வணக்கம். படைப்பு ‘தகவு’ இருபத்தியாறாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது.
எழுத்தின் கூர்மையும் வலிமையும் தாண்டி அதன் அற மதிப்பீடுகளே
அதைக் காலத்தின் பீடத்தில் ஏற்றிவைக்கின்றன. அப்படியான, காலத்தின் பீடமாகவும், தமிழிலக்கியத்தின்
முக்கியமான அடையாளமாகவும் முகமாகவும் நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும்
ஒலிப்பவர் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள். நம் காலத்தின் எழுத்துக்கான
வரையறைகளை விரித்துக்கொண்டே செறிவான கலாச்சாரத் தொடர்ச்சியைச் சந்ததியினருக்கு..
அதன் மதிப்பீடுகளைக் காலக் கணினியாய்த் தமிழுலகுக்குக் கொடுத்த பொக்கிசம் இவர். எழுத்தாளர்
பெருமாள் முருகனுடனான ஓர் இனிய நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. இந்த
நேர்காணல் மாணவர்களின் வினாக்களுக்கு அவர் அளித்த பதில்கள் என்னும் சிறப்புப் பகுதியையும்
கொண்டிருக்கிறது.
கல்யாண்ஜியின்
கவிதைகள் குறித்த கவிஞர் விக்ரமாதித்யனின் கட்டுரை இவ்இதழில் வெளியாகியுள்ளது. தமிழக ஓவிய மரபு, ரோஜாமுத்தையா
ஆராய்ச்சி நூலகம், கி.ரா.வின் சிறுதெய்வங்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஜட்ஜ்மெண்ட் அட்
நியூரெம்பெர்க், மண்ட்டோ, செத்தும் ஆயிரம் பொன், தப்பட் போன்ற திரைப்படங்கள்
குறித்த கட்டுரைகளும்; தூர் கவிதை நூல், அம்மா
ஒரு கொலை செய்தாள் சிறுகதை போன்றவற்றிற்கான விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன.
இன்னும்
சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள்,
அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்