ரேவதி அழகர்சாமி
கவிதை வரிசை எண்
# 242
மகளிர் தினம்..
பெண் மகவு பிறந்தது தெரிந்து
ஊருக்குத் தெரியாமல் கள்ளிப்பால் கொடுத்து
பிறந்த ஈரம் காயும் முன்பே
குழிக்குள் போட்டு மூடினர் பலர்..
போதும் பொண்ணு என்று பெயராம்
அடுத்து பெண் மகவு பிறக்கக்கூடாதென...
தூமைத் துணிகள் துவைத்தது ஒருகாலம்
இரத்தக் கவுச்சியின் வாடை தாங்காமல்
வயிற்றில் இருப்பதெல்லாம் வாந்தியாய் எடுத்தது...
ஆணின் இச்சைக்கு ஐந்து நிமிடம்
கர்ப்பத்தின் சுமையோ பத்து மாதங்கள்
உச்சபட்ச வலி பிள்ளைப் பேறு ஒன்றே
வலிதாங்கி பெண்ணுருப்பு கிழிக்கப்பட்டு
பிள்ளை பெற்றெடுத்தால்
பெண் பிள்ளையா என இளக்காரக் கேள்வி
கருவில் உருவாவதில் இருந்து
குழிக்குள் செல்லும் வரை
பெண்ணினம் படும் பாடு சொல்லி மாளாது
எதிர்த்து கேள்வி கேட்டால் எதற்கும்
அடங்காதவள் என்ற பட்டம் வேறு...
பெண்ணே.. அடங்காதவள் என்று கூறும் வாய்தான்
ஆகா என்று புகழவும் செய்யும்
தடைகளை தாண்டக் கூடாது பெண்ணே
தள்ளி எறிந்துவிட்டு முன்னேறி வா..
யார் "நீ" என்ற முத்திரையை பதித்திடு
நாளை உணரும் இச்சமூகம் உன்னை...!!!!
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்