ரா. மகேஸ்வரி
கவிதை வரிசை எண்
# 245
எங்கும் பெண் ;எதிலும் பெண்;
அன்பை புகட்டுவதில்
அண்ணையகவும்
இருக்கின்றாய்;
அறிவை போதிப்பதில் நீ
ஆசிரியராகவும்
இருக்கின்றாய்;
அரவணைப்பில்
சகோதரியாக நீ
இருக்கின்றாய்;
ஊக்கம் கொடுப்பதில் சிறந்த தோழனாகவும்;
மனதோடு உரைவதில்
மனைவியாகவும்
இருக்கின்றாய்;
துயரத்தை துடக்கும்போது சிறந்த துனைவியகவும்;
தாயான பின்பும் கூட இன்றும் என்றென்றும்; குழந்தையாய் பார்க்கும்
பாட்டியாகவும் இருக்கின்றாய்;
நோயைக் குணப்படுத்துவதில்
மருத்துவச்சியாகவும்
இருக்கின்றாய்;
காப்பதில் கடவுளாகவும்
நீ இருக்கிறாய்;
நம்மை செதுக்குவதில் சிறைந்த சிர்ப்பியாகவும்;
உணவளிப்பதில் அன்னபூரணியயாகவும்
நீ நிறந்திருக்கிறாய் ;
வீரத்தில்
வேலுநாச்சியாகவும் நீ இருக்கிறாய்;
தவறுகளை தட்டிக் கேட்பதில் கிரன் பெடியாகவும் ;
மண்ணைவிட்டு விண்ணைத் தொடுவதில் கல்பனா சாவ்லாவாகவும்; அதரிப்பதில் அன்னை தெரஸாவாகவும் இருக்கின்றாய்; விஞ்ஞானத்தில் ஒரு மேரி கியூரியாகவும்;
வரவுக்கேற்ப சிலவு செய்வதில் சாமர்த்தியசாலியாகவும்;
பொறுமையில் பூமாதேவியாகவும் நீ இருக்கிறாய்;
கற்பில் சீதையாகவும் நீ இருக்கிறாய்;
சத்தியத்தில் நீ சாவித்திரி யாகவும்;
அள்ளிக் கொடுப்பதில் தனலஷ்மியாகவும் இருக்கின்றாய்; இத்தகைய பல உருவங்களில் நிறைந்து ; கண்ணுக்கு விருந்தளிக்கும் பெண்களைப் போற்றுவோம்;
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்