வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபத்தியேழாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பிற்காகப் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் எழுத்தாளர் ஷாபி செறுமாவிலாயியுடனான நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. காலப் பயணத்தை மையமிட்ட பேக் டூ தி பியூச்சர் திரைப்படம் குறித்த கவிஜியின் பார்வை, ரொமாண்டிசிஸம்
பற்றிச் சுவைபடப்
பேசும் அமிர்தம்
சூர்யாவின் `சட்டையை உரித்துக்கொள்ளும் பாம்பு`
பகுதி, பயணத்தின்போது
கண்ட நிகழ்வைக்
கவிதையாக்கிய அனுபவம்
குறித்துப் பகிரும்
இந்திரனின் கட்டுரை,
தொ.மு.சி.ரகுநாதன்
நூற்றாண்டையொட்டி அவர்
படைப்பை மையமிட்டு
எழுதப்பட்டிருக்கும் அழகுராஜின்
கட்டுரை, பழங்குடிகள்
குறித்த தன்
பாடல் எழுந்த
கதையைக் கூறியுள்ள
ஏகாதசியின் பகிர்வு,
ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் குறித்த மு.முருகேஷின் கட்டுரை, பால்முறை குறித்த ஆதிரனின் பார்வை, மனிதனின்
அக நுட்பத்தை
அழகாய்ப் பேசியுள்ள
தனிமையின் குரல்
சிறுகதை, உறவு தரும் அழுத்தத்தினை வலியாய்ப் பதிவு செய்துள்ள ஆண்டன்பெனியின் சிறுகதை என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.
கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என நிறைந்திருக்கும் இந்த மாதத் தகவின் அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.