வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபத்திரண்டாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு `சிறுகதைப் பரிசுப்போட்டி` முடிவுகள் இவ்இதழில் வெளியாகியுள்ளன. முதல் மூன்று பரிசு பெற்ற சிறுகதைகளும் இதழில் இடம்பெற்றுள்ளன. கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எழுத்தாளர்கள் பாலகுமாரன், கௌதம நீலாம்பரன், கோமல் சுவாமிநாதன் எழுதியுள்ள கடிதங்கள் இதழில் வெளியாகியுள்ளன. டிரைஆங்கில் திரைப்படப் பார்வை, கவிஞர் ஜீவியின் படைப்புகள் குறித்த வாசிப்பனுபவம், கொதுலுப் தீவிற்குச் சென்ற கவிஞர் இந்திரனின் பயண அனுபவம், மொழி குறித்த ஆதிரனின் பார்வை, கால மாற்றத்திற்கேற்ப மாறும் அப்பா மகனுக்கிடையேயான உறவுப் பிணைப்பு குறித்த பகிர்வு, பாடல் பிறந்த கதை, ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த மாதத் தகவின் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், தொடர்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.