிர்த்து போராடும் சமூக ஆா்வலனாக
புரட்சி வேசம் கட்டிய கல்யாண சுந்தரம்
இன்னும் கல்யாணம் ஆகாத
முதிா் கண்ணன் கோலத்தில்
மதுக்கடையே மாா்க்கமென
மயங்கி கிடக்கிறான்.......

பாவம் கல்யாணி.....!
கல்யாண பொண்ணு வேசம்ன்னாலே
கணக் கச்சிதமாய்ப் பொருந்தி போன
அவள் இன்னமும் முதிா்கன்னிதான்...

கடைசியாய்
அடிக்கடி ராமன் வேசம் கட்டிய நானும்
சீதை வேசம் கட்டிய நீயும்
தேச தூா்நாற்றங்களாய்
காலச் சுழற்சியில்
சந்திக்கக் கூடாத இடத்தில்
சந்தித்துக் கொண்டோம்!......
விலைமாதா் கூட்டத்தில் உன்னையும்
வாடிக்கையாளன் கூட்டத்தில் என்னையும்......

எல்லாம் பகிர்ந்து முடித்த நேரத்தில்
காலியான தேநீர் கோப்பை
கண்ணீரால் நிரம்பியிருந்தது.........

- சுயம்பு -

உன் ஆடைகளில்
சிறப்பானதை ஒன்றை எடுத்து
உடுத்திக் கொள்....

இன்று
நம் திருமண நாள்.....

வா .....
கோயிலுக்குச் சென்று
இறைவனுக்கான அா்ச்சனையை
அங்குப் பசித்திருப்போாின்
தட்டிலிட்டு திரும்புவோம்......

பின்பு ....
சாலையோர நடைபாதைக்குச் செல்வோம்
பாதையிருந்தும்
நடையின்றித் தவிக்கும் சிலாின்
சிறிது நேரம்
நடை கோலாகி மகிழ்வோம்......

பின்பு .....
சாலையுள் சுரங்க பாதைக்குச் செல்வோம்
சுரக்காத கருணையோடு
கடந்து போகும் மக்களின்
அலட்சிய விழிகள் மறுதலித்த
மாசற்ற ஊனங்களின்
உயிர் புண்களின் சிலதை
புண்ணாற்றி வருவோம்......

பின்பு ....
சாலைகளில் திாிந்தலையும்
புத்தி சுவாதினமான
மங்கையரோ....மாா்க்கையனோ
அவர்களின் அழுக்காடை அகற்றி.....
புத்தாடை பாிசளிப்போம்......

பின்பு. .....
இரயில் நடைபாதைகளுக்குச் செல்வோம்.....
விழி தொலைந்தும்.....
மொழி தொலையாத பாடகா்களின்
ஸ்வரங்களின் கடைசித் தேய்மானத்தில்
உயிரெழும் பசி கோரத்தைக் கொஞ்சம்
அடக்கியாண்டு வருவோம்.....

ஒவ்வொரு வருட
திருமணநாளின் போதும்
கணவனின் உயாிய எண்ணம் குறித்து
கலங்கி போய் நின்ற மனைவி.....

சற்றும் சலிப்படையாமலே
தன் ஆடைகளில் சிறப்பானதை
ஒன்றை எடுத்து
கணவனிடம் நீட்டினாள்.....

போன வருடத்தை விட
இந்த வருடம் கிழிசலில் கூடரெண்டு
கூடி போச்சி.....

கொஞ்சம் தைத்து வாருங்களென்று......!

- சுயம்பு -

அழகான சவப்பெட்டியொன்று
செய்து வைத்திருக்கிறேன்
மரணத்தின் கண்களை
மயக்கும் வடிவிலான
அந்தச் சவப் பெட்டிக்குள்ளேதான்
எனக்கான உலகத்தை
புதைத்து வைத்திருக்கிறேன்......

தரையில் நின்று வானமளந்த
கனாக்களின் ருத்திரத்தையும்
வானத்தில் நின்று மண்ணை நுகரும்
பாிமாணத்தின் இயலாமையையும்
அந்தச் சவப்பெட்டிக்குள்தான் சருகுகளாய்
உதிா்த்து வைத்திருக்கிறேன்

சமூக ஒழுங்கினங்களைக் கண்டு
கொதிப்படைந்து கொந்தளிக்கும்
என் குருதியின் கோபங்களையெல்லாம்
குப்பையாய் அள்ளி
அந்தச் சவப்பெட்டி முழுவதும்
நிரப்பி வைத்திருக்கிறேன்.....

