வணக்கம். படைப்பு ‘தகவு’ நாற்பத்திமூன்றாம் இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
உலகெங்கிலுமுள்ள தமிழ்ப் படைப்பாளர்களை ஒன்றிணைத்து உன்னதப் பணியாற்றும் படைப்புக் குழுமம் இலக்கிய உலகில் தனது தனி முத்திரையைப் பதிக்கும்வண்ணம் ஆண்டுதோறும் ‘படைப்பு இலக்கிய விருதுகள்’ வழங்கிவருகிறது. தரமான தேர்ந்தெடுத்தலால் படைப்பாளர்களின் பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளன, இவ்விருதுகள்.
2020ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்களுக்கான ‘படைப்பு இலக்கிய விருதுகள் 2021’ மகிழ்ச்சியுடன் இவ்இதழில் அறிவிக்கப்படுகின்றன.
எழுத்திலிருந்து சினிமாவுக்குப் போய் வெற்றிபெற்ற எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவரான அஜயன்பாலாவின் நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. தன் வாசிப்புக்காக மட்டுமன்றிப் பிறர் வாசிப்புக்காகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எண்பது வயது இளைஞர் ப.முத்துப்பாண்டியின் அனுபவங்கள் சந்திப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. கவிஞர் பிருந்தாசாரதி தனது ‘பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்’ நூல் குறித்துப் பகிர்ந்துள்ளார். நூல் விமர்சனங்கள், திரைப்படப் பார்வைகள், வாசிப்பனுபவங்கள் எனப் பல பகுதிகள் இவ்இதழில் உள்ளன.
இன்னும்
சிறுகதைகள், கட்டுரைகள்,
தொடர்கள் என
உள்ள அனைத்துப்
பகுதிகளையும் வாசியுங்கள்..
விவாதியுங்கள்.. பகிருங்கள்.