வணக்கம். படைப்பு ‘தகவு’ ஐம்பத்தேழாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
இந்த இதழில் நேர்காணல் காணப்பட்டிருக்கும் ஜோ டி குருஸின் படைப்புகள் விவாதத்தை நோக்கியன. எந்த மக்களுக்காக அவரது படைப்புகள் எழுந்தனவோ அந்த மக்களின் புறக்கணிப்புகள் குறித்து இந்நேர்காணலில் அவர் பேசியிருப்பது படைப்பாளனை ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பாங்கிற்கான வலி மிகுந்த சான்று. 2022இல் தாங்கள் வாசித்த நூல்கள் குறித்த இலக்கியவாதிகளின் அனுபவப் பகிரல்கள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் விக்ரமாதித்யன் குறித்த மு.முருகேஷின் கட்டுரை, குறட்டை மாமா கணேசுபிரபுவுடனான சந்திப்பு, பியாண்ட் தி
க்ளவுட்ஸ் திரைப்பட
அனுபவம், கழிமுகம் நூல் வாசிப்பு, விதைகள் மற்றும் தத்துவம் குறித்தான பகிர்வு எனப் பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த மாதத் தகவின் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், தொடர்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.