சிலா் அன்பினால் அடித்த ஆணிகளையும்
சிலா் புன்னகையில் கொடையளித்த
துரோகங்களையும் பெயா்த்தெடுத்து
சவப்பெட்டியில் திணிக்கிறேன்
அது கொள்ளவு தாண்டி வழிகிறது....

கழிவென்ற கலாச்சாரங்களில்
கழிசடைகளாய் ஊறிப்போன
நவீன குமாரா்களையும்
நவீன குமாரத்திகளையும்
ஆசீா்வதியும் கா்த்தாவே என்ற
பிராத்தனைகளும் அந்தச் சவப்பெட்டியின்
உள்ளாழங்களின் ஒரங்களில்
முனங்கி கொண்டுதான் இருக்கிறது....

அதிகார பிலாத்துகளின் வஞ்சகத்தினால்
கெளரவிக்கப்பட்ட
என் புறமுதுகில் சவுக்கடியையும்
அகமுகத்தில் எச்சிலையும்
சிறு ஈரம் குலையாமல்
காய்ந்து கொண்டுதானிருக்கிறது.....
அந்தச் சவப்பெட்டியின்
வயிற்றுக்குள் ஒாிடத்தில்.......

கருச்சாமம் தீண்டும் நள்ளிரவில்தான்
அந்தச் சவப்பெட்டிக்குள் சென்று
அனைத்தையும் கலைந்து பாா்த்து
ஜீவ முக்தி அடைந்து
வெளியில் திரும்புகிறேன்....

நியாயங்களைப் புறந்தள்ளிய
துன்மாா்க்கா்களை அடக்கம் செய்யும்
ஏற்பாட்டில் முன்னொருநாளில் வடிவமைத்த
இந்தச் சவப்பெட்டிதான் பின்னொருநாளில்
என் நீள அகலத்திற்கு
பொருத்தமானதாகி விட்டது.....

பாவங்களை இரட்சித்த இரட்சகருக்கே
சிலுவை கோர படிமங்கள்தான்
பாிசென்னும் போது
அந்தச் சவப்பெட்டி எனக்குப் பொருத்தமானதில்
வியப்பொன்றுமில்லை.....

- சுயம்பு -

அது
மனித கறிகளைப் புசிக்கும்
மறைவு பிரதேசம்
நான் எனக்குள்ளிருக்கும்
ஒர் முகமூடியினை
அணிந்து கொண்டு செல்கிறேன்.....

விரல் நகம் பாலிஷ் போடுற படியேதான்
விரல்கள் நறுக்கப்படுகின்றன.....
நெற்றி வியர்வை துடைத்த படியேதான்
முகத் தோல்கள் உாிக்கப்படுகின்றன....

தலை கோதி சீராக்கிய படியேதான்
மண்டையோடு கழற்றபடுகின்றன
நேசமுத்தம் பாிமாறியபடியேதான்
உதடுகள் கடித்துத் துப்பபடுகின்றன.....

வர்ணம் பூசிய படியேதான்
நிறங்கள் அழிக்கப்படுகின்றன.....
சதைகளைத் தழுவியபடியேதான்
இரத்தம் பிழியபடுகின்றன....

உடைகளைக் கழற்றுவது போல்
உடல் தோல்களை
எளிதாக உாித்துவிடுகின்றனா்....

அம்மணம் அவர்களின் தேசிய ஆடை
மெளனம் அவர்களின் தேசிய மொழி
புன்னகை மட்டும்
நிறங்களுக்கேற்ப மாறுபடுகிறது...

என்னால்
எளிதாகச் சொல்லிவிட முடியவில்லை
அந்த மாமிச மந்தையினை....
சிவப்பு விளக்கென்று....!
அவர்களின் இரத்தமாகவே
ஊறிப்போனது எனக்குள்.....

----------------

படைப்பாளி சுயம்பு அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

பெனடிக் அருள்

View

மாதாந்திர பரிசு

அ.வேளாங்கண்ணி

View

Showing 601 - 620 of 735 ( for page 31 )