நூல் பெயர் : சிவனாண்டி
(சிறுகதைகள் )
ஆசிரியர் : ப.தனஞ்ஜெயன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 120
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
நுட்பத்தின் நுனியில் அமர வைக்கும் ஆற்றல் சிறுகதைகளுக்கு உண்டு. உணர்வுகளை ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதுக்குக் கடத்தும் மந்திர சக்தி இக்கதைகளுக்கு வாய்க்கப்பெற்ற வரப்பிரசாதம். வாழ்வின் சுவாரஸ்யங்களை எல்லாம் கதை வழியே கேட்டுப் பழகிய பால்யம் நம்முடையது என்பதால் இவ்விலக்கிய வகைமை மனிதகுல சுழற்சியில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்தலைச் சுமந்து சுற்றிக் கொண்டே வருகிறது எக்காலத்திற்கும். எதார்த்தங்களை எடுத்துச் சொல்லும் யுக்தி எழுத்தில் கொண்டு வந்து விட்டால் போதுமானது கதைக்களமும் கதாபாத்திரக் களமும் கதையை நகர்த்தி முடித்து விடும். அப்படிப்பட்ட எதார்த்தமிக்க கதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘சிவனாண்டி’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் தமது நினைவலைகளில் ஊடாடும் சில நிகழ்வுகளைச் சொல்லிப் போவதும் அது வாசிப்பவர் எண்ண ஓட்டத்தில் கலந்து கிறங்கடிப்பதும் இத்தொகுப்பின் பலம்.
புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ‘ப.தனஞ்ஜெயன்’ அவர்களுக்கு இது மூன்றாம் தொகுப்பு. இவர் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட்ட ‘முழு இரவின் கடைசித் துளி’ என்ற தொகுப்பின் பல கவிதைகள் பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவரது பல படைப்புகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன. மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.