வணக்கம்.
படைப்பு ‘தகவு’ இருபத்தியெட்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன்
விரிந்துபரந்திருக்கிறது.
ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துவிடாதா என்று மொத்த உலகமும்
ஏங்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் கவிதையில் ஒவ்வொரு நாளும்
கண்டுபிடிப்பு நிகழ்வதாகச் சொல்கிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். பல ஆண்டுகளாகத்
தமிழில் எழுதிவரும் அவருடனான ஓர் இனிய
நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.
தமிழின் தனிப்பெரும் இலக்கிய ஆளுமை எழுத்தாளர் வண்ணதாசனின் பவளவிழாவைச்
சிறப்பிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. வண்ணதாசன் குறித்த எழுபத்தைந்து தகவல்களை
எம்.எம்.தீன் தொகுத்துத் தந்துள்ளார். மிக முக்கியமான பிரபலங்கள் வண்ணதாசனுடனான
தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள் குறித்த
கவிஞர் விக்ரமாதித்யனின் கட்டுரை இவ்இதழில் வெளியாகியுள்ளது. ஆதிரனின் மனநிலைக்
குறிப்புகள், கோவை ஞானியின் நினைவுகள், கி.ரா.மற்றும் ஜெயகாந்தன் இடையிலான நட்பு குறித்த கட்டுரைகள்
இடம்பெற்றுள்ளன. தி மோட்டார் சைக்கிள்
டையரிஸ், ட்ரெய்ன் டு பூசன்
போன்ற திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளும் எரியும் பனிக்காடு நூல் குறித்த
வாசிப்பு அனுபவமும் இடம்பெற்றுள்ளன. ஜின்னா அஸ்மியின் பிரதி எடுக்க முடியா
பிம்பங்கள் என்னும் கவிதைத் தொடர் தொடங்கியுள்ளது.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப்
பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்..