வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபத்திமூன்றாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
இந்த இதழில் எழுத்தாளர் ராம் தங்கத்தின் நேர்காணல், `வாட் ஹேப்பன்ட் டூ மண்டே` என்னும் திரைப்படம் குறித்த பார்வை, கவிஞர் நா.முத்துநிலவனுடனான கவிஞர் மு.முருகேஷின் அனுபவங்கள், `தட்டு நிலாக்கள்` என்னும் நூல் குறித்த அறிமுகம், நகரம் சார்ந்தும் எழுதுபவராய்த் தன்னை முன்வைக்கும் கவிஞர் ஏகாதசியின் `பாடல் பிறந்த கதை`, கலைகள் மற்றும் அதற்குத் தேவைப்படும் படைப்பூக்கம் குறித்த ஆழ்கருத்துக்களை முன்வைக்கும் `வானவில் வண்ண மின்னல்`, தமிழ்ச் சமூகத்தில் தாய்மாமன் என்னும் உறவிற்கான அதிமுக்கியம் குறித்துப் பேசும் `வெயிலோடு விளையாடி`, கவிஞர் விக்ரமாதித்யனுக்குப் பத்திரிகையாளர் துரை எழுதியுள்ள கடிதங்கள் எனச் சிறந்த பல பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் பரிசுப்போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றிருக்கிற சிறுகதைகள் `றஹீம் ஜிப்ரான்
ஜீவிதம்`, `எதிர் ரோமக்காரன்` மற்றும் `மார்ப்பால்` இவ்இதழில்
வெளியாகியுள்ளன.
இந்த மாதத் தகவின் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், தொடர்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.