வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்தொன்றாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
மார்ச் மாத இதழ் வழக்கம் போல மகளிர் படைப்புகளை மட்டும் தாங்கி வெளிவந்துள்ளது.
கவிஞர் இளம்பிறையின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. இளமைக் காலம், எழுத்துப் பணி, படைப்புச் சூழல், பெண்ணெழுத்து எனப் பல்வேறு வினாக்களுக்குப் பதிலளித்திருக்கிறார்.
இந்த இதழில் அற்புதமான மொழிநடையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. எடித் வார்ட்டனின் ஆங்கிலச் சிறுகதையை கார்குழலியும், இராஜலட்சுமியின் மலையாளச் சிறுகதையை கே.வி.ஜெயஸ்ரீயும் மொழிபெயர்த்துள்ளனர்.
தண்ணீர் தேடலில் பெண்ணின் வாழ்க்கை தொலையும் கணங்களை உரக்கச் சொல்கிறது `பெண்ணும் தண்ணீரும்` என்னும் கோ.லீலாவின் கட்டுரை. இந்த இதழ் முதல் தி.கலையரசி எழுதும் தமிழ் நிலத்து வீர மங்கைகள் என்னும் தொடர் வெளியாகிறது. முதலாவதாக, தில்லையாடி வள்ளியம்மையின் வீர வாழ்வு பேசப்பட்டுள்ளது. துளசி கவுடா குறித்த மேனகா ரஹமத்தின் கட்டுரையும், கவலை குறித்த ஆதிரா
முல்லையின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீதேவி
கண்ணன் மற்றும் விஜயராணி மீனாட்சியின் வாசிப்பனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.
கவிதைகள், கதைகள், வாசிப்பனுபவங்கள் என நிறைந்திருக்கும் இந்த மாதத் தகவின் அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.