வணக்கம்.
படைப்பு ‘தகவு’ முப்பத்தாறாம் மின்னிதழ் உங்கள் கண்முன் பரந்துவிரிந்திருக்கிறது.
வெளிவராத குரல்களின் உரத்த குரல்களாக ஒலிப்பன ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகள். தனது கதைகளின் ஊடாக கரிசல் மண்ணையும் வறுமைகளோடு வாழும் விதவிதமான ஆண் பெண்களையும் சின்னஞ்சிறுவர்களின் ஆசைகளையும் காதல்வயப்பட்ட உள்ளங்களின் தகிப்பையும் தவிப்பையும் உறவின் விரிசல்களையும் கலாபூர்வமாகச் சித்தரித்தவர். பாசாங்கற்ற இயல்பான மொழிநடையில் வாசகனை நோக்கி மழைபோல நேரடியாகப் பொழியும் ஆற்றல் உடையவர். களத்தில் முழுமையான செயல்பாட்டில் இருக்கும் படைப்பாளரான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் நேர்காணல் இந்த இதழில் வெளியாகியுள்ளது.
நூறாண்டு கண்ட செப்பறை நாயகர் என எழுத்தாளர் வல்லிக்கண்ணன் குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. எழுத்தாளர் கந்தர்வன் குறித்து கவிஞர் மு.முருகேஷ் பகிர்ந்திருக்கிறார். இந்திர நீலம், மரநாய், பெரியோர்களே தாய்மார்களே நூல்கள் குறித்த வாசிப்பனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் விக்ரமாதித்யனுக்குக் கவிஞர்கள் பிரம்மராஜன், ரமேஷ்பிரேதன், சத்யன், எழுத்தாளர் கோ.ராஜாராம், பத்திரிக்கையாளர் லக்ஷ்மண் எழுதிய கடிதங்கள், திரைப்படப் பார்வைகள் எனப் பல பகுதிகள் இவ்இதழில் உள்ளன.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.