வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்திநான்காவது இதழ் உங்கள் கண்முன்
பரந்து விரிந்திருக்கிறது.
எழுத்தாளர் முகிலுடனான நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் கவி நுட்பங்கள் குறித்து எழுதியிருக்கிறார் மு.முருகேஷ்.
ஆதிரன் சுற்றுச்சூழல் குறித்து எழுதியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்திற்கான குஞ்சிதம்
குருசாமியின் பங்களிப்புகளை வீரமங்கைகள் பகுதியில் எடுத்துக்காட்டியுள்ளார் தி.கலையரசி.
ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கின் கலர் ஆஃப் பர்ப்பிள் விமர்சனத்தை
நிகழ்த்தியிருக்கிறார் கவிஜி. வாழ்வதையே வாழ்க்கைக்கான பொருளாக உரைக்கும் இருத்தலியம் குறித்து ஆராய்ந்து
மிக எளிமையாக உரைத்திருக்கிறார் அமிர்தம் சூர்யா. காதலின் நுண் உணர்வுகள் குறித்து
நம் புலப் பெயல் நீர் பகுதியில் எழுதியிருக்கிறார் மானசீகன். கவிதை நூல்கள் இரண்டின்
வாசிப்பனுபவங்கள் இவ்இதழில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இதழின் சிறுகதைகள் இரண்டும்
பூனையை மையமிட்டு எழுதப்பட்டவை. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என இம்மாதத் தகவு
நிறைந்திருக்கிறது.