வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபத்தொன்பதாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
படைப்பாளர் கவிதைக்காரன் இளங்கோவுடனான நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது.
கிம் கி டுக்கின் 3 அயர்ன் என்ற திரைப்படம் குறித்த அலசல், கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள் குறித்த பார்வை, பால் புதுமையரை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசும் `வானவில் வண்ண மின்னல்` பகுதி, பிரான்சு நாட்டின் தமிழர்கள் குறித்த கட்டுரை என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன. தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் குறித்த விரிவான கட்டுரை இந்த இதழுடன் நிறைவுபெறுகிறது.
கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என நிறைந்திருக்கும் இந்த மாதத் தகவின் அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.