logo

நிறமற்ற ஓவியங்கள்


நூல் பெயர்    :  நிறமற்ற ஓவியங்கள்
                      (கவிதை )

ஆசிரியர்    :  ராஜகம்பீரன்  

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2022

பக்கங்கள்     :  108

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்     :  ஆர்.சி.மதிராஜ்    

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்     :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 120
நீருக்கு நிறமில்லை, ஆனால் நீர் இருக்கும் இடம் யாவும் அதற்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு நிறங்களைப் பிரதிபலிக்கும். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழச் சொல்லிக் கொடுத்தது முதன்முதலில் நீராகக் கூட இருக்கலாம். நிறமற்ற வானவில்லில் ஏழு நிறங்கள் எப்படி வந்தன என்பதே இயற்கையின் ஆகப்பெரும் சக்தி. இயற்கையின் சக்தி எவ்வளவு உயர்வோ அதே அளவு உயர்வு இலக்கியத்திற்கும் உண்டு. சில நேரம், இயற்கையின் சக்தியைக்கூட அடுத்த தலைமுறைக்குக் கடத்த இலக்கியமே தேவைப்படுகிறது. இயற்கை, சமூகம், வாழ்வியல் என திசையெங்கும் எழும் எல்லா விழுமியங்களையும் ஓவியக்கண்களால் வரிகளாக வரைந்து ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'நிறமற்ற ஓவியங்கள்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும், வரிகளுடன் வண்ணங்களைக் குழைத்து அது வாசிப்பவரின் மனதில் வசீகரத்தின் நிறங்களை வானவில்லாக்கிச் செல்லும் என்பதே இந்நூலின் ஆகப்பெரும் பலம்.

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் ஊரைப் பூர்வீகமாகவும், சென்னையை வாழ்விடமாகவும், கொண்ட படைப்பாளி ராஜகம்பீரன் அவர்களுக்கு இது, இரண்டாம் நூல். இவரது கவிதைகள், சிறுகதைகள் என ஏராளமான படைப்புகள் பல  பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. தன் கிராமத்தின் பெயரையே தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டவர். தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியவர். மேலும் மொழிப்போர்  தியாகியான கொடிக்கால் சேக் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். சமூகச் செயற்பாட்டாளராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

டோடோ


0   211   0  
June 2024

தீசஸின் கப்பல்


0   452   0  
April 2025

நோம் என் நெஞ்சே


0   1504   0  
March 2020

ஊழ்


0   187   0  
March 2024