V.விஜயா
கவிதை வரிசை எண்
# 243
பெண்மையை போற்றுவோம்
நன்மை செய்யும் பெண்மைதனை போற்றி பாடுவோம்
அவர் மாண்புதனை சபைதனிலே உரக்க பேசுவோம்
மண்வாழ பெண்ணினமோ அவசியம்
பெண்ணென்ற படைப்பதுவோ அதிசயம்
புறம்தள்ளி பெற்றவளும் அன்னையாவாள்
குறைவில்லா பாசமதில் முதன்மையாவாள்
வற்றாத மார்புதனில் அமுதம் தந்தாள்
கண் சோர்ந்த்தே போகாமல் இமைபோல் நின்றாள்
சுவையான தமிழதனை நெஞ்சில் சேர்த்து
உலகமதை புரிந்துகொள்ளும் பக்குவம் தந்தாள்
சிகரமென வேண்டுமென ஆர்வம்கொண்டு
திட்டமிட்டே வாழ்வதற்கு தளமும் தந்தாள்
பருவகால வயதினிலே துணையும் வந்தது
திகட்டிடவே சுக மதனை அள்ளியும்தந்தது
சோர்வுபெற்ற காலமதில் இணையாய் நின்றது
விரலுக்குள் விறல்புதைத்து மனதையும் ஈர்த்தது
வார்த்தை இல்லை பெண்மைதனை போற்றுதற்கு
வேறுயென்ன சொல்லுண்டு மாற்றுதற்கு
பெண்ணின்றி அசையாது உலகு
அனுபவித்தே வாழ்ந்துவிட பழகு
உறவுகளின் பாலமாக பெண்ணினம்
இறுதிவரை கரம் பிடிக்கும் நல்லினம்
பெருமை போற்றி பாடுவது அழகுதான்
புரிந்து கொண்டு நடந்து விடல் தெளிவு தான் .
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்