வணக்கம். படைப்பு ‘தகவு’ ஐம்பத்துநான்காவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
“படைப்பு
- சமூகத்தின் இணைப்பு”
என்ற உயரிய
லட்சியத்தை நெஞ்சில்
ஏந்தியபடி இலக்கியத்துக்கான ஒரு தனி மேடையை
உருவாக்குவதைத் தனது
இலக்காகக் கொண்டு
ஏழாம் ஆண்டு
படைப்புச் சங்கமம்
விழாவைப் பிரம்மாண்ட
அதிர்வுகளுடன் நடத்தி
முடித்திருக்கிறது படைப்புக்
குழுமம். அவ்விழா குறித்த கட்டுரை
இந்த இதழில்
இடம்பெற்றுள்ளது.
பெண்ணியத் திறனாய்வு, மு.மேத்தா வாசிப்பனுபவம்,
திரை அனுபவம்,
பாடல் பிறந்த
கதை,
சூழலியல் விழைவு,
நூல் வாசிப்பு
எனப் பல்நிலைகளில்
அமைந்துள்ள கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், தொடர்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.