நூல் பெயர் : பூமியிலிருந்து கனவை வாசிக்கும் ஒருவர்
நூல் வகைமை : கவிதைகள்
ஆசிரியர் : ஸ்டெல்லா மேத்யூ
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 132
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 260
மனதில் அலையும்
ஒரு ஒரு கனவு காதலிதான் ஸ்டெல்லாவின் கவிதைகளில் தென்படுகிறாள். நடமாடுகிறாள். ஏமாற்றமும்
வேதனையும் கொண்டவள் அக்காதலி. எப்போதும் கனவில்
மிதந்து தன் கழிந்த பழைய காலத்தை மீட்க மையலோடு காத்திருப்பவள் ஸ்டெல்லாவின் கவிதை
பெண். மனதின் சாயைகளை உடலின் எத்தனிப்புகளை ஸ்டெல்லா கருணையின் மொழியில் எழுதுகிறாள்.
அவள் பிடிக்கும் பிடிக்கும் என்று சொல்வதை புறமொதுக்கும் உலகத்திடம் சதா காலமும் உரையாடுகிறார்.
கைவிடப்பட்டவளாக
வலி மிகுந்தவளாக நித்திய காலமாக யாருக்கோ காத்திருப்பவளாகவே வெளிப்படுகிறாள். அவளுடைய
மனம் அழுகையின் வ
ஈரத்துணியால்
முடிந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக பேசவியலாத மௌனத்தில் அவளது வலி மரத்திலிருந்து
விழுந்த இலை போல ஆகாயப் பறவையின் இறகு போல மொழியில் சாசுபதமாக பதிவு கொண்டுள்ளது.
தன்னை புறக்கணிக்கப்பட்ட
மிகவும் சிறிய உயிராக காணும் கவி பிற உயிர்களிடம் தன் தனிமையை பெண்மையின் மொழியில்
வெளிப்படுத்துகிறாள்.