செ.ரஞ்சிதா லெனின்
கவிதை வரிசை எண்
# 240
கனவொன்று அரும்பிய
காலகட்டத்தில் தான்
கல்யாணம் நடந்தேறியது
அவளுக்கும் அவனுக்கும்
கனவே இலக்காக
முகை வடிவம் எய்தியபோது
அதை எட்டி விடும் முயற்சியில்
மூழ்கிப் போனாள் அவள்
இலக்கு வெறியாகி
மொட்டாக பரிணமிக்கும் முன்
அவள் கருவறையில்
மலரொன்று பூத்தது
மலர்தான் குழந்தையாக
வளர்ந்து அலர்ந்ததே தவிர
அவள் கனவு 'வீ' என
வாடிப் போனது
காலம் கோபத்தையும்
வெறுப்பையும் மட்டுமல்ல
இலக்கையும் ஆறப்போட்டு
செம்மலாய் உதிர்த்து விடுகிறது
மலர்ந்து மணம் பரப்பாமல்
மண் தொட்டு உதிர்ந்து போன
கனவுகளை சுமந்து வாழும்
பெண் பூக்கள் எத்தனையோ..???
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்