வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபத்திஐந்தாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
படைப்புக் குழுமம் பெரும்பொறுப்புடன் பெருவிழாவாய் நடத்தி முடித்திருக்கிற `படைப்புச் சங்கமம் 2023` குறித்த தொகுப்புக் கட்டுரையும் அனுபவக் கட்டுரையும் இதழில் வெளியாகியுள்ளன.
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் பரிசுப்போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றிருக்கிற சிறுகதைகள் `குப்பன்ன பாத்துக்குவான்` மற்றும்
`பொன்வண்டு காலம்`
இவ்இதழில் வெளியாகியுள்ளன. கேலி கிண்டல்களால் நிகழும் கொலை பற்றிய திரைப்படப் பார்வையாய் உருப்பெற்றிருக்கும் கவிஜியின் உலக சினிமா, கிளாசிஸம் பற்றி எளிமையாய்ப் புரியவைக்கும் அமிர்தம் சூர்யாவின் கட்டுரை, புத்தனின் புனைபெயர் ஆந்தை நூல் குறித்த வலங்கைமான் நூர்தீனின் விமர்சனம், பேரன்பிற்காய் ஏங்கும் பெண் குறித்துப் பேசும் ஆண்டன்பெனியின் வெயிலோடு விளையாடி பகுதி என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.
கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என நிறைந்திருக்கும் இந்த மாதத் தகவின் அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.