logo

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்


நூல் பெயர்    :  ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
                      (நாவல் )

ஆசிரியர்    :  வ.ஐ.ச.ஜெயபாலன்  

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2022

பக்கங்கள்    :  110

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  இளவேனில் வாசுகி ஜெயபாலன்  

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 120
ஓர் இனத்தின் வாழ்வியலை, ஓர் இனத்தின் வலிகளை, ஓர் இனத்தின் மீது தொடுக்கப்பட்ட துரோகங்களை, ஓர் இனத்தின் மீது ஏவப்பட்ட அவமானங்களை, ஓர் இனத்தின் மீது தூவப்பட்ட துயர்களை, ஓர் இனத்தின் வேரறுக்கப்பட்ட  இயல்புகளை, ஓர் இனத்தின் மீது திணிக்கப்பட்ட இயலாமையின் மரபுகளை, ஓர் இனத்தை வெறுப்பினால் மறக்கடிக்கப்பட்ட மாண்புகளை, ஓர் இனத்தின் அன்பை அழித்து, அதிகாரத்தால் அடக்கி, ஒன்றுமே செய்ய இயலாதவாறு ஓரங்கட்டப்பட்டு, உயிர் நசுக்கப்பட்ட வரலாறுகளை வரிகளில் சொல்ல இலக்கியத்தை விட்டால் வேறு வழியில்லை. இப்படியான இருட்டடிப்பு செய்யப்பட்ட வாழ்வை எல்லாம் வலியின் உளிகொண்டு  துயரச் சொற்களால் செதுக்கி அதை உணர்வுகளின் ஊடாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்' கவிதை நாவல். இதில் உள்ள ஒவ்வொரு வரியும் வாசிப்பவரின் மனதில் ஓர் இனத்தின் அடையாளங்கள் அழிந்து கொண்டிருக்கும் வலியைப் படர விடும் என்பதே இத்தொகுப்பின் கனம்.

இலங்கையில் உடுவில் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவைப் பரம்பரைகளின மூதூராகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டவர்  படைப்பாளி ‘ஜெயபாலன்’ அவர்கள். கவிதை, ஆய்வு நூல்கள் என எண்ணற்ற படைப்புகளை இச்சமூகத்திற்குத் தந்த எழுத்தாளராகவும், திரைப்பட நடிகராகவும் தனித்துவமாக அறியப்படுகிறார். இவர் நடித்து வெளியான ஆடுகளம் என்ற திரைப்படம் 2010 ஆண்டுக்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.