வணக்கம். படைப்பு ‘தகவு’ இருபத்தியொன்பதாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது.
மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவந்துள்ள படைப்பாளரும் கூட. இடதுசாரி சிந்தனையுடனான இவரது படைப்புகள் பலராலும் பேசப்பட்டுள்ளன. தன்னுடைய முழுநேரத்தையும் மொழிபெயர்ப்புப் பணிக்காக அர்ப்பணித்து வாழ்ந்துவரும் அவருடனான சிறு நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன. குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் குறித்த கவிஞர் விக்ரமாதித்யனின் கட்டுரை இவ்இதழில் வெளியாகியுள்ளது. ஆதிரனின் மனநிலைக் குறிப்புகள், அறிவியலும் அறிவோம் எனக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தி ஃபால், சிண்ட்டு கா பர்த்டேபோன்ற திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளும் தாய் நாவல் வாசிப்பு அனுபவமும் இடம்பெற்றுள்ளன. கி.ரா. குறித்த இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.