வணக்கம். படைப்பு ‘தகவு’ அறுபதாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலனுடனான நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. தமிழின் முக்கியப் படைப்பாளிகளான விக்ரமாதித்யன், கலாப்ரியா, கதிர்பாரதி, ஆரூர் தமிழ்நாடன், பிருந்தாசாரதி, நேசமித்ரன்,
மானா பாஸ்கரன், இராம.குருநாதன்
ஆகியோர் தாங்கள் வாசித்ததில் பிடித்த நூலினைப் பற்றிப் பகிர்ந்துகொள்கின்றனர். கவிஞர் கண்மணி குணசேகரன்
படைப்புகள் குறித்த
வாசிப்பனுபவம், தி
எலிபென்ட் விஸ்பர்ஸ்
திரைப்பட அனுபவம், கடல் என்னும் குறிச்சொல் விளக்கம், பாடல் பிறந்த கதை என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன. பேச்சாளர் கவிதா ஜவகருடனான
சந்திப்பு இவ்இதழிலும்
தொடர்கிறது.
இந்த மாதத் தகவின் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், தொடர்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.