வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபத்தெட்டாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
தற்காலத் தமிழ்ப் படைப்புலகில் வீரியமிக்க படைப்புகளைத் தந்துகொண்டிருக்கும் எழுத்தாளர் தமிழ்மகனின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. மெலினா திரைப்படம் குறித்த கவிஜியின் பார்வை, கவிஞர் விக்ரமாதித்யனுக்கு கி. ராஜநாராயணன் மற்றும் கோவை ஞானி எழுதியுள்ள கடிதங்கள், ஆரூர் தமிழ்நாடன் குறித்த மு.முருகேஷின் கட்டுரை, நவீனத்துவம் பற்றிப்
பேசும் அமிர்தம்
சூர்யாவின் `சட்டையை உரித்துக்கொள்ளும் பாம்பு`
பகுதி, உடல் குறித்த ஆதிரனின் பார்வை, லண்டன்
பயணம் குறித்த
இந்திரனின் அனுபவம்,
பேரிடர்க்காலங்களில் எழுந்த
தன் பாடல்கள்
குறித்த ஏகாதசியின்
பகிர்வு, பஞ்சும் பசியும் நாவல் குறித்த ரா.அழகுராஜின் விரிவான அலசல் என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.
கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என நிறைந்திருக்கும் இந்த மாதத் தகவின் அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.