வணக்கம். படைப்பு ‘தகவு’ நாற்பத்திநான்காம் இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
படைப்பு சங்கமம் 2021 மிக நேர்த்தியான முறையில் திட்டமிடப்பட்டு மகிழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. நெடுங்காலம் இலக்கியத் துறையில் கோலேச்சிவரும் வல்லமையாளர்களும் புதிதாய் இலக்கியக் களங்காணும் இளைஞர்களும் நெகிழ்ச்சியில் ஒன்றிணைந்த தருணமாக விழா நாள் அமைந்திருந்தது. அவ்விழா குறித்த தொகுப்பு கட்டுரையாய் இதழில் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது.
கவிஞராய்ப் புதுமைப்பித்தனை அணுகியுள்ள மு.முருகேஷின் கட்டுரை, 'பாரஸ்ட்
காம்ப்', 'திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்' திரைப்படப் பார்வைகள், பார்வைக்கோண அலசல்களைக் கூறும் மனநிலைக் குறிப்புகள், யாழ் குறித்த கட்டுரை, நூல் விமர்சனங்கள், வாசிப்பனுபவங்கள் எனப் பல பகுதிகள் இவ்இதழில் உள்ளன.
இன்னும்
சிறுகதை, கவிதை, கட்டுரைகள், தொடர்கள்
என உள்ள
அனைத்துப் பகுதிகளையும்
வாசியுங்கள்.. விவாதியுங்கள்..
பகிருங்கள்.