வணக்கம். படைப்பு ‘தகவு’ இருபத்தைந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன்
பரந்துவிரிந்திருக்கிறது.
‘தகவு’ மூன்றாம் வருடப் பயணத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. தகவு
என்னும் இலக்கிய வனத்துள் மாதாமாதம் புகுந்து வாசிப்பாழத்தை உணரும் எம்
மதிப்பிற்குரிய வாசக அன்பர்கள் அனைவருக்கும் தகவின் தலைதாழ்ந்த நன்றிகள்.
தகவின் தகவினைப் பேணும்வகையில் தகவிற்குப் பல்லாற்றானும் பங்களித்துவரும்
படைப்பாளர்கள் அனைவருக்கும் எம் நன்றிகள். எவ்ஆண்டிலும் இவ்ஆதரவினை
வேண்டுகிறோம்.
‘மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மகள்’ படைப்பாளர் லீனா மணிமேகலையின்
நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. ரோஜாமுத்தையா ஆராய்ச்சி நூலகம், கி.ரா.
படைப்புகள் குறித்த தொடர்கள் தொடங்கப்பட்டுள்ளன. திராவிடமும் தமிழும், கவிஞர்
விக்ரமாதித்யனுக்கு நகுலன் எழுதிய கடிதங்கள், உலகத் திரைப்படப் பார்வை போன்ற
பகுதிகளுடன் மேலும் உள்ள நூல் விமர்சனங்கள், கட்டுரைகள், தொடர்கள்,
சிறுகதைகள், கவிதைகள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்..
விவாதியுங்கள்.. பகிருங்கள்..