மகளிர் தினம்.
1.மகளிருக்கென்று ஒரு தனிதினம்
2.அதை நினைத்தாலே இனிக்கிறது மனம்
3.ஆம், எம்மைச் சிறப்பிக்கும் நாள் இது?
4.இதைவிட இன்பம் உலகில் எனக்கேது?
5.எனினும், மனமேங்குது ஒரு கனாவுடன்
6.சுதந்திரம் பெற்றோமா எனும் வினாவுடன்
7.முப்பத்துமூன்றில் இடம்பிடிப்பது மட்டுமல்ல சுதந்திரம்..
8.அன்பெனும் ஆயுதத்தால் அனைத்து இதயத்திலும் இடம் பிடிப்பதுவே சுதந்திரம்..
9.ஆணுக்கு ஈடாக ஆடை குறைத்தால் வராது சுதந்திரம்
10.ஆணுக்கும் மேலாக அறிவை நிறைத்தால் வருவது சுதந்திரம்.
11.இருட்டில், வெளியில் சென்று கூத்தாடுவது அல்ல விடுதலை.
12.இருளில் இருக்கும் பெண்களுக்கு வெளிச்சம் தருவது விடுதலை.
13.பெண் என்பவள், வெறும் பெண்ணல்ல ..தாயாக, தாரமாக
14.மகள்,சகோதரியாக, உற்ற தோழியாய் உலவுகின்ற தேவதை.
15.இதை உள்ளங்களில் பதியச் செய்வோம் நம் கடமையென
16.அதற்கு நாம் பேணவேண்டும் நற்குணத்தை நம் உடைமையென
17.இத்தகு கருவிகளுடன் கண்ணியமாகப் பயணிப்போம்
18.பண்பட்ட மனதுடன், பகுத்தறிவின் துணையுடன்
இப்படிப் பயணித்தால் வெல்லலாம் 19.தொல்லைகளை
20.விரிவாக்கலாம் நம் மன எல்லைகளை.
21.மீறியும், ஆங்காங்கே சில அவலங்கள் தொடர்ந்தால்
22.அப்போது பொங்கி எழுவோம்,புரட்சி செய்வோம்.
23.அதுவரை புதுமை என்றும், புரட்சி என்றும் வாய்ஜாலம் பண்ணாமல்
24.பெண்ணியத்தை ஆக்குவோம் பேரழகாய்!
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்