வணக்கம்.
படைப்பு ‘தகவு’ முப்பத்துநான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன்
பரந்துவிரிந்திருக்கிறது.
எழுத்தாளர் கரிகாலனின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெறுகிறது. தேநீர்
சாலைவழி நமக்குள் பல்வேறு உணர்வுகளைக் கடத்தியவர். நவீன கவிதைகளின்வழி
களம் புகுந்தவர் புதினம் எழுதினார்.. சங்க இலக்கியம், தற்காலப் படைப்புகள்,
திரைப்படம், தமிழர் வாழ்வியல் என எது குறித்தும் தன் கருத்தைத் தெளிவாய்
முன்வைக்கிறார். தமிழ்க்களத்தில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் கரிகாலனின்
கருத்துக்கள் விடைகளாய் நமக்கொரு வெளிச்சத்தைத் தருகின்றன.
கவிதைக்குள் கலந்திருக்கும் கதை என்ற மு.முருகேஷின் தொடர்
தொடங்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டும் தொ.ப.வின் வாழ்வும்
பணியும் என்ற தொ.பரமசிவன் குறித்த கட்டுரையை கே.கே.மகேஷ் எழுதியுள்ளார்.
கவிஞர் விக்ரமாதித்யனுக்குக் கவிஞர்கள் வைரமுத்து, பாலைநிலவன்,
சு.வெங்குட்டுவன் எழுதிய கடிதங்கள், நூல்விமர்சனம், திரைப்படப் பார்வைகள் எனப்
பல பகுதிகள் இவ்இதழில் உள்ளன.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள
அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.