வணக்கம். படைப்பு ‘தகவு’ இருபத்திநான்காம் மின்னிதழ்
உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது.
அற்புதமான மொழியாலும் எளிமையான வார்த்தைகளாலும்
நமக்கான குரலாய் வெடிப்பவர் கவிஞர் அ.வெண்ணிலா!
கவிஞர் மு.முருகேஷ் சிறந்த ஹைக்கூ கவிஞர்,
எழுத்தாளர், சிற்றிதழாளர், பத்திரிக்கையாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளர்,
கல்வி ஆலோசகர், பதிப்பாளர் எனப் பல தளங்களில்
தீவிரமாக இயங்கி வருபவர். இலக்கிய உலகின் இணையர்கள் இவர்களுடனான ஓர் இனிய நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.
கொரானா
நோயின் அச்சுறுத்தல் ஒரு பக்கம், வயிற்றுப்பசி ஒரு
பக்கம் என்று இக்கட்டான சூழ்நிலையில் ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்க.. படைப்பு
குழுமம் மேற்கொண்டிருக்கும் உன்னதப் பணி குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆகுளி, ஒரு விடுமுறைக்காலக்
காதல் கதை, தமிழ் முருகன் ஆகிய நூல்கள் குறித்த
விமர்சனங்கள், கவிஞர் விக்ரமாதித்யனுக்கு நகுலன் எழுதிய கடிதங்கள், உலகத் திரைப்படப்
பார்வை போன்றவை இடம்பெற்றுள்ளன.
படைப்பு வாசகர்கள்
குறிப்பிட்ட ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’ பகுதி புதிதாய் இடம்பெற்றுள்ளது. தொல்லியல்
ஆய்வினை மிகத் திறம்பட எடுத்துரைத்த ‘கீழடி - தமிழ் மண்ணின் தாய்மடி’ தொடர் இந்த இதழுடன்
நிறைவடைகிறது.
இன்னும் சிறுகதைகள்,
கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.