வணக்கம். படைப்பு ‘தகவு’ இருபத்திமூன்றாம் மின்னிதழ் உங்கள் கண்முன்
விரிந்துபரந்திருக்கிறது. குடும்பம் சமூகம் என்ற இரு தடங்களிலும் தமக்கான முழு
பங்களிப்பைச் செலுத்திப் பிரபஞ்ச இயக்கத்திற்கான பெரும்சக்திகளாக விளங்கும்
பெண்களை மகளிர் தினத்தை முன்னிட்டுத் தகவு வணங்கி வாழ்த்துகிறது. மகளிரைப்
பெருமைப்படுத்தும் வகையில் இந்த இதழில் பெண் படைப்பாளர்களின் படைப்புகளே
இடம்பெற்றுள்ளன.
சாகித்ய அகாதமி விருது பெற்றுப் பெண்களுக்கு ஓர் ஊக்கமாய் முன்னிற்கும்
கே.வி.ஜெயஸ்ரீயின் நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. ருமேனிய நாட்டுச்
சூழலில் பெண்நிலை பேசும் திரைப்படத்திற்கான பா.ஜீவசுந்தரியின் விமர்சனம்,
‘வைன் என்பது குறியீடல்ல’ நூல்விமர்சனம், கே.வி.ஷைலஜாவின் மொழிபெயர்ப்புச்
சிறுகதை, அரசியலையும் பெண்களையும் இணைத்து நோக்கும் திலகபாமாவின்
கட்டுரை, சமகாலச் சாதனைப் பெண்மணிகள் குறித்த அமுதா தமிழ்நாடனின் கட்டுரை
போன்ற பகுதிகள் அமைந்துள்ளன.
மேலும் பெண்களால் மட்டுமே படைக்கப்பட்டுள்ள சிறுகதைகள், கவிதைகள்,
நூல் விமர்சனம், கட்டுரைகள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும்
வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.