Samundeeswari.E
கவிதை வரிசை எண்
# 298
இமைகள் திறந்து
எழுக விடியலே!!!!!
பாவையே
பாயிரம் தோறும்
உனக்கு உவமைகள்
ஆயிரம்!!!
வான் மதியாம்
வண்ண மலராம்!!!
தாங்கிடும் பூமியாம்
தேங்கிடும் கங்கையாம்!!!
நீ தெய்வத்திற்கும்
உவமையாம்,
தேவையில்லை உவமை
உனை ஊதாசினப் படுத்துவது
உண்மை .
நீரின்றி மட்டுமல்ல,
நீயின்றியும் அமையாது
உலகு!!!!!
விடியல் கதிரே
நீ விழி மூடி
தூங்கலாமா?
விடிவெள்ளி உதயமாயிற்று
வெளியே வா!!!!
உன் ஞான கரத்தால்
இஞ்ஞாலத்தை மீட்டு!
கவிஞன் கனி மொழிகள்
கன்னி உனக்கு
வின் மீன் பூக்களாம்!!
வின் மீன் பூக்களல்ல,
செயற்கை கோள் ஏறி
செவ்வாயில் நீ சென்று
செயலகம் அமை!!
திங்களல்ல நீ!
திங்களுக்கும் சென்று,
செயலாற்றும்
செல்வியாய் இரு!!!!
கங்கையல்ல நீ!
கங்கயெனும் கடலையும்
தாண்டி கடமையாற்றும்
நங்கையாய் இரு!!!!!
பூவையல்ல நீ!
பொறியியலிலும்,
புரட்சி செய்யும்
பாவையாய் இரு!!!!
அகில இருள் நீக்கும்
சூரிய பிழம்பே,
நீ இன்னும் வத்தல் குழம்பின்
இசை பாடுவதேன்?
கிழிசல்கள் தைப்பதுதான்
உன் வேலையா?
ஓசோன் விரிசலை
ஒட்டட்டும்
உன் விஞ்ஞானம்!!!
கொலுசொலி பாதங்கள்
கொஞ்சி நடந்தது போதும்,
எவரெஸ்ட் சிகரத்திலும்
உன் சுவடுகள் பதியட்டும்!!!!
மூக்குத்திக்குள்
முத்துக்கள் சிரித்தது போதும்.
மூச்சடக்கி ,
முத்து குளிக்கவும்
நீ முன் வர வேண்டும்!!
வீதங்கள் கேட்கும்
வேதங்கள் ஏது?
யாவும் நாளை,
நமதாகும் போது!!
நாடாளுமன்றமும்
நங்கை நமக்காக
பாராளுமன்றமும்
பாவை உனக்காக!!!
இவ்வையகம் போதாது
நிலாவிலும் நாற்காலி
அமைத்து,
நாளை அவ்வானையும்
ஆளலாம் வஞ்சியே!!!!!
ஏ.சாமுண்டீஸ்வரி
பாதிராப்புலியூர்
திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
604304
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்