வணக்கம்.
படைப்பு ‘தகவு’
நாற்பத்தொன்றாம் மின்னிதழ் உங்கள் கண்முன்
பரந்துவிரிந்திருக்கிறது.
படைப்பாளர் ரவிசுப்பிரமணியன் கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட, குறும்பட இயக்குநர்.
இசை, நாட்டியம், நடிப்பு என இயங்குபவர். சுருங்கச் சொன்னால் இயல் இசை நாடக முப்பரிமாணத்திலும் தேர்ந்தவர்.
தேர்ந்தெடுத்துக் கோர்க்கும் வார்த்தைகளின் குழைவில் ஆழ்
மனதின் மென்மை உணர்த்தும் மாயக்காரர். கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்களின் நேர்காணல் இம்மாத இதழில்
வெளியாகியுள்ளது.
கவிஞர் பிரான்சிஸ் கிருபா, கடையநல்லூர் பென்ஸி
ஆகியோர் குறித்த நினைவுத் துளிகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் தமிழ்
ஒளி குறித்த கட்டுரையை மு.முருகேஷ் எழுதியுள்ளார். நூல் விமர்சனங்கள், திரைப்படப் பார்வைகள், வாசிப்பனுபவங்கள் எனப் பல பகுதிகள் இவ்இதழில் உள்ளன.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.