வணக்கம். படைப்பு
‘தகவு’ முப்பத்திரண்டாம்
மின்னிதழ் உங்கள் கண்முன் பரந்துவிரிந்திருக்கிறது.
படைப்பு இலக்கிய விருதுகள் பெற்ற நூல் விவரங்கள் இவ்விதழில் வெளியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த நூல்களுக்குரிய நல் அங்கீகாரம் இவ்விருதுகள். ஒவ்வொரு பிரிவிலும் விருது பெற்ற நூலுடன் சிறப்புப் பரிசு பெற்ற நூல்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. 2019ஆம் ஆண்டின் தன்னிகரற்ற நூல்கள் இவையெனத் துணிந்து கூறலாம். தம் தகுதியால் சிறப்பு பெற்ற படைப்பாளர்களுக்குத் தகவு வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறது.
படைப்பு குழுமம் நடத்திய கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி
2020இல் பரிசு பெற்ற கவிதைகள் இவ்இதழில் சான்றிதழுடன் வெளியாகியுள்ளன. தமிழின் தலைசிறந்த முன்னோடி ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களுக்கும் தன் அசாதாரணமான திரைமொழியால் வலிமையான படைப்புகள் தந்த கிம் கி டக் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இவ்இதழில் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. கவிஞர்
விக்ரமாதித்யனுக்குப் பிற இலக்கிய
ஆளுமைகள் எழுதிய
கடிதங்கள் இலக்கியத்திற்கு ஒப்பானவை.
அவை இவ்இதழிலிருந்து தொடர்ந்து வெளியாகின்றன.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப்
பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